என் மலர்
நீங்கள் தேடியது "WPL"
- பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் மாணவியை பாராட்டினார்.
- இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தில் இந்திய வீராங்கனைகள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் கிராமத்தில் ஒரு சிறுமி கிரிக்கெட்டில் பொளந்துகட்டும் வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் பள்ளி மாணவி ஒருவர் ஒரு மைதானத்தில் தன் வயது சக சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அபாரமான பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை அடித்து அசத்தியுள்ளார்.
இந்த வீடியோவில் வைரலாகும் அந்த சிறுமியின் பெயர் முமல் மெஹர். இவருக்கு 14 வயதுதான் ஆகிறது. இவரது அதிரடியான பேட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் பகிர்ந்துள்ளார்.
மாணவியின் பேட்டிங்கை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் மாணவியை பாராட்டினார்.
Kal hi toh auction hua.. aur aaj match bhi shuru? Kya baat hai. Really enjoyed your batting. ???#CricketTwitter #WPL @wplt20
— Sachin Tendulkar (@sachin_rt) February 14, 2023
(Via Whatsapp) pic.twitter.com/pxWcj1I6t6
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள ஷெர்புரா கனாசர் பகுதியைச் சேர்ந்தவர் முமல் மெஹர். இது ஒரு சிறிய கிராமம். அவருக்கு கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும். வெறும் 34 வினாடிகள் பேட்டிங் செய்து அனைத்து தரப்பு மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.
மூமல் கிராமத்தில் உள்ள தனது வயது சிறுவர்களுடன் தினமும் பள்ளியிலிருந்து திரும்பியதும் கிரிக்கெட் விளையாடுவார். மூமல் மெஹர் எட்டாம் வகுப்பு மாணவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பேட்டிங் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிரும் போது அது வைரலாகி வருகிறது.
முமல் மெஹர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.
- ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் ஆர்சிபி அணி அறிவித்தது.
- ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் அறிவித்தது.
சாயர் நியூசிலாந்து பெண்களின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் மகளிர் உலகக் கோப்பை வென்ற அணியில் உதவி பயிற்சியாளராக இருந்தார்.
இந்நிலையில் தொடக்கப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆலோசராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கலாம். 36 வயதான மிர்சா, ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரும் அவரது கூட்டாளியான ரோஹன் போபண்ணாவும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், சோஃபி டிவைன், டேன் வான் நீகெர்க் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ், தொடக்க ஏலத்தில் நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்குகிறது.
- தொடக்க ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- போட்டிக்கான தொடக்க விழா மாலை 6.25 மணிக்கு தொடங்கும்.
மும்பை:
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.
இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன.
ஐ.பி.எல். போன்று ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீராங்கனைகள் ஆடும் லெவனில் இடம் பெற முடியும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான தொடக்க ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. டாஸ் இரவு 7.30 மணிக்கு போட்டப்படும். இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான தொடக்க விழா மாலை 6.25 மணிக்கு தொடங்கும். தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடக்கிறது. இப்போதைக்கு இந்த போட்டியை காண பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
+3
- மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை 5 அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்தனர்.
- பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் உள்ளிட்டோரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன
மும்பை:
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இன்று மாலை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமான துவக்க விழா நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் பிரீமியர் லீக் குறித்து மந்த்ரா பேடி அறிமுக உரையாற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் மற்றும் பஞ்சாபி பாடகர் ஏ.பி. தில்லான் ஆகியோரின் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் மூத்த நிர்வாகிகள் மேடையில் ஏறி, அனைவரையும் வரவேற்றனர். போட்டியில் பங்குபெறும் ஐந்து அணிகளின் கேப்டன்களையும் மேடைக்கு அழைத்தனர். அவர்கள் மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை அறிமுகம் செய்தனர்.

துவக்க விழா முடிந்ததும் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பெர்த் மூனே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.
- குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை:
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த சீசனின் துவக்க ஆட்டம் நவி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்களும், நாட் ஷிவர் பிரன்ட் 23 ரன்களும், அமெலியா கெர் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் அடித்தனர்.
