என் மலர்
நீங்கள் தேடியது "Youngsters"
- போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.
- பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருப்பூர் :
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சிஅளிக்கப்படுகிறது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மீன்வளத்துறை அமைச்சர் 12.11.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிக்களுக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ண ப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை/துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிநாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, 31.10.2022 பிற்பகல் 5 மணிக்குள் ஈரோடு , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் 7வது தளம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638011 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவே அல்லது நேரடியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி / துணை/இணை இயக்குநர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன.
- மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருப்பூர் :
தமிழகத்தில் கிராமப்புறங்களில் மாணவா்கள் இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆா்வத்தை ஏற்படுத்தவும் கடந்த 2006ஆம் ஆண்டுதி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
இந்த விளையாட்டு சாதனங்கள் ஊராட்சி நிா்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மைதானங்கள் பராமரிக்கப்படவில்லை.
பின்னா் கடந்த 2020ம் ஆண்டில் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கிராமம்தோறும் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.
தற்போது, அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதா் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் விளையாட்டு பயிற்சி உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டன. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது, விளையாட்டில் சாதிக்க நினைப்பவா்களுக்கு கிராமங்களில் எவ்வித வசதியும் இல்லை. எனவே கிராமப்புற மைதானங்களை பராமரித்து உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். இதற்கு சிறப்புக் குழு அமைத்து மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். கிராமம்வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இளைஞா்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
- பூத் கமிட்டியில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும்.
திருப்பூர் :
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளைகளில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். பூத் கமிட்டியில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும். இளைஞர்களை பூத் கமிட்டியில் உறுப்பினர்களாக சேருங்கள். பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்த வீதியில் குடியிருப்பவராகவும், அவருக்கு அந்த வீதியில் உள்ள அனைவரும் நன்கு தெரிந்திருப்பது அவசியம். எதிர்காலத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான் கட்சியை வழிநடத்துபவர்களாக இருப்பார்கள். பூத் கமிட்டி அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து 3 மாத காலத்தில் முடிக்க வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை நானே வந்து வழங்குவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், வக்கீல் அணி செயலாளர் முருகேசன், பகுதி செயலாளர்கள் கருணாகரன், ஹரிகரசுதன், திலகர் நகர் சுப்பு, கே.பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- வாலிபர்கள் கோவை - சிவகாசி அரசு பஸ்ஸில் ஏறி வந்து கொண்டிருந்தார்.
- வாலிபர்க்குள் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அறிவொளிப்புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்தி(வயது 27) .இவர் நேற்று கோவை சென்று விட்டு பல்லடம் வருவதற்காக கோவை - சிவகாசி அரசு பஸ்ஸில் ஏறி வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த இரண்டு வாலிபர்கள், இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அருகே வரும்போது இவர்களுக்குள் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் அந்த இரண்டு வாலிபர்களும் கார்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட, பஸ்சிற்குள் அவர் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ் ஓட்டுநர் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு பஸ்சை நிறுத்தினார். காயம் பட்ட கார்த்தியை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் மதுரையைச் சேர்ந்த ராஜேஷ்(19) , சேது (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று மறைந்தனர்.
- பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்
பல்லடம் :
பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(62) இவரது மனைவி ஜானகி(56) கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சம்பவத்தன்று மாலை ஸ்கூட்டரில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது, இவர்களது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அருகில் வந்து மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து நின்ற தம்பதியினர். பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த வாலிபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை- பருவாய் ரோட்டில், பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றனர் அவர்களை துரத்தி பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் சாமி கவுண்டம்பாளையத்தில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையில், கோவை புலியகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அப்பாஸ் (23) திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது மகன் (திலீப் ராஜ் 30,)ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மங்களம் சாலையில் செல்போனில் பேசியப்படி பயணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- இருசக்கர வாகனத்தையும்,செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மங்களம் சாலையில் செல்போனில் பேசியப்படி பயணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை சிறிது தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த விஜய்,பிரவீன் என்பதும் அவர்கள் ஓட்டி வந்த வாகனம் கர்நாடகா எண் கொண்ட திருட்டு வாகனம் என தெரிய வந்தது.அதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தையும்,செல்போனையும் பறிமுதல் செய்து விஜய்,பிரவீன் ஆகிய இருவரையும் திருப்பூர் மத்திய காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு வேறு கொள்ளையில் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செல்போனை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்ற இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 3பேர் திடீரென வழிமறித்து பணப்பையை பறித்து சென்றனர்.
- சென்னை நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.
