search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yusuf Pathan"

    • யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார்.
    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டன.

    பஹரம்புர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிறுத்தப்பட்டார். இவர் பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராகவும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ளார். இவரை எதிர்த்து மம்தா பானர்ஜி முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதானை நிறுத்தினார்.

    இதில் யூசுப் பதான் வெற்றிபெறும் நிலையில் உள்ளார். யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார். யூசுப் பதான் 85 ஆயிரத்து 766 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் வெற்றி அருகில் உள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மம்தாவுக்கும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் இடையில் வார்த்தை போர் நடைபெற்றது. மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார்.

    தன்னை கடுமையாக விமர்சித்த மூத்த அரசியல்வாதியை ஒரு கிரிக்கெட் வீரரை நிறுத்தி மம்தா பானர்ஜி தோற்கடித்துள்ளார் என கூறப்படுகிறது.

    • பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார்.
    • எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் பாராளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

    தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்காக நான் பணியாற்றுகிறேன். எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

    2007-ம் ஆண்டு உலக கோப்பைக்கு உற்சாகமாக இருந்ததைப் போல தற்போதும் உற்சாகமாக இருக்கிறேன்.

    குஜராத் எனது ஜென்ம பூமி மற்றும் மேற்கு வங்காளம் எனது கர்ம பூமி.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். ஆனால் காலம் மாறுகிறது, மாற்றம் நல்லதுக்காகவே நடக்கும் என தெரிவித்தார்.

    • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க துவங்கி உள்ளன.
    • பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க துவங்கி உள்ளன.

    அந்த வரிசையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. இதோடு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

     


    மேற்கு வங்காள மாநிலத்தின் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசப் பதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதே தொகுதியில் ஐந்து முறை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த முறையும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடலாம் என்ற நிலையில், பிரபலம் ஒருவரை வேட்பாளராக களமிறங்க செய்யும் முடிவில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கிரிக்கெட் வீரர் யூசப் பதானை இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.

    பஹரம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "இது போன்ற முடிவுகளை ஒருதலைப்பட்சமாக எடுப்பதோடு பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதையே காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இந்தியா கூட்டணியில் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை எதிர்க்கவே காங்கிரஸ் கட்சி நினைத்து வந்துள்ளது," என்று தெரிவித்தார்.

    • தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார்.
    • அக்‌ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார்.

    மும்பை:

    இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

    இந்த போட்டியில் 94 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் அக்ஷர் படேல் 6-வது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

    சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார். மறுமுணையில் அக்ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார். இதனால் தான் இந்திய அணி 162 என்ற சவால் கொடுக்கும் ஸ்கோரை எட்ட முடிந்தது.


    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் 6-வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் பட்டியலில் டோனி - யூசப் பதான் ஆகியோர் 2-வது இடத்தில் இருந்தனர். இவர்கள் 2009- ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்போது அக்ஷர் - ஹூடா ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் அதனை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    இந்த பட்டியலில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஜோடி முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6-வது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இன்றும் இந்திய அணியின் சிறந்த பேட்டிங் ஜோடியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • ஜனவரியில் தொடங்கும் இந்த லீக் போட்டிகளில் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
    • துபாயில் நடக்க உள்ள சர்வதேச டி 20 லீக் போட்டிகளில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய யூசப் பதானும் ஓய்வு அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர்கள் இருவரும் துபாயில் நடக்க உள்ள சர்வதேச டி 20 லீக் போட்டிகளில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

    ஜனவரியில் தொடங்கும் இந்த லீக் போட்டிகளில் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. 

    ×