search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zahir Hussain"

    • அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் உசேனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

    பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இதுகுறித்து ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இன்று தெரிவித்திருந்தார்.

    இந்தியரான ஜாகிர் உசேன், அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் ஹுசைனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.

    மேலும், கடந்த ஒரு வாரமாக ஜாகிர் உசேன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    சாகிர் உடல்நிலை குறித்து அவரது நண்பர் ராகேஷ் கூறுகையில், "அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் அவரது நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குற்றச்சாட்டை மறுத்த ஜாகிர் உசேன், பரதநாட்டிய ஆசிரியை அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கைகோர்த்து என்னை போன்ற சிறுபான்மையினர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறேன் என கூறி இருந்தார்.
    • இதையடுத்து இந்த குற்றச்சாட்டு மீது விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.

    சென்னை:

    பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக செயல்பட்டு வருகிறார்.

    இவர், கடந்த மார்ச் மாதம் கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது அங்கே இருந்த பரதநாட்டிய ஆசிரியையிடம் அத்து மீறியதாக புகார் எழுந்தது. தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்வானின் பேத்தியான அந்த ஆசிரியை, பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள அரசு இசைப் பள்ளியில், 23 ஆண்டுகள் பரத நாட்டிய ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    ஆசிரியையின் புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த மார்ச் 31-ம் தேதி சென்னையில் உள்ள கலை – பண்பாட்டு துறை இயக்குநரகத்திற்கு நேரில் சென்று ஆசிரியை புகார் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர், கரூர் மாவட்ட ஆட்சியர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து, தப்பு செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்றும் புகாரில் அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டை மறுத்த ஜாகிர் உசேன், பரதநாட்டிய ஆசிரியை அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கைகோர்த்து என்னை போன்ற சிறுபான்மையினர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன். விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்திவந்த நிலையில், ஜாகிர் உசேன் மீதான பாலியல் புகார்கள் அனைத்தும் புனையப்பட்டது என தெரியவந்துள்ளது.

    ×