என் மலர்
நீங்கள் தேடியது "YogiBabu"
- தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.
- பணம் வாங்கிகொண்டு நடிக்க மறுப்பதாக பட அதிபர் சங்கத்தில் யோகிபாபு மீது தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் புகார் அளித்துள்ளார்.
'தாதா' என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் யோகிபாபு, நிதின் சத்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக காயத்ரி மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கி உள்ளார். தாதா படத்தில் நான் கதாநாயகன் இல்லை என்று யோகிபாபு சமீபத்தில் மறுப்பு வெளியிட்டார்.

யோகிபாபு
இதுகுறித்து தாதா படத்தின் தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் பட விழாவில் பேசும்போது, ''யோகிபாபுவுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன். அந்த நன்றிகூட இல்லாமல் நடந்துகொள்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபு 4 சீனில் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன். அதுவே 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய்விடுவாரா? தாதா படத்தை வாங்காதீர்கள் என்று பலருக்கு போன் செய்து தடுக்கிறார். எனக்கு இன்னொரு படம் நடித்து தருவதாக பணம் வாங்கி கொண்டு நடிக்கவும் முன்வரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. எனக்கு படம் நடித்துக் கொடுக்காதவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். விரைவில் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.
- சினிமாப்பட விநியோகஸ்தர் மதுராஜ் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
- இவரது ஊழியர்கள் இரண்டு பேரை மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் மதுராஜ். சினிமாப்பட விநியோகஸ்தர். விருகம்பாக்கம் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். போரூர் பகுதியை சேர்ந்த கோபி, பென்சீர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதையடுத்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்த "ஷூ" என்கிற சினிமா படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவும், சேட்டிலைட் உரிமம் ஆகியவற்றை ரூ.1கோடியே 10 லட்சத்துக்கு பேசி ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து மீதமுள்ள தொகையை 2 தவணைகளாக 90 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக மலேசியாவைச் சேர்ந்த பட தயாரிப்பாளரிடம் மதுராஜ் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இதனிடையே மதுராஜ் தனது மனைவியின் பிரசவத்திற்காக சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டதாக தெரிகிறது இதனால் அவர் சொன்னபடி தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மதுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

ஷூ
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மதுராஜ் அலுவலகத்திற்குள் புகுந்த 13 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்த ஊழியர்கள் கோபி, பென்சீர் ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து கத்தி முனையில் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். தாம்பரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவர்கள் ஏ.டி.எம் கார்டு மற்றும் செல்போன்களையும் பறித்துக் கொண்டனர்.
பின்னர் அவர்களை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு மிரட்டல் விடுத்து தப்பி சென்றுவிட்டனர். மேலும் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இதுபற்றி அறிந்த சினிமா வினியோகஸ்தர் மதுராஜ் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் கவுதமன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கடத்தல் தொடர்பாக தாம்பரம் அருகே பதுங்கி இருந்த நாகராஜ், வினோத் குமார், சொக்கலிங்கம், பிரசாந்த் ஆகிய 4 பேரை இன்று அதிகாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகராஜ், வினோத் குமார் இருவரும் வக்கீல்கள் என்பதும் சொக்கலிங்கம் கல்லூரி மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- யோகி பாபு தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்.
- இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில், "வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும், வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விழாவில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும்,
— Subramanian.Ma (@Subramanian_ma) December 27, 2022
வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்...
◦ pic.twitter.com/lzcyMXg8HD
- தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு
- விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. சமீபத்தி விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

மிஸ் மேகி
தற்போது இவர் இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார்.

