என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WPL 2025"

    • மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
    • இதில் டெல்லியை வீழ்த்திய மும்பை 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    மும்பை:

    மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், கோப்பை வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் கூறியதாவது:

    நாங்கள் கணக்கிட்டு ரிஸ்க் எடுத்தோம். அது எங்களுக்கு உதவியது. 150 (149) என்பது ஒரு நல்ல ஸ்கோர் அல்ல, ஆனால் அது போன்ற போட்டிகளில் அழுத்தமான ஆட்டங்களில், அது எப்போதும் 180 ரன்கள்தான். மேலும் எங்கள் பந்து வீச்சாளர்களுக்குத்தான் பெருமை.

    பவர்பிளேயில் எங்களுக்கு திருப்புமுனைகளைத் தர முடியும் என்ற நம்பிக்கை பந்து வீச்சாளர்களுக்கு இருந்தது. இஸ்மாயில் மற்றும் சீவர் பிரண்ட் எங்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

    இன்று அணியில் அனைவரும் பந்து வீசிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் விஷயங்களை மிகவும் தெளிவுபடுத்தினோம், அவர்களின் பாத்திரங்களை தெளிவுபடுத்த ஒருவருக்கொருவர் சந்திப்புகளை நடத்தினோம்.

    வெற்றிக்கான திறவுகோல் விஷயங்களை எளிமையாக வைத்திருப்பதும், சரியான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதும் ஆகும். நாங்கள் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க விரும்பினோம், ஒரு அணியாக, நாங்கள் அதைச் செய்தோம்.

    நான் பேட் செய்ய உள்ளே சென்றபோது அது எளிதானது அல்ல. நான் அங்கேயே இருந்து ஸ்ட்ரைக் செய்துகொண்டே இருந்தால் நாட் சீவர் பிரண்ட் அங்கே இருந்தால் நான் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரை ஆதரிக்க விரும்பினேன் என தெரிவித்தார்.

    • ஆட்ட நாயகி விருதை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வென்றார்.
    • 523 ரன்கள் எடுத்த நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்றது.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

    இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த மும்பை அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

    மேலும், நாட் சிவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.

    • முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 149 ரன்கள் எடுத்தது.
    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதம் கடந்து 66 ரன்கள் எடுத்தார்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நாட் ஸ்கைவர் பிரண்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன் எடுத்தார். மற்றவர்கள் நிலைக்கவில்லை.

    மரிசான் காப் கடைசி வரை போராடினார். அவர் 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது.

    • ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் தடுமாறினர்.

    இதனால் ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடி கவுர் அரை சதம் அடித்து அசத்தினார். மந்தமாக விளையாடிய நாட் சிவெர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமெலியா கெர் 2, சஜனா 0 என அடுத்தடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கவுர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனஸ்சென், நல்லபுரெட்டி சரணி, மாரிசேன் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
    • நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹேலி மேத்யூஸ் என இருவரும் அரை சதம் கடந்தனர்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹேலி மேத்யூஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்து 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 12 பந்தில் 36 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். டேனில் கிப்சன் 34 ரன்னும், லிட்ச்பீல்டு 31 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், குஜராத் அணி 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • ஆர்சிபி அணியில் இருந்து ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் சோஃபி மோலினக்ஸ் விலகியுள்ளார்.
    • அவருக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சார்லி டீன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு முக்கிய பங்கு வகித்த ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் சோஃபி மோலினக்ஸ் முழங்கால் காயம் காரணமாக வரும் சீசனில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சார்லி டீன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • டபிள்யூ.பி.எல். தொடர் பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கி மார்ச் 1-ந் தேதி முடிகிறது.
    • தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகிறது.

    3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கி மார்ச் 1-ந் தேதி முடிகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் நடக்கிறது.

    போட்டி அட்டவணை:-

    பிப்ரவரி 14, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூரு வதோதரா

    பிப்ரவரி 15, 2025 மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - வதோதரா

    பிப்ரவரி 16, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs யுபி வாரியர்ஸ் - வதோதரா

    பிப்ரவரி 17, 2025 டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் - வதோதரா

    பிப்ரவரி 18, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் -வதோதரா

    பிப்ரவரி 19, 2025 யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் -வதோதரா

    பிப்ரவரி 21, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 22, 2025 டெல்லி கேபிடல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - பெங்களூரு

    பிப்ரவரி 23, 2025 ஓய்வு நாள்

    24, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 2025 டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 26, 2025 மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 27, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ்

    28 பிப்ரவரி 2025 டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

    1 மார்ச் 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ்

    • கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு குஜராத் அணி தள்ளப்பட்டிருந்தது.
    • கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி செயல்பட்டு வந்தார்.

    புதுடெல்லி:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

    இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்நிலையில் எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை பெத் மூனி செயல்பட்டு வந்தார்.

    இவர் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகள் என வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே தற்சமயம் பெத் மூனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆஷ்லே கார்ட்னருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து வென்றது.
    • ஆட்ட நாயகி விருது ரிச்சா கோஷுக்கு அளிக்கப்பட்டது.

    அகமதாபாத்:

    டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தில் தொடங்கியது.

    வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஷ்லி கார்ட்னர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. பெத் மூன் மற்றும் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் அரை சதமடித்தனர். பெத் மூன் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.

    ஆர்சிபி தரப்பில் ரேணுகா தாகூர் சிங் 2 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. எல்லீஸ் பெரி 34 பந்தில் 57 ரன்கள் எடுத்தார்.

    5-வது விக்கெட்டுக்கு இணைந்த ரிச்சா கோஷ், கனிகா அவுஜா ஜோடி அதிரடியாக விளையாடியது. ரிச்சா கோஷ் 27 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 64 ரன்கள் குவித்தார். கனிகா 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது ரிச்சா கோஷுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய மும்பை அணி 19.1 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அடுத்து ஆடிய டெல்லி அணி கடைசி பந்தில் 2 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த மும்பை 164 ரன்களில் ஆல் அவுட்டானது. நாட் சீவர் பிரண்ட் 80 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 22 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டெல்லி சார்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 18 பந்தில் 43 ரன்கள் குவித்தார். நிக்கி பிரசாத் 35 ரன்னும், சாரா பிரைஸ் 10 பந்தில் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது.

    இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    • முதலில் ஆடிய உ.பி. வாரிர்யஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.

    கேப்டன் தீப்தி சர்மா 39 ரன்னும், உமா சேத்ரி 24 ரன்னும் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டும், டாடின், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உ.பி. வாரியர்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார்.

    ஹர்லீன் தியோல், டாடின் ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிபெற வைத்தது.

    இறுதியில், குஜராத் அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்லீன் தியோல் 34 ரன்னும், டாடின் 33 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • 19.3 ஓவர்கள் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    வதோதரா:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க வீராங்கனைகளான மெக் லானிங் 17 ரன்களிலும், ஷபாலி வர்மா ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறிது நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அவரும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    19.3 ஓவர்கள் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்க உள்ளது.

    இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அருந்ததி ரெட்டி மற்றும் ஷிகா பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    ×