search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth knife attack"

    திண்டுக்கல் அருகே கொத்தனாரை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகில் உள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துராஜ் மகன் சரத்குமார் (வயது25). மினி வேன் டிரைவராக உள்ளார். இவரது வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் சம்பவத்தன்று தீ வைத்து சென்றனர்.

    இவரது வீட்டிற்கு எதிரில் பழனியப்பன் மகன் மணிராஜன் (28) என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் வேலை பார்க்கும் இவர்தான் தனது வைக்கோல் போருக்கு தீ வைத்ததாக சரத்குமார் சந்தேகப்பட்டார். இதனால் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் அவரிடம் தகராறு செய்து வந்தார்.

    இதனால் நேற்று மணிராஜனை அரிவாளால் சரத்குமார் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வடமதுரை அருகே குடிநீர் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புத்தூர் ஆதி திராவிடர் காலனியில் இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இவர்களுக்குள் அடிக்கடி மோதல் எற்பட்டு வந்ததால் ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து வந்தனர்.

    நேற்று மாலை இங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த போது மீண்டும் அவர்களுக்கள் மோதல் ஏற்பட்டது.

    இதனால் கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களால் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் முருகன் உள்பட 2 பேருக்கு அரிவாள வெட்டு விழுந்தது. மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து வடமதுரை போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் கத்தி முனையில் வாலிபரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை ஐராவதநல்லூர் கண்மாய் அருகே தூத்துக்குடியை சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது 27) நடந்து சென்றார். அப்போது 3 பேர் திடீரென வழி மறித்தனர். அவர்கள், பிரவீன்ராஜ் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ. 7 ஆயிரத்து 400 மற்றும் ஆப்பிள் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் பிரவீன்ராஜ் புகார் செய்தார். அதில், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் பணம் பறித்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சண்முககுரு (20), ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த சிவகுமார் (20), அஜீத்குமார் (20) ஆகியோர்தான் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர் அருகே வாலிபரை அரிவாள் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (31). விவசாயி. இன்று காலை அவர் புன்னப்பாக்கம் அடுத்த ஈக்காடு கண்டிகை அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டு வந்தனர். உடனே மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் இருந்த சுரேசை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுரேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டிப்பட்டி அருகே குடிபோதையில் வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (வயது19). என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சரியாக செல்லாததால் அவரை தந்தை செல்வராஜ் கண்டித்தார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் சந்தோசுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் செல்வராஜ் தனது மகன் சந்தோசை கல்லூரியில் இருந்து நிறுத்தி விட்டு கோவைக்கு வேலைக்கு அனுப்பி விட்டார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சந்தோஷ் தனது ஊருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஆனந்தராஜ் குடிபோதையில் சந்தோசை பிளேடு கத்தியால் உடலில் பல இடங்களில் குத்தினார்.

    படுகாயம் அடைந்த சந்தோஷ் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.

    ஜாம்பஜாரில் சமையல்காரருக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலை முக்தருன்னிசா தெருவை சேர்ந்தவர் லைகான் (வயது 18). சமையல் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் ஜாம்பஜார் அமீர்மஹால் எதிரில் உள்ள செல்ல பிள்ளையார் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் அங்கு வந்தனர். அவர்கள் உருட்டுக்கட்டையால் லைகானை தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் அவரது தலை, இடது கை, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது.

    அவரை நண்பர்கள் ஆட்டோ மூலம் கொண்டு சென்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் லைகானை அரிவாளால் வெட்டிய 4 பேர் அடையாளம் தெரிந்தது. அவர்கள் ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த சுயபு, அபீஸ், சிவா, அஜித் என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் வாலிபர் கையை துண்டித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் வாலிபர் ஒருவர் பலத்த காயத்துடன் அலறி துடித்தார். அவரது இடது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. வலது கையும் பலத்த காயத்துடன் தொங்கியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் அவர் பெருமாள்பட்டை சேர்ந்த பால் தினகரன் (வயது 22) என்பது தெரியவந்தது. மர்ம கும்பல் தன்னை வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டதாக அவர் கூறியுள்ளார்.

    முன்னுக்குப் பின் முரணாக அவர் தகவல் தெரிவித்து வருகிறார். பால் தினகரனின் இடது கையை காணவில்லை. அதனை போலீசார் தேடி வருகிறார்கள். முன் விரோதத்தில் அவர் வெட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரியநாயக்கன்பாளையம் அருகே ரூ. 3 ஆயிரம் பண தகராறில் வாலிபரை குத்தி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். #arrestc

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்ம நாயக்கன் பாளையம் போர்வெல் தோட்டம் பகுதியில் பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியை சேர்ந்த அகிலேஷ் குமார் (26), அகிலேஷ் தாஸ் (26) ஆகியோர் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

    இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்து வந்தது. அகிலேஷ் குமாருக்கு அகிலேஷ் தாஸ் ரூ. 3 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.

    நேற்று இரவு அதனை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். அவர்கள் சமாதானம் அடையவில்லை.இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அகிலேஷ் தாஸ் கத்தியை எடுத்து அகிலேஷ் குமாரை சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அகிலேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அகிலேஷ்தாசை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மயிலாடுதுறை அருகே கொத்தனாருக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு அருகே உள்ள குரங்குபுத்தூர் காவிரிகரை தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் வடிவேல்(30). கொத்தனார்.திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று மதியம் குரங்குபுத்தூர் கடைத்தெருவுக்கு வந்த வடிவேலை அதே பகுதியை சேர்ந்த மைனர் என்ற சந்திரசேகரன். இவரது அண்ணன் முருகேசன், அமிர்தலிங்கம் மகன் தமிழ்செல்வன், ராதகிருஷ்ணன் மகன் பிரபு ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டினர்.

    அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வருவதை கண்டு தப்பி சென்றனர். வடிவேல் சந்திரசேகரிடம் கொத்தனாராக வேலை செய்துள்ளார். வன்னிய சங்கத்திலும் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் கட்சியை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். இதனால் வடிவேல்மீது ஆத்திரம் கொண்ட சந்திரசேகர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. வடிவேலை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவ மனையிலும், மேல்சிகிச்சைக்காக திருவாருர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும், சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கும்பகோணம் அருகே நண்பனுடன் தகராறு செய்த வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் சோலையப்பன் தெருவை சேர்ந்த ராஜி மகன் சரவணன் (வயது 21). இவர் பெருமாண்டி பகுதியில் நடந்து சென்றபோது பெருமாண்டியை சேர்ந்த மணிசங்கர் (26) என்பவர் மீது மோதி விட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மணிசங்கரும், சரவணனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிசங்கரின் நண்பரான சுந்தர் (24) என்பவர் கத்தியால் சரவணனை குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் காயமடைந்த சரவணன் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

    தேனி அருகே முன் விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் பின்புறம் வசித்து வருபவர் செல்லபாண்டி. இவரது மகன் செல்வம் (வயது 25). இவருக்கும் வீரபாண்டி ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த கணேசன் (24) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசனை அரிவாளால் செல்வம் வெட்டினார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் முல்லையாற்று பகுதியில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது கணேசன், செல்லக்காமு, குட்டக்காமு ஆகியோர் அவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயமடைந்த செல்வம் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டிய கும்பலை தேடி வருகின்றனர்.

    ×