என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "young woman lived"
கோவை:
கோவை புலியகுளம் சந்தியாகு வீதியை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மனைவி பாக்கியமேரி (வயது 81). இவர்களுக்கு 2 மகள்கள். ஒரு மகள் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். மற்றொரு மகள் செல்வி (35) பெற்றோருடன் வசித்து வருகிறார்.
தேவசகாயம் ஏற்கனவே இறந்து விட்டார். செல்விக்கு மனநல பாதிப்பு இருந்தது. இதனால் அவரை கவனித்துக்கொண்டு பாக்கியமேரி இருந்தார். இந்நிலையில் நேற்று இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது மூதாட்டி பாக்கியமேரி இறந்து 2 நாட்கள் ஆனது தெரியவந்தது. இது குறித்து ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாய் இறந்த 2 நாட்கள் ஆகியும் அது தெரியாமல் அதே வீட்டில் மகள் 2 நாட்கள் இருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.