மிஸ் மேகி
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மிஸ் மேகி' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. ஆங்கிலோ இந்தியன் பாட்டி கெட்டப்பில் வித்தியாசமான லுக்கில் யோகி பாபு இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் சன்னிதானம் பிஓ.
- இப்படத்தை சபரிமலையில் கிளாப் அடித்து விக்னேஷ் சிவன் துவங்கி வைத்துள்ளார்.
யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் சன்னிதானம் பிஓ. ராஜீவ் வைத்யா இயக்கும் இப்படத்தை சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

சன்னிதானம் பிஓ
இப்படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் கிளாப்பை அடித்து துவங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவரான அட்வகேட் அனந்தகோபன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விக்னேஷ் சிவன் - சன்னிதானம் பிஓ
சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் பூஜை மகர ஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- 'தோனி என்டர்டெயின்மெண்ட்' சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தமிழ் படத்தை தயாரிக்கவுள்ளார்.
- இப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married)
தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை, மோஷன் போஸ்டர் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவானா - ஹரிஷ் கல்யாண்
மேலும் இப்படத்திற்கு லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.
- அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். யோகிபாபுவை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் யோகி பாபு கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, ஸ்ரீ தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த வினாயகர் சன்னதி, ஸ்ரீ பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ நாகராஜர் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்ய வந்த செய்தி அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவி, அவரை காண ரசிகர்கள் திரண்டனர். யோகிபாபுவை முற்றுகையிட்டு அவருடன் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்பியும் எடுத்து கொண்டனர்.
- இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'லக்கி மேன்'.
- இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொம்மை நாயகி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யோகிபாபு
தற்போது இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'லக்கி மேன்'. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

லக்கி மேன் போஸ்டர்
உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 'லக்கி மேன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
- இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'காசேதான் கடவுளடா'.
- இப்படத்தில் நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

காசேதான் கடவுளடா
இந்நிலையில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், சென்னை தி.நகரை சேர்ந்த ராஜ் மோகன் என்பவர் தன்னை சந்தித்து 'காசேதான் கடவுளடா' படத்தை எடுப்பதற்காக ரூ. 1 கோடியை 75 லட்சம் கடன் பெற்றதாகவும் படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார்.
இந்த ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால் தனக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படும் என்பதால் பணத்தை திருப்பி கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

காசேதான் கடவுளடா
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ராஜ் மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தொகை கொடுப்பட்டிருக்கிறது. மீதி தொகை கொடுக்கும் வரைக்கும் இந்த படம் வெளியிடப்படாது என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்திரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி ராஜ் மோகன் தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான யோகிபாபு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.
- அங்கு அவர் தாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் புதிய படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் யோகிபாபு திடீரென திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். அவர் கோவிலில் உள்ள மூலவர், சுவாமி சண்முகர் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.

நடிகர் யோகி பாபுவை கண்டதும் ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர். கோவில் சண்முக விலாஸ் மண்டபம் முதல் விருந்தினர் மாளிகை வரையிலும் நடிகர் யோகிபாபு செல்லும் வரை அவரை பின்தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இடையில் கோவில் வளாகத்தில் நின்ற திருநங்கைகளிடத்திலும், யாசகம் பெறுபவர்களிடமும் அவர் ஆசிர்வாதம் பெற்றார்.
- யோகிபாபு தற்போது யானை முகத்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படத்தின் ரிலீஸ் காரணம் இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது யானை முகத்தான் என்ற படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். ரஜிஷா மிதிலா இயக்கத்தில் உருவாகி உள்ள யானை முகத்தான் படத்தில் ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. யானை முகத்தான் படம் தமிழ் புத்தாண்டையொட்டி நாளை (14-ந்தேதி) தமிழகம் முழுவதும் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

யானை முகத்தான்
இந்நிலையில் யானை முகத்தான் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகாது என்றும் அதை தள்ளி வைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ''எந்த காரணமும் இல்லாமல் நாங்கள் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து இருக்கிறோம்'' என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் ௨௧ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளார். 'புரொடக்ஷன் 5' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ருக்மினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை இன்று காலை மலேசியாவில் உள்ள கோவிலில் நடைபெற்றுள்ளது. இதனை இயக்குனர் ஆறுமுக குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
With the blessings of the almighty, I have now begun work on my next film. Featuring the one and only #MakkalSelvan @VijaySethuOffl in the lead, music by @justin_tunes. The pooja was held at a temple in #Ipoh in Malaysia this Need all your bestwish @iYogiBabu @rukminitweets pic.twitter.com/u100X8oUDm
— Arumugakumar (@Aaru_Dir) May 19, 2023