search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman death"

    • திவ்யா அலிப்பிரியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்றார்.
    • திவ்யாவின் பெற்றோர்கள் பின்னால் நடந்து வந்தனர். திவ்யா மட்டும் படிக்கட்டுகளில் வேகமாக ஏறி சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கோரண்டாவை சேர்ந்தவர் திவ்யா (வயது 18). இவர் இன்டர்மீடியட் முடித்து உள்ளார்.

    நேற்று ஏழுமலையானை தரிசிக்க தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தனர். திவ்யா அலிப்பிரியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்றார்.

    திவ்யாவின் பெற்றோர்கள் பின்னால் நடந்து வந்தனர். திவ்யா மட்டும் படிக்கட்டுகளில் வேகமாக ஏறி சென்றார். காளி கோபுரம் அருகே வந்தபோது திவ்யா தனது பையில் இருந்த குளிர்பானத்தை எடுத்து குடித்தார்.

    அப்போது திவ்யா மயங்கி விழுந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் அலறியடித்துக் கொண்டு வந்து திவ்யாவுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் திவ்யா சில நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திவ்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

    • சசிகலாவிற்கு தனது குழந்தைகளின் நினைவு வந்தது. அவர்களின் எதிர்காலம் பற்றி நினைத்து கவலை அடைந்து வந்தார்.
    • சம்பவத்தன்று அவர் தனது கள்ளக்காதலனிடம் குழந்தைகள் பற்றி கூறி மனவேதனை அடைந்தார்.

    கோவை:

    வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி சசிகலா (வயது 25). இவர் அங்கு காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 9 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சசிகலாவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான ஸ்ரீராகுல் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் சசிகலா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கள்ளக்காதலனுடன் கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தனர். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 2 பேரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் சசிகலாவிற்கு தனது குழந்தைகளின் நினைவு வந்தது. அவர்களின் எதிர்காலம் பற்றி நினைத்து கவலை அடைந்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது கள்ளக்காதலனிடம் குழந்தைகள் பற்றி கூறி மனவேதனை அடைந்தார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். சம்பவத்தன்று 2 பேரும் வால்பாறையில் உள்ள பூங்காவிற்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 2 பேரும் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு வந்தவர்கள் அவர்களை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சசிகலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாமல்பட்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டிய அவரை கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரு கிறார். இவரது மகள் பிரியங்கா (வயது22). இவருக்கும் ஊத்தங்கரை அடுத்துள்ள சாமல்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கார்த்திக் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நித்தீஷ் குமார் என்ற மகன் உள்ளார்.

    கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் பிரியங்காவிடம் கூடுதலாக உங்கள் வீட்டில் இருந்து நகை வாங்கி கொண்டு வரவேண்டும் என்று கார்த்திக் கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு நடந்தது. 

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரியங்கா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8-ந்தேதி அன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டியதின் பேரில் கார்த்திக் மீது வழக்குபதிவு செய்து போலீசார் கடந்த 5-ந்தேதி அன்று கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர். 
    வத்தலக்குண்டு அருகே மர்மமான முறையில் இறந்த புதுப்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே கே.உச்சப்பட்டியை சேர்ந்தவர் சரத்குமார். விவசாயி. இவருக்கும் பாண்டி மகள் ஐஸ்வர்யா(வயது19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பின் கணவன்-மனைவி உச்சபட்டியில் வசித்து வந்தனர். ஐஸ்வர்யா நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டியில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியை தொடர்பு கொண்டு தங்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என செல்போனில் பேசியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி மற்றும் அவரது மனைவி விரைந்து சென்று மகளை பார்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கணவன் வீட்டார் கூறியுள்ளனர். எங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பாண்டி விருவீடு போலீசில் புகார் அளித்தார்.

    வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் வழக்குபதிவு செய்து தலைமறைவான சரத்குமாரை தேடி வருகின்றனர்.

    ஐஸ்வர்யா உடல் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்முடிவு வந்தபிறகே கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும். திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #tamilnews
    ஒட்டன்சத்திரத்தில் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். #MysteryFever #Death
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் 15-வது வார்டு தும்மிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்ராம். பந்தல் தொழிலாளி. இவரது மனைவி காளிம்மாள்(வயது35). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

    சிகிச்சைக்குபின் வீடு திரும்பிய காளியம்மாள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவஅதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த காய்ச்சல் கண்டவர்கள் கண் எரிச்சல், வாந்தி-பேதி, மூட்டுவலி உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

    இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். தேவத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பன்றிகாய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது ஒட்டன்சத்திரம் பகுதியில் மர்மகாய்ச்சலுக்கான அறிகுறி இல்லை. இருந்தபோதும் அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றனர். #MysteryFever #Death


