search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yam"

    • கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மரவள்ளி கிழங்கில் நீர்ச்சத்து குறைந்து காணப்படுகிறது.
    • விலை கட்டுப்படியாகாமல், சிறு ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டு விட்டன. எனவே தற்போது தேவை குறைந்துவிட்டதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், மணியனூர், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில், பெரியசோளி பாளையம், ஆனங்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் ஜவ்வரிசி ஆலைக்குச் செல்லும் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று ரூ.15 ஆயிரத்துக்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2,000 வரை குறைந்து, ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    இதேபோல், கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை குறைந்து, ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    இது குறித்து கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், கடந்த வருடம் மரவள்ளி கிழங்கு பயிர்கள் நோய் தாக்குதலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

    அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மரவள்ளி கிழங்கில் நீர்ச்சத்து குறைந்து காணப்படுகிறது.

    கடந்த வாரம் வரை, அதிக விலைக்கு மரவள்ளி கிழங்கு விற்கப்பட்டது. விலை கட்டுப்படியாகாமல், சிறு ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டு விட்டன. எனவே தற்போது தேவை குறைந்துவிட்டதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • மர வள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிகி ழங்கு பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ஒரு டன் மர வள்ளிக்கிழங்கை ரூ 15 ஆயி ரத்திற்கு வாங்கி செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபா ளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிரா மணி, பெருங்கு றிச்சி, ஆனங்கூர்,பெரிய சோளிபா ளையம், சின்ன சோளி பாளையம், சுள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வபரமத்திவேலூர் பகுதியில்

    வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

    ட்டார பகுதிகளில் நூற்றுக்க ணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு உள்ளது.

    இப்பகுதிகளில் விளை யும் மரவள்ளி கிழங்குகளை வியா பாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச் சத்திரம், மின்னாம்பள்ளி, மல வேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் செயல்பட்டு வரும் சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலை களுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலை களில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்ய வும் வியாபாரிகள் அதிக அள வில் பெரிய அளவி லான மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர்.

    மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளிக்கி ழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதேபோல் ஜவ்வரிசி விலை உயரும் போதும், வீழ்ச்சி அடையும் போதும் அதன் விலைக்கு ஏற்ப சேகோ சர்வ் மூலம் மரவள்ளிக்கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்கின்ற னர். அதேபோல் சில்லறை வியா பாரிகள் மரவள்ளி கிழங்குகளை வாங்கி ஊர் பகுதிகளுக்கு கொண்டு சென்று கிராமங்களில் கிலோ கணக்கில் மர வள்ளிக்கி ழங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    மரவள்ளி கிழங்குகளை வாங்கிய பொதுமக்கள் மர வள்ளிக் கிழங்கில் உள்ள தோலை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு போட்டு வேக வைத்து தாழித்து சாப்பிடுகின்ற னர்.சிலர் முழுக்கிழங்கை உப்பு போட்டு வேக வைத்து சாப்பிடு கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் மரவள்ளிகிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று டன் ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனை யானது. தற்போது மில் அதிபர்கள் மர வள்ளிக்கிழங்கை டன் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரத்திற்கு வாங்கி செல்கின்றனர் அதே போல் சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மர வள்ளிக்கிழங்கை ரூ 15 ஆயி ரத்திற்கு வாங்கி செல்கின்றனர்.

    மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ள தாலும், ஜவ்வரிசி விலை உயர்வு அடைந்துள்ள தாலும் மரவள்ளி கிழங்கின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். மர வள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிகி ழங்கு பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலைவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து, ரூ.11ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று, கடந்த வாரம் டன் ஒன்று ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1500 வரை உயர்வடைந்து, ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். 

    • மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மல வேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புகின்றனர்.
    • ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, மோகனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மரவள்ளிகிழங்கின் ‌விலை டன் ஒன்றுக்கு ரூ. 500 வரை‌ உயர்வு அடைந்துள்ள தால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கடந்த வாரம் டன் ஒன்று ரூ.9ஆயிரத்து 500 விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது.  ‌மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ள தால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, மோகனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மரவள்ளிகிழங்கின் ‌விலை டன் ஒன்றுக்கு ரூ. 500 வரை‌ உயர்வு அடைந்துள்ள தால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, குப்பி ரிக்கா பாளையம், மணியனூர்,பெருங்குறிச்சி, சுள்ளிப்பாளையம், ஜமீன் இளம்பிள்ளை ,குறும்பல மகாதேவி கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில்,தி. கவுண்டம்பாளையம் ,திடு மல், குன்னமலை, பெரிய மருதூர், சின்ன மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளிகிழங்கு பயிரிடப்பட்டுள்ளனர். 

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிகிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை ,சின்னசேலம், மல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் செயல்பட்டு வரும் கிழங்குஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    அதேபோல் சில்லறை வியாபாரிகள் மரவள்ளி கிழங்குகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர் . வாங்கிய மரவள்ளிக்கிழங்கை பொது மக்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள தோலை அகற்றி விட்டு சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து பின்னர் தாழித்து சாப்பிடுகின்றனர். சிலர் மரவள்ளிக் கிழங்கில் உள்ள தோலை அகற்றி விட்டு பெரிய ,பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு வேக வைத்து சாப்பிடுகின்றனர்.கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் கேரளா வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள்  மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதேபோல் சேக்கோ சர்வ் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து ரூ.9ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது.

    அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கடந்த வாரம் டன் ஒன்று ரூ.9ஆயிரத்து 500 விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது.  ‌மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ள தால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கை பயிரிட்டுள்ளனர்.
    • அதன்படி கடந்த மாதம் மரவள்ளி கிழங்கு டன் ரூ.8000-க்கு விற்பனையானது. தற்போது கடந்த சில நாட்க ளாக தொடர்ந்து மழை பெய்வதால் மரவள்ளி கிழங்கு வெட்டும் பணி பாதிக்கப்பட்டு, இந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.7000-க்கு விற்பனையானது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்த மங்கலம், பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, கல்குறிச்சி, வெள்ளாளப்பட்டி, புதுசத்தி ரம், திருமலைபட்டி, எஸ்.உடுப்பம், சிங்களாந்தபுரம், கொல்லிமலை, கார வல்லி, கண்டாங்கி முத்துக்காப்பட்டி, பள்ளம்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கை பயிரிட்டுள்ளனர்.

    குறிப்பாக முள்ளுவாடி, தாய்லாந்து 226, வெள்ளை, வருஷ வெள்ளை, பர்மா, குங்கும ரோஸ் உள்பட பல்வேறு ரகங்களில் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். புது சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, பேளுக்கு றிச்சி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், மலை வேப்பங்குட்டை உட்பட பல பகுதிகளில் இயங்கி வரும் ஜவ்வரிசி ஆலைகளுக்கும் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

    ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கி ழங்கில் உள்ள மாவு சத்துகள் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து

    விவசாயிகளிடம் கொள்மு தல் செய்கின்றனர். அதன்படி கடந்த மாதம் மரவள்ளி கிழங்கு டன் ரூ.8000-க்கு விற்பனையானது. தற்போது கடந்த சில நாட்க ளாக தொடர்ந்து மழை பெய்வதால் மரவள்ளி கிழங்கு வெட்டும் பணி பாதிக்கப்பட்டு, இந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.7000-க்கு விற்பனையானது. விலை சரிந்ததால் மர வள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கின் ‌விலை டன் ஒன்றுக்கு ரூ. 1000 வரை‌ உயர்வு அடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கின் ‌விலை டன் ஒன்றுக்கு ரூ. 1000 வரை‌ உயர்வு அடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப் படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரை உயர்வடைந்து ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது.

    அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.8 ஆயிரத்து 500 விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரை உயர்வடைந்து ரூ.9 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. ‌மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×