என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth Surrender"

    • தென்காசி எல்.ஆர்.சாமி நாயுடு பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் விவசாயி
    • வீட்டு அருகே வந்தபோது அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார்

    நெல்லை:

    தென்காசி எல்.ஆர்.சாமி நாயுடு பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 41). விவசாயி. இவருக்கும் இவரது உறவினரான வெங்கடேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று செந்தில் முருகன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வீட்டு அருகே வந்தபோது அவரை வெங்கடேஷ் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார். இது தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை தேடி வந்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இன்று நெல்லை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    ×