என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Youth Leader"
- ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்பட்டார்.
- தலைவர் புத்தேந்தல் குரு.பிரகலாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மாதவன் நன்றி தெரிவித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் போகலூரை சேர்ந்த மாதவன் தமிழ்நாடு யாதவ மகா சபையின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனமிக்கப் பட்டுள்ளார். அவர் மாநில பொதுச் செயலாளர் வேலு மனோகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இளைஞரணி தலைவராக நியமனம் செய்து சமுதாய பணியாற்ற வாய்ப்பளித்த மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் வேலு மனோகரன், பரிந்துரை செய்த மாவட்ட தலைவர் புத்தேந்தல் குரு.பிரகலாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மாதவன் நன்றி தெரிவித்தார்.
- தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் நடிகர் விஜய் ஒப்புதலுடன் நியமனம் செய்து வருகின்றனர்.
- என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பூர் :
தமிழக முழுவதும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக மாவட்டத்தை தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் மற்றும் அணி வாரியாக தலைவர்கள், நிர்வாகிகளை நடிகர் விஜய் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்து வருகிறார்.
அதன்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் பரிந்துரையின் பேரில் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக ஆர்.சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இளைஞர் அணி செயலாளராக கோல்டு பாண்டி, துணைத்தலைவராக தினேஷ், துணைச் செயலாளராக அப்பாஸ், பொருளாளராக சண்முகம், இணைச் செயலாளர்களாக வசந்த், எம்.எஸ்.கே., மாவட்ட நிர்வாகி மகேந்திரன், கவுரவ ஆலோசகர் லோகு, மாவட்ட பிரதிநிதி சிவா, ஆலோசகர்கள் மோகன், தீபக், ஹரி, அஸ்வின் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.சுகுமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எனது 23 வருட மக்கள் இயக்க பணியை மதித்து என்னை திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனம் செய்த தளபதி விஜய் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கும் பரிந்துரை செய்த தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மக்கள் இயக்கத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பதவி வழங்கிய தலைமைக்கு என்றென்றும் கட்டுப்பட்டு இயக்கத்தை வலுப்படுத்த உண்மையாக உழைப்பேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்