search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சயீம் அயூப் அதிரடி சதம்: 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது பாகிஸ்தான்
    X

    சயீம் அயூப் அதிரடி சதம்: 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது பாகிஸ்தான்

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 145 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18.2 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வென்றது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 32.3 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டியான் மையர்ஸ் 33 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 31 ரன்னும், எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், ஆகா சல்மான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் ஆட்டக்காரர் சயீம் அயூப் அதிரடியில் மிரட்டினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சயீம் அயூப் 62 பந்தில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 சமனிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சயீம் அயூப் தேர்வு செய்யப்பட்டார்.

    Next Story
    ×