என் மலர்
நீங்கள் தேடியது "அங்காளம்மன்"
- மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
- பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சேலம்:
சேலத்தில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆடு, கோழிகளை கடித்தபடி பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் மாசி அமாவாசை அன்று நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. பல 100 ஆண்டுகளாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக சேலம் டவுன் தேர்வீதி, ஜான்சன்பேட்டை, வின்சென்ட், கிச்சிப்பாளையம் நாராயண நகர் ஏரிக்கரை மற்றும் ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளங்களுடன் ஆங்காங்கே உள்ள சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, அங்காள பரமேஸ்வரி உள்பட பல்வேறு அம்மன்கள் வேடம் அணிந்து ஆடியவாறு சென்றனர். அப்போது, வழிநெடுக திரளான பக்தர்கள் நின்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி, சாமியாடியவாறு வந்தவர்களிடம் ஆடு, கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்து வேண்டிக்கொண்டனர்.
மேலும் ஆட்டுகுட்டிகளை வாங்கிய பக்தர்கள், அதை தங்கள் கழுத்து மேல் தூக்கி போட்டு ஆடியதோடு, ஆட்டின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்ததையும் காண முடிந்தது. இது ஒருபுறம் இருக்க, சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டு சுடுகாட்டை நோக்கி சென்றனர்.
மேலும், சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைக்குழியில் கிடந்த இறந்த மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆகியவற்றுடன் ஆடு, கோழிகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த காட்சிகள் சாலையில் நின்றிருந்த பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்தது. சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சியை யொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ரோஷத்துடன் சாமியாடி வந்த பக்தர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். மேலும், தீராத நோய்கள் குணமாகவும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சாமி வேடம் அணிந்திருந்தவர்கள் தாண்டி ஆக்ரோஷமாக சென்றனர்.
- அம்பிகைக்கு உரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.
- திருமணம் என பல தடைகள் அம்மனை வழிபடுவதால் விலகும்.
அங்காளம்மனை வழிபட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற, வேப்பஞ்சேலை அணிந்து, கோவிலை வலம் வருகிறார்கள். பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் இந்த வழிபாடு உண்டு. அதை இப்போது பக்தர்கள் இங்கும் பின்பற்றுகிறார்கள். ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை இங்கு வந்து பொங்கல் வைக்கிறார்கள்.
பொங்கல் பானையின் மேல் மூடியில் பச்சரிசி மாவிளக்குப் போட்டு நெய் தீபம் ஏற்றி சன்னதிக்குள் எடுத்துச் செல்வார்கள். ஆடி மாதம் முழுவதும் இந்த வைபவம் உண்டு. பால் அபிஷேகம், வஸ்திரம் சாற்றுதல், மாவிளக்கு போடுதல், நெய் தீபம் ஏற்றுதல் என்று அம்பிகைக்கு உரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.
சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பிரிந்த கணவன், மனைவி இணைய, குழந்தைப்பேறு, திருமணம் என பல தடைகள் அம்மனை வழிபடுவதால் விலகும் என்கிறார்கள். மயானக் கொள்ளை முடிந்த பிறகு சாம்பலே பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. அதை வீட்டில் கொண்டு வந்து வைத்தால் தீய சக்திகள் நெருங்காது என்று நம்புகிறார்கள் பக்தர்கள். தன்னை நம்புபவர்கள் மட்டுமல்லாமல் அல்லலில் உள்ள அன்பர்களையும் தன்னிடம் ஈர்க்கும் வல்லமை பெற்றவள் மேல்மலையனூர் அம்மன்.
மயானக் கொள்ளையில் கலந்து கொண்டால் ராகு-கேது தோஷங்கள் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது பக்தர்களிடம்.
நேர்த்தி: எலுமிச்சம்பழ மாலை, வஸ்திரம் சாற்றுதல், நெய் விளக்கு ஏற்றுதல்
இருப்பிடம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர்.
- மேல்மலையனூரில் அம்மன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி இருக்கிறார்.
- தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமாகியது.
