search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல்"

    • ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய கான்வே 672 ரன்களை எடுத்தார்.
    • 2025 ஐபிஎல் ஏலத்தை கான்வேவை ரூ.6.25 கோடிக்கு சென்னை அணியே விலைக்கு வாங்கியது.

    ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விடுவிக்கப்பட்டார். பின்னர் ஐபிஎல் ஏலத்தை அவரை ரூ.6.25 கோடிக்கு சென்னை அணியே விலை கொடுத்து வாங்கியது.

    வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து கான்வே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், டெவான் கான்வே - கிம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஒலிவியா கான்வே என பெயர் சூட்டியுள்ளனர்

    ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய கான்வே 672 ரன்களை எடுத்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 7 ஆண்டுகளாக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்பட்டார்.
    • அவருக்கு பதிலாக இங்கிலாந்து முன்னாள் வீரரை நியமித்தது மும்பை இந்தியன்ஸ்.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் கார்ல் ஹாப்கின்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி வந்த ஃபீல்டிங் பயிற்சியாளரான ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் 2020-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை வெல்ல முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி திண்டாடி வருகிறது. அதில் கடந்த 4 சீசனில் ஒரேயொரு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் கடந்த சீசனிலேயே திடீரென குஜராத் அணியிடம் இருந்து ட்ரேட் மூலமாக ஹர்திக் பாண்ட்யா கொண்டு வரப்பட்டு கேப்டனாக்கப்பட்டார். இருந்தாலும் அந்த சீசனிலும் கடைசி இடத்தில் தான் மும்பை அணி நிறைவு செய்தது.

    இதனால் அணியில் நிறைய மாற்றங்களை அந்த அணி நிர்வாகம் செய்துள்ளது. அந்த வகையில் தலைமைப் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சரை நீக்கிய மும்பை அணி, மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனேவை நியமித்தது.

    இந்த நிலையில் தற்போது 7 ஆண்டுகளாக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்படுவடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 43 வயதாகும் இங்கிலாந்து முன்னாள் வீரரும், ஃபீல்டிங் பயிற்சியாளருமான கார்ல் ஹாப்கின்சன் ஒப்பந்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    2019 உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியுடன் பணியாற்றியவர் கார்ல் ஹாப்கின்சன். இதனால் அவரின் இணைப்பு மும்பை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.

    • ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது.
    • அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.

    18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் ஜெட்டா நகரில் அண்மையில் நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி வீரரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

    அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்கு பின் மீண்டும் அஸ்வின் சென்னை அணியில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

    இந்நிலையில், எம்.எஸ்.டோனியுடன் அஷ்வின் இருக்கும் புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "Come on Ash" izza Vibe!" என்று சி.எஸ்.கே. அணி பதிவிட்டுள்ளது.

    • இந்திய அணி வீரர்களை அணிகள் அதிக தொகை கொடுத்து வாங்கின.
    • ரிஷப் பண்ட்-க்கு சம்பளம் ரூ. 27 கோடி.

    இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பெருமளவு எதிரொலித்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களை பல்வேறு அணிகளும் அதிக தொகை கொடுத்து வாங்கின.

    அந்த வகையில், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் சமீபத்திய ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எந்த தொகைக்கு எடுக்கப்பட்டனர் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    இதுவரை நடைபெற்ற ஐபிஎல் ஏல வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். ஐபிஎல் 2025 தொடரில் விளையாட ரிஷப் பண்ட்-க்கு சம்பளம் ரூ. 27 கோடி ஆகும். இவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

    இவரைத் தொடர்ந்து ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா முறையே ரூ. 16.5 கோடி மற்றும் ரூ. 18 கோடி சம்பளம் பெற உள்ளனர். இதில் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், ஹர்திக் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

    நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ரூ. 21 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ்-க்கு ரூ. 16.35 கோடி சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரூ. 18 கோடியை பெறுகிறார். ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் முறையே ரூ. 16.30 கோடி மற்றும் ரூ. 18 கோடியை சம்பளமாக பெறவுள்ளனர்.

    அக்சர் பட்டேல் ரூ. 16.50 கோடி, குல்தீப் யாதவ் ரூ. 13.25 கோடி, யுஸ்வேந்திர சாஹல் ரூ. 18 கோடியை ஊதியமாக பெறுகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் முறையே ரூ. 18 கோடி, ரூ. 12.25 கோடியை பெறுவர்.

    • ரிஷப் பண்டை லக்னோ அணியும், கேஎல் ராகுலை டெல்லி அணியும் ஏலம் எடுத்தது.
    • சஞ்சீவ் கோயங்கா, toxic boss என்று கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்டிடம் கூறுவது போல மீம்ஸ் வெளியாகி வைரலானது.

    2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது. இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

    இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கே.எல். ராகுலை தக்க வைக்கவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை 14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

    இந்நிலையில் சஞ்சீவ் கோயங்கா ஒரு கடுமையாக நடந்து கொள்ளும் (toxic boss) முதலாளி என்று கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்டிடம் கூறுவது போல மீம்ஸ் வெளியாகி வைரலானது.

