என் மலர்
நீங்கள் தேடியது "Yashika"
- வினய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சில நொடிகள்’.
- இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சில நொடிகள்'. மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ஜி, "என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் 'திரெளபதி'. அவர் இல்லை என்றால் 'திரெளபதி' இல்லை. இந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான 'ருத்ரதாண்டவ'-ம் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் 'பகாசூரன்' செய்தேன். நானும் ரிச்சரட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும்.

சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், என்ன சாருக்கு கல்யாணமா? என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் என புரிந்தது. ரிச்சார்ட் சாரை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி. 24-ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்று பேசினார்.
- தற்பொழுது செல்வம் மாதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிரற்கு அறிமுகமாகினார் யாஷிகா ஆனந்த். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.
பின் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமீபத்தில் வெளிவந்த டபுள் டக்கர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்பொழுது செல்வம் மாதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரஜின், ஜார்ஜ் மர்யன், முத்து குமார், பாலாஜி, லொல்லுசபா மனோகர் மற்றும் பல இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. தாய்மை மற்றும் பெண்மையை மையமாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் 7 நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது
- தற்போது கோவிலில் மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருச்சி:
சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் சமீபத்தில் 7 நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தற்போது கோவிலில் மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு, 8 மணிக்கு நடிகர் அஜித்குமார், சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் பரவியது. அதையடுத்து, ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோவில் பின் வாசலில் அஜித்குமாரை காண ஆவலுடன் திரண்டனர்.
தகவலறிந்த சமயபுரம் காவல் துறையினர் கூடுதல் போலீசாருடன் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தினர்.
ஆனால், இரவு, 9 மணி வரை நடிகர் அஜித்குமார் கோவிலுக்கு வரவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆனால் அந்த நேரத்தில் 'பிக்பாஸ்' புகழ், பிரபல திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் கோவிலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார்.
அஜித்குமார் வருவார் என காத்திருந்த ரசிகர்கள், யாஷிகாவை பார்த்து சற்று ஆறுதல் அடைந்தனர். மேலும் அவருடன் செல்பி எடுப்பதற்கு முண்டியடித்தனர். சு
மார் ஒரு மணி நேரமாக அவரை எங்கும் நகர விடாமல் சூழ்ந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