தீமையை அழிக்க ஆக்ரோஷமாக உருவம் எடுத்தாலும், அன்னை கருணையே வடிவானவள். இமவான் மகளாக இருந்தவள் தன் கணவனைக் காப்பாற்ற அங்காளம்மனாக உருவெடுத்தார். மேல்மலையனூரில் அம்மன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி இருக்கிறார். தன் கணவனைப் பிரிந்து அவரைக் காப்பாற்ற அன்னை வந்து இங்கு குடி கொண்டதால் இங்கு கணவனைப் பிரிந்தவர்கள் வந்து அம்மனிடம் பிரார்த்தனை செய்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
தட்சன் தன் கணவனை அழைக்காமல் யாகம் செய்ததால் கோபம் அடைந்த தாட்சாயணி, அந்த யாக குண்டத்தில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டார். அந்த உருவமற்ற அம்சமே அங்காளி ஆகும். அங்காளியைத் தன் தோளில் சுமந்து ஆவேசமாக நடனமாடினார் ஈசன். அப்போது அம்பிகையின் கை துண்டாகி கீழே விழுந்தது.
அது தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமாகியது. அதில் ஒரு பகுதியே மேல்மலையனூர். அம்பிகை யாகத்தில் சாம்பலான இடம் என்பதால் இங்கு சாம்பலே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அம்பிகையின் அருட் திருவருள் கடலெனப் பரந்தது என்றாலும், தன்னை நம்பி வரும் அடியவரின் துயர் நீக்கும் தன்மையே பெரிதாகப் போற்றப்படுகிறது.
அம்பிகையின் சக்தியாலேயே இவ்வுலகம் இயங்கினாலும் அனைத்துப் பெருமைகளையும் இறைவனுக்கு அளித்து விட்டு அமைதியாகப் புன்னகை பூக்கிறாள் அம்பாள்.
- கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
- ஐந்து வகை சாப்பாடு மூட்டை கட்டி கர்ப்பிணி பெண்களை உட்கார வைத்து சடங்குகள் செய்யப்பட்டன.
உடுமலை :
ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, உடுமலைப்பேட்டை ராமசாமி நகர்- டி பகுதி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில், அம்மனுக்கு கர்ப்பவதி அலங்காரம் மிக சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஐந்து வகை சாப்பாடு மூட்டை கட்டி, (கல்கண்டு சாதம், புளி சாதம், தக்காளி சாதம் ,தேங்காய் சாதம், தயிர் சாதம் ) 5 கர்ப்பிணி பெண்களை உட்கார வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. இப்படி செய்தால் சுகப்பிரசவம் ஆகும் என்பது ஐதீகம். பாசிப்பயறு அம்மனின் கர்ப்பத்தில் வைக்கப்பட்டு இரண்டு நாள் கழித்து ,முளை வந்த பிறகு அனைவருக்கும் பிரசாதமாக பல ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
- அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் சந்தை தோப்பில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- அங்காளம்மன் கோவிலில் முதல் முறையாக தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவிலில் தங்கத்தேர் வடிவமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 கிலோ 987 கிராம் எடையில் தங்கத்தேர் வடிவமைக்கும் பணி நடைபெற்று வந்தது, இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளைதாரர்கள் உபயமாக தங்கத்தேரை கோவில் பரம்பரை அறங்காவலர் மகிபாலன் முன்னிலையில் கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து தங்கத்தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி தங்கத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா கணபதி வழிபாடு, பாலிகை பூஜை, கங்கணம் கட்டுதல், முதல் கால பூஜை, தங்கத்தேர் உற்சவர் கும்பாபிஷேகம், புதிய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை போன்றவை நடந்தன. பின்னர் காலை 10.15 மணி அளவில் தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, சுந்தரராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கந்தசாமி, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் மங்கையர்கரசி, துணை ஆணையாளர் (சரிபார்ப்பு அலுவலர்) சபர்மதி, ஆய்வாளர் கார்த்திகா, செயல் அலுவலர் மாதேஸ்வரன், பரம்பரை அறங்காவலர் மகிபாலன், கல்வடங்கம் அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை செயலாளர் ஈரோடு முத்துசாமி, பொருளாளர் தியாகராஜன், தலைவர் மோகனசுந்தரம் உபதலைவர், மனோகர செல்வம், அசோக், பாபு மற்றும் பரம்பரை பூசாரிகள், அறக்கட்டளைதாரர்கள், கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி கோஷத்துடன் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, அங்காளம்மன் கோவிலில் முதல் முறையாக தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.