குஜராத் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார். ஜார்ஜியா, தனுஜா, ஆஷ்லெய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 207 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன்கள் குவித்தார்.
மும்பை:
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ்
பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. எந்த வீராங்கனையும் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை. 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 23 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி திணறியது.
அந்த அணியின் தயாளன் ஹேமலதா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய மோனிகா படேலும் இரட்டை இலக்கை எட்டினார்.
இறுதியில், குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. ஹேமலதா 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் சார்பில் சைகா இஷாக் 4 விக்கெட்டும், நட் சிவர் பிரண்ட், அமீலியா கெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முத்திரை பதித்து 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டியை இலவசமாக காணலாம்.
- இத்தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி தொடங்கிய இத்தொடர் வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான போட்டியை பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள் உள்பட அனைவரும் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் அதிகாரபூர்வ டுவிட்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஏற்கனவே, மகளிர் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளையும் பெண்கள், சிறுமிகள் இலவசமாக பார்க்கலாம் என பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
- உ.பி.வாரியர்ஸ் அணியில் அதிரடியாக ஆடிய மெக்ராத் 57 ரன்னிலும், ஹாரிஸ் 72 ரன்னிலும் அவுட் ஆகினர்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலாவது ஆட்டத்தில் குஜராத் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய கார்ட்னர் 39 பந்தில் 60 ரன்னும், ஹேமலதா 33 பந்தில் 57 ரன்னும் விளாசினர்.
இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. அணியின் துவக்க வீராங்கனைகள் விரைவில் அவுட் ஆகினர். தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினர். மெக்ராத் 57 ரன்னிலும், ஹாரிஸ் 72 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் உ.பி.வாரியர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. தற்போது 3வது அணியாக உ.பி.வாரியர்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
- ஆண்கள் ஐபிஎல் முதல் சீசனின் இறுதி போட்டியில் நடந்தது போலவே தற்போது மகளிர் பிரீமியர் லீக்கிலும் நடந்துள்ளது.
- ஐபிஎல் தொடரின் முதல் சீசசின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நாளையுடன் முடிவடைகிறது. பரபரப்பாக சென்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அன்று ஆண்கள் ஐபிஎல் முதல் சீசனின் இறுதி போட்டியில் நடந்தது போலவே தற்போது மகளிர் பிரீமியர் லீக்கிலும் நடந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் சீசசின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி கடைசிப் பந்து வரை சென்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை வென்று கோப்பையை வென்றது.
இதே போன்று மகளிர் பிரீமியர் லீக்கில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
ஆண்கள் ஐபிஎல் முதல் சீசனை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலிய அணியின் மெக் லேனிங் தலைமையிலான அணி வெற்றி பெறுமா? அல்லது இந்திய கேப்டன் கவுர் தலைமையிலான அணி முடிவை மாற்றி அமைக்குமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
- நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியானது.
- மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கும் மகளிர் கிரிக்கெட் லீக் தொடரில் பாலிவுட் திரை நட்சித்திரம் ஷாருக் கான் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் துவக்க நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.
நாளை (பிப்ரவரி 23) மாலை 6.30 மணிக்கு இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பெங்களூருவில் உள்ள எம்.ஏ. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.

ஷாருக் கான் மட்டுமின்றி ஷாஹித் கபூர், கார்திக் ஆர்யன், வருண் தவான், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பிரபலங்களும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதி போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. மகளிர் பிரீமியர் லீக் தொடர் நாளை துவங்கி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
- குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
மும்பை சார்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
4 விக்கெட் வீழ்த்திய அமெலியா கெர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
- முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- டெல்லி அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டும், மேரிஜான் காப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்வேதா ஷிவ்ராட் 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 14.3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, அபார வெற்றிபெற்றது. ஷிபாலி வர்மா 64 ரன்னும், மேக் லேனிங் 51 ரன்னும் குவித்தனர்.
சிறப்பாக பந்துவீசிய டெல்லி அணியின் மேரிஜான் காப் ஆட்ட நாயகி விருது பெற்றார்.