search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ZIMvPAK"

    4-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 155-ல் சுருட்டி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ZIMvPAK #FakharZaman
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக் 113 ரன்களும், பகர் சமான் 210 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ஓவரில் 304 ரன்கள் குவித்தது.

    பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 155 ரன்னில் சுருண்டது.



    இந்த அணியின் டொனால்டு டிரிபானோ அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார். சிகும்புரா 37 ரன்களும், பீட்டர் மூர் 20 ரன்களும், மசகட்சா 22 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சாரபில் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 4-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #ZIMvPAK #FakharZaman #ShadabKhan #ImamulHaq
    இந்தியாவை கதிகலங்க வைத்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பகர் சமான் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். #ZIMvPAK #FakharZaman
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த இருவரும் சதம் அடித்தனர். இமாம்-உல்-ஹல் 112 பந்திலும், பகர் சமான் 92 பந்திலும் சதம் அடித்தனர். இந்த ஜோடி 42 ஓவரில் 304 ரன்னாக இருக்கும்போது பிரிந்தது. இமாம்-உல்-ஹக் 122 பந்தில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆசிப் அலி களம் இறங்கினார். இவரும் அதிரடியாக விளையாடினார். இவர் 22 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். பகர் சமான் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இதில் 148 பந்தில் 24 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும். இவர் 156 பந்தில் 210 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.



    பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் இரட்டை சதத்தை தொட்டவர் என்ற சாதனையை பகர் சமான் படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்து, இந்தியாவை தோற்கடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜிம்பாப்வேயை 67 ரன்னில் சுருட்டி 9.5 ஓவரிலேயே சேஸிங் செய்து தொடரை 3-0 எனக் கைப்பற்றியது பாகிஸ்தான். #ZIMvPAK #FaheemAshraf
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் 3-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினார்கள். குறிப்பாக பஹீம் அஷ்ரப் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இவர் 8.1 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்ற ஜிம்பாப்வே 25.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 67 ரன்னில் சுருண்டது.



    பின்னர் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. 9.5 ஓவரிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 69 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
    முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 107-ல் சுருட்டி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ZIMvPAK
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் புலவாயோவில் இன்று தொடங்கியது. ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 128 ரன்களும், பகர் சமான் 60 ரன்களும், ஆசிப் அலி 46 ரன்களும் அடித்தனர்.

    பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சிபாபா 20 ரன்னும், முசாகண்டா 21 ரன்னும், விக்கெட் கீப்பர் முர்ரே அவுட்டாகாமல் 32 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஜிம்பாப்வே அணி 35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது.



    இனால் 201 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் 4 விக்கெட்டும், உஸ்மான் கான், பஹீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் 16-ந்தேதி நடக்கிறது.
    இமாம்-உல்-ஹக்கின் அபார சதத்தால் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #ZIMvPAK
    ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிவடைந்த நிலையில், ஜிம்பாப்வே- பாகிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் அசாம் 20 ரன்னும், சோயிப் மாலிக் 22 ரன்னும், ஆஷிப் அலி 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    ஆனால் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 134 பந்தில் 128 ரன்கள் சேர்த்தார். இவரது சதத்தால் பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. 5 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள இமாம்-உல்-ஹக்கின் 2-வது சதம் இதுவாகும். இதனால் ஜிம்பாப்வே அணிக்கு 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.

    309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே விளையாடி வருகிறது.
    ஹராரேயில் இருந்து புலவாயோ செல்ல இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயணம் பணப் பிரச்சனையால் தள்ளிப் போகியுள்ளது. #ZIMvPAK
    ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 1-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த தொடருக்குப்பின் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற வெள்ளிகிழமை (13-ந்தேதி) தொடங்குகிறது. இந்த ஐந்து போட்டிகளும் புலுவாயோ-வில நடக்கிறது.

    இதற்காக பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஹராரேயில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. ஆனால், பணப் பிரச்சனை காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வீரர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்கு முன்பணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.



    இதனால் நட்சத்திர ஓட்டல் பாகிஸ்தான் வீரர்களுக்கு தங்கும் அறை ஒதுக்கவில்லை. ஆகவே பாகிஸ்தான் வீரர்கள் புலவாயோ புறப்பட்டுச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஒருவேளை பணப் பிரச்சனை தீர்ந்துவிட்டால், பாகிஸ்தான் அணி நாளை காலை புலவாயோ சென்று, அதன்பின் மாலையில் பயிற்சியை மேற்கொள்ளும். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 22-ந்தேதி வரை நடக்கிறது.
    ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 74 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான். #ZIMvPAK
    ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஹாராரேயில் இன்று தொடங்கியது. இன்றைய முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் பகர் சமான் 40 பந்தில் 61 ரன்களும், சோயிப் மாலிக் அவுட்டாகாமல் 24 பந்தில் 37 ரன்களும், ஆசிஃப் அலி 21 பந்தில் 41 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.



    பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. மசகட்சாவை (43) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 17.5 ஓவரில் 108 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதும் 2-வது ஆட்டம் நாளை ஹராரேயில் நடக்கிறது.
    பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக் டி20 போட்டியில் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். #ZIMvPAK #ShoaibMalik
    ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. ஜிம்பாப்வேயில் நடைபெறும் இந்த தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் சோயிப் மாலிக் 24 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 37 ரன்கள் குவித்தார். அவர் 11 ரன்களை எட்டியபோது சர்வதேச டி20 போட்டியில் 99 போட்டியில், 92 இன்னிங்சில் 2000 ரன்களை பதிவு செய்தார்.



    இதன்மூலம் 2000 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் மார்ட்டின் கப்தில், மெக்கல்லம் ஆகியோர் இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளனர்.
    ஆஸ்திரேலிய முன்னாள் வீரரின் தாமதத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பீல்டிங் பயிற்சியாளர் இல்லாமல் ஜிம்பாப்வே தொடரில் விளையாட செல்கிறது. #ZIMvPAK
    ஜிம்பாப்வேயில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி முதல் ஜூலை 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடர் முடிந்த உடன் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

    இந்த தொடரின்போது பாகிஸ்தான் அணி பீல்டிங் பயிற்சியாளர் இல்லாமல் விளையாடுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ரிக்சன் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். ஸ்காட்லாந்திற்கு எதிரான டி20 தொடருடன் இவருடைய ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது. தனது பதவியை நீட்டிக்க விரும்பாமல் தனது சொந்த நாடானா ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டார்.


    டேரன் பெர்ரி

    அவருக்குப் பதிலாக தற்போது புதிதான டேரன் பெர்ரியை பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு சொந்த வேலை இருக்கிறது. அதனால் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை வரை தன்னால் அணியில் இணைய முடியாது என்று கூறிவிட்டார். இனால் பாகிஸ்தான் அணி பீல்டிங் பயிற்சியாளர் இல்லாமல் செல்கிறது.
    ×