    பண்ருட்டி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்து கடலூர் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பீட்டர். இவருடைய மகன் மகிமைதாஸ் (வயது 27). தொழிலாளி. இவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகே வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்த ஜோசப் மகள் சத்தியமேரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

    திருமணத்தின் போது சத்தியமேரி பெற்றோர் வரதட்சணையாக மகிமைதாசுக்கு 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். இருப்பினும் மகிமைதாசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால், அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்வதாக கூறி மனைவியிடம் மகிமைதாஸ் ரூ.1 லட்சம் கேட்டார். அவரும் தன்னுடைய பெற்றோரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி கொடுத்தார். ஆனால் அவர் வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடாமல், அந்த பணத்தையும் குடித்து செலவு செய்து வந்ததாக தெரிகிறது.

    இது பற்றி சம்பவத்தன்று சத்தியமேரி மகிமைதாசிடம் கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகிமைதாஸ் சத்தியமேரியை தாக்கினார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சத்தியமேரி சற்று நேரத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் அவரது தாய் ஆரோக்கியமேரி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த சத்தியமேரி உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் இது பற்றி ஆரோக்கியமேரி தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் சத்தியமேரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்தும் கடலூர் சப்-கலெக்டர் சரயூ மேல் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    தக்கலை அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலியானதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மருதவிளை பகுதிக்கு நேரில் சென்று அவர் எந்த மாதிரியான காய்ச்சலால் இறந்தார்? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள பறைக்கோடு மருதவிளையைச் சேர்ந்தவர் ஜஸ்டஸ். இவர் வெளிநாட்டில் கேட்டரிங் பணி புரிந்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெபஸ்லின் ஜெனிஷா (வயது 29). இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    ஜெபஸ்லின் ஜெனிஷா திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்திருந்த அவரது கணவர் ஜஸ்டஸ், முதலில் இங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தார். ஆனால் காய்ச்சல் குணமாகாததால் ஜெனிஷாவை அவர் திருவனந்தபுரம் அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    அவர் எந்த மாதிரியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்? என்பது தெரியவில்லை. அவரது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததாலேயே அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஜெனிஷா இறந்தது பற்றி குமரி மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மருதவிளை பகுதிக்கு நேரில் சென்று ஜெனிஷா எந்த மாதிரியான காய்ச்சலால் இறந்தார்? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் வேறு யாரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது பற்றியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


    தர்மபுரி அருகே திருமணம் ஆன 1 வருடத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவதிப்பட்டு வந்த இளம்பெண் மரணமடைந்தார்.
    கொண்டலாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம், மொரப்பூர், சென்னாம்பட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி மீனா (வயது 22). இவர்களுக்கு திருமணம் நடந்து 1 வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருவரும் சேலம் உடையாப்பட்டி அருகே தங்கியிருந்து கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 6-ந்தேதி அன்று மாலை மீனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    உடனே மீனா அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். 

    திருமணம் நடந்து 1 வருடங்களே ஆவதால் சேலம் தெற்கு உதவி கமிஷனர் கணேசன் மற்றும் உதவி கலெக்டர் குமரேசன் ஆகியோர் இளம்பெண் மீனா சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செந்துறை: 

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் இளம்வைதி (வயது 32).இவரது மனைவி கனிமொழி (27) . இவர்கள் காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். நித்தீஸ் (6) தீபக் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.  இளம்வைதி சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மாதத்திற்கு இருமுறை ஊருக்கு வந்து செல்வார். நேற்று வீட்டிற்கு வந்த அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கனிமொழி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். கனிமொழியின் தந்தை கண்ணையன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் கனிமொழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கனிமொழி தற்கொலை செய்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சுற்றுலாவுக்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பென்னாகரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், கீழ அம்பிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி சோபனா (25). இவர்களது உறவினர்கள் 17 கொண்ட குழுவினர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு புறப்பட்டு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த வேனை லட்சுமணன் என்பவர் ஓட்டினார்.

    ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த அவர்கள் பல்வேறு இடங்களில் சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் ஒகேனக்கலில் இருந்து புறப்பட்டு மேட்டூர் அணையை சுற்றி பார்க்க சென்றனர்.

    அப்போது தருமபுரி மாவட்டம், பென்னாகரம்- மேச்சேரி செல்லும் சாலை சின்னம்பள்ளி அருகே உள்ள வளைவு பாதையில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கட்டுபாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சோபனா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உறவினர்களான 16 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


    உடனே அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பலியான சோபனா உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

    ×