திருப்பூர் :
திருப்பூர் பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சர்புதீன்(44) பனியன் வேஸ்ட் வியாபாரி. கடந்த மாதம் 18ந் தேதி மதியம் திருப்பூர் குமார் நகர், முருங்கப்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் இருந்து ரூ. 17.50 லட்சத்தை வாங்கி வருமாறு தன்னிடம் வேலை பார்க்கும் சாகுல் ஹமீது என்பவரை அனுப்பினார். பணத்தை வாங்கி கொண்டு திரும்பிய போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த முக கவசம் அணிந்திருந்த 3பேர் திடீரென வழிமறித்து பணப்பையை பறித்து சென்றனர். புகாரின் பேரில் வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்தனர். அப்போது சாகுல் ஹமீது பணத்தை வாங்கிய பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் மோகன்குமாருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழிப்பறி வழக்கில் கே.வி.ஆர்., நகரை சேர்ந்த மோகன்குமார்(20) உட்பட, 7 பேரை போலீசார் கைது செய்து 9 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வழக்கில் தொடர்புடைய முக்கியமான நபர்களை தேடி சென்னைக்கு தனிப்படையினர் சென்று முகாமிட்டு தேடி வந்தனர். அதில் 2பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் ராஜ்குமார், (25) அருண்பாண்டி, (24) என்பதும், வழிப்பறி செய்த பணத்தின் மூலம் சென்னை நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 2பேரையும் கைது செய்து, 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள நபரும் சிக்கும்பட்சத்தில் இந்த சம்பவம் குறித்து முழுமையாக தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- வீட்டை மாற்று உடையில் போலீசார் ரோந்து சுற்றி நோட்டமிட்டனர்.
- 2 அழகிகளை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரம் நல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட முத்தணம்பாளையம் அருகே ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த வீட்டை மாற்று உடையில் போலீசார் ரோந்து சுற்றி நோட்டமிட்டனர். அப்போது அந்த வீட்டிற்கு ஆண்கள் அடிக்கடி வந்து சென்றனர்.
இதனையடுத்து வீட்டிற்குள் அதிரடியாக போலீசார் உள்ளே நுழைந்தனர். அங்கு தனி அறையில் இருந்த 24 வயது மதிக்கத்தக்க 2 அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண் டனர். விசாரணையில் முத்தணம்பாளையம் பகுதி சேர்ந்த சக்திவேல் (34), அருண் (28) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். 2 அழகிகளை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
- விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமான பிரச்சினை இருந்துள்ளது.
- அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கண்டியன்கோவில் ஊராட்சி தங்காய்புதூரைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மனைவி சுலோச்சனா (வயது 64). இவரது மகள் கோமதி (38). பேத்தி ஜீவிகா (12 ). சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கதிர்வேல்( 25 ) மற்றும் முத்துசாமி என்பவரது மகன் விஜயகுமார் (28) ஆகிய 2 பேரும் வந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்கனவே விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமான பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில் சுலோச்சனா வீட்டிற்கு வந்த 2 பேரும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சுலோச்சனா அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கதிர்வேல் மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.
- போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த சேவூா் அருகே சாலையோரம் நின்றிருந்த மூதாட்டியிடம் கவரிங் சங்கலி பறித்த இருவரை போலீசார் கைது செய்தனா். சேவூா் அருகே உள்ள தாசராபாளையம் நடுத்தோட்டத்தைச் சோ்ந்தவா் சிகாமணி (64). இவா் தாசராபாளையம் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா். பார்த்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.
தகவல் கிடைத்தது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேவூர் போலீசார் இரண்டு வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள்
கோவை சித்தாபுதூா் சரோஜினி நகரைச் சோ்ந்த சின்னமருது (24), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (27) என்பது தெரியவந்தது. மேலும் மூதாட்டியிடம் பறித்தது கவரிங் நகை என்பதும் தெரிய வந்தது. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- பாலசுப்பிரமணியம் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
- தர்ம அடி கொடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவினாசி :
திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 55). இவர் அவினாசி கோவை புறவழிச்சாலை தேவராயம்பாளையம் பிரிவு அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டனர். அப்போது பாலசுப்பிரமணியன் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார் .அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து அந்த நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மதுரை திருவிடாகம் பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன்(20), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ராமன் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவினாசி :
அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மதுவிலக்கு போலீசார் பல்லடம் அருள்புரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை அருகே சந்தேகப்படும் படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜெகபந்து தாஸ் (வயது34) என்பதும் அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.