search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YSRCP"

    • சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
    • மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் மறைந்துவிட்டன.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி ஏற்றார்.

    இந்த நிலையில் குண்டூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என கட்சி அலுவலக இடிப்பு குறித்து ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அடக்குமுறையை கையில் எடுத்துள்ளார். கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்தை சர்வாதிகாரி போல் புல்டோஸர் மூலம் இடித்துள்ளார். சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டன. மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் மறைந்துவிட்டன.

    சந்திரபாபு நாயுடுவின் ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற செய்தியை இந்த சம்பவத்தின் மூலம் தந்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள், வன்முறைகளுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அடிபணியாது. பின்வாங்கவும் செய்யாது. மக்களுக்காக கடுமையாக போராடுவோம்.

    இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை காங்கிரஸ் கட்சி அயராது போராடும்.
    • சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் சந்திரபாபு பச்சோந்தி போல் நிறம் மாறியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் அண்ணன் என்று கூட பார்க்காமல் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    திருப்பதியில் நடந்த பிரசாரத்தில் ஷர்மிளா பேசியதாவது:-

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை காங்கிரஸ் கட்சி அயராது போராடும். இந்திரம்மா அபயஹஸ்தம்' என்ற பெயரில், ஒவ்வொரு ஏழை வீட்டுக்கும், பெண்களின் கணக்கில் மாதம் ரூ .5 ஆயிரம் வழங்கப்படும். வறுமையை ஒழிக்கவும், ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும் கரம் கொடுக்கப் போகிறோம்.

    ஜெகன்மோகன் ரெட்டி 3 தலைநகரங்கள் நாடகம் ஆடினார். ஜெகன்மோகன் ரெட்டி ஒரு தலை நகரையாவது வளர்த்திருக்கிறாரா? நமக்கு வெட்கமாக இல்லையா?


    சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் சந்திரபாபு பச்சோந்தி போல் நிறம் மாறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெகனண்ணா அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

    அந்தஸ்துக்காக ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வேன் என்று கூறிய அவர், முதல்-மந்திரி ஆன பிறகு கொடுத்த வார்த்தையை காப்பாற்றவில்லை. ஏன் இதுவரை ஒரு எம்.பி கூட ராஜினாமா செய்யவில்லை.

    ஜெகன்மோகன் ரெட்டி பா.ஜ.க.வை ஏன் எதிர்க்கவில்லை? இப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் புலி, டெல்லி போனால் பூனையாக மாறிவிடுகிறார்.

    ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., சீட் இல்லாவிட்டாலும், நம் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வைச் சுற்றியே வருகின்றன. ஆந்திர அரசியலில் முக்கோண காதல் கதை நடக்கிறது".

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் உள்ள எம்.பி.க்கள் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. வெமிரட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் நெல்லூர் எம்.பி. அட்லா பிரபாகர் ரெட்டியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் ஆளூர் தொகுதியில் போட்டியிட்டு தொழிலாளர் துறை அமைச்சராக உள்ள கும்மனூர் ஜெயராம் 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு கர்னூல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கட்சி தலைமை தெரிவித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கும்மனூர் ஜெயராம் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

    ஜெயராம் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியில் இருந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் மாற்றுக் கட்சிக்கு தாவுவதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம் பெயர்ந்தனர்.
    • சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக-ஷர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரியாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் சேர்ந்து கட்சியின் மாநில தலைவரானார்.

    அதன் பிறகு பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம் பெயர்ந்தனர்.

    அவர்களில் முதல் ஆளாக மங்களகிரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஆலா ராமகிருஷ்ணன் முதலில் சேர்ந்தார்.


    முதல் மந்திரி ஜெகன் மோகனுக்கு நெருக்கமாக இருந்த ராமகிருஷ்ணா தனிப்பட்ட அதிருப்தியால், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார்.

    ஷர்மிளாவுடன் இணைந்து செயல்பட இருந்த ராமகிருஷ்ணா ஒரு மாதத்திலேயே முதல் மந்திரி ஜெகன் மோகனை சந்தித்து ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக-ஷர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    • மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு எதிராக தெலுங்குதேசம், ஜனசக்தி கட்சிகள் களம் இறங்கும் நிலையில் கிண்டல்.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பவன்கல்யாண் ஜனசேனா கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கின்றன. மக்களவை தேர்தல் உடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

    இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    நேற்று இரவு அவர் அமராவதி மாவட்டத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் சைக்கிள். அதை நாம் வீட்டின் நடு அறையில் கொண்டு வைக்க முடியாது. வீட்டுக்கு வெளியில்தான் வைக்க வேண்டும்.

    ஜனசக்தியின் தேர்தல் சின்னம் டீ டம்ளர். பயன்படுத்திய டம்ளர் சமையறையின் சிங்க்-ல் (sink) வைக்க வேண்டும். ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் சின்னம் மின் விசிறி. அது எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அதுபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை வீட்டுக்குள்ளே வைத்துக்கொள்ள மக்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். தெலுங்குதேசம், ஜனசேனாவிற்கு எதிராக வாக்களிப்பார்கள்" என்று கிண்டல் செய்தார்.

    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார்.
    புதுடெல்லி:

    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதா? அல்லது பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜெகன்மோகன் ரெட்டி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என்றும், டெல்லியில் உள்ள ஆந்திர பவன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு சால்வை போர்த்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 
    ஆந்திரப்பிரதேசம் மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    அமராவதி:

    ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது.



    கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஆந்திர மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என தெரிகிறது.
    பா.ஜ.க.வுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. #ChandrababuNaidu
    ஐதராபாத் :

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க தலைவர்களுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளார் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சத்தியநாரயணா இன்று விமர்சனம் செய்துள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறிய பிறகும் பா.ஜ.க தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு, ரகசிய கூட்டணி வைத்துள்ளார். அதன் காரணமாகவே மத்திய அரசின் பல மக்கள் விரோத திட்டங்களை விமர்சனம் செய்யாமல் அவர் மௌனம் காத்துவருகிறார்.

    சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மந்திரிகள் அனைவரும் எதிர்க்கட்சி தலைவர் ஜகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பதிலேயே கவனமாக உள்ளனர். ஆனால், நான்கு வருடம் மத்திய அரசில் அங்கம் வகித்துவிட்டு தற்போது கூட்டணியை விட்டு விலகிய அவர்கள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மாநில நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க அரசின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்காமல் மௌனமாக உள்ளது ஏன் ? இதுகுறித்து சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu
    ×