    இந்நிலையில் லக்னோ அணியின் ஊரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா எப்படிப்பட்டவர் என்பது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது:-

    பாஸ் அன்பானவர், அக்கறையுள்ளவர் மற்றும் கடினமானவர். மேலும், உங்களுக்கு அன்பு தேவைப்படும்போது அவர் உங்களுக்கு அன்பைத் தருவார். உங்களுக்கு அக்கறை தேவைப்படும்போது உங்களுக்கு அக்கறையைத் தருவார். சில திட்டுகள் தேவைப்படும்போது உங்களையும் திட்டவும் செய்வார் என ராகுல் கூறினார்.

    • ஆர்.சி.பி. அணி ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எக்ஸ் கணக்குகள் வைத்துள்ளது.
    • ஆர்.சி.பி. அணி குறித்து விராட் கோலி இந்தியில் பேசும் விடியோவை பதிவிட்டுள்ளனர்.

    ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரணடு நாட்கள் நடைபெற்றது. இதில் தக்கவைத்த வீரர்கள் தவிர்த்து 182 வீரர்கள் வீரர்கள் 639.15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

    ஆர்.சி.பி. விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை தக்கவைத்திருந்தது. ஏலத்தில் புவி, ஹேசில்வுட், நுவான் திஷாரா, லுங்கி நிகிடி ஆகிய வேகப்பந்து வீச்சாளரை எடுத்துள்ளது.

    ஆகவே இந்த வருடமும் 'ஈ சாலா கப் நமதே' மோடில் பெங்களூரு அணி களமிறங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வென்றதில்லை. ஆனால் அதிக முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை, மும்பை அணிக்கு சமமாக பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

    ஆர்.சி.பி. அணி ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எக்ஸ் கணக்குகள் வைத்துள்ள நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ரசிகர்களை கவர்வதற்காக இந்தியில் ஒரு எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ளது. அதில் ஆர்.சி.பி. அணி குறித்து விராட் கோலி இந்தியில் பேசும் விடியோவை பதிவிட்டுள்ளனர். அந்த எக்ஸ் கணக்கை தற்போது வரை 2600க்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தியில் ஆர்.சி.பி. அணி எக்ஸ் கணக்கு தொடங்கியுள்ளது கர்நாடகா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.சி.பி. அணியை கன்னட ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

    அதே சமயம் இந்தி மொழியில் ஆர்.சி.பி. எக்ஸ் கணக்காகி தொடங்கியுள்ளதை இந்தி ரசிகர்கள் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஏலத்தில் அதிகபட்ச தொகையாக பண்ட் ரூ. 27 கோடிக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் போனார்கள்.
    • ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 தொடங்கி மே 25 வரை நடக்கிறது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 தொடங்கி மே 25 வரை நடக்கிறது. இதற்கான மெகா ஏலம் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கும் அதனை தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் போனார்கள்.

    என்னதான் அதிக தொகைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை வைத்து பார்க்கும் போது ஜித்தேஷ் சர்மா முதல் இடத்தில் உள்ளார். 

    நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சுமார் 5500% சம்பள உய உயர்வு பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை ஜித்தேஷ் சர்மா படைத்துள்ளார். ஏலத்தில் ஜித்தேஷ் சர்மாவை பெங்களூரு அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது. பண்ட்டும், ஸ்ரேயாஸூம் அதிக விலைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை ஒப்பிடுகையில் அவர்களின் சம்பள உயர்வு ஜித்தேஷ் சர்மாவை விட மிகக் குறைவு (ரூ.20 லட்சம்) ஆகும்.

    • சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
    • கே.எல்.ராகுலுக்கு தகுதியான மரியாதையை கொடுப்போம் என்று டெல்லி உரிமையாளர் தெரிவித்தார்.

    2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

    இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கே.எல். ராகுலை தக்க வைக்கவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை 14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

    இதனையடுத்து கே.எல்.ராகுல் குறித்து பேசிய டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால், "கே.எல். ராகுல் ஒரு தரமான வீரர் என்று நான் நம்புகிறேன். அவரை குறிப்பிட்ட தொகைக்கு (ரூ.14 கோடி) ஏலத்தில் எடுத்தது மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க எங்களுக்கு உதவியது. கே.எல். ராகுலை எனக்கு நீண்ட காலமாக தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர்.

    அவர் அன்புடனும் மரியாதையுடனும் வளர்ந்துள்ளார். அவருக்குத் தகுதியான அன்பையும் மரியாதையையும் நான் கொடுக்கப் போகிறேன். அவர் டெல்லி அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தருவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டதை விமர்சிக்கும் தொனியில் டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
    • அவரை ஏலம் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்.

    பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய லலித் மோடி, ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லலித் மோடி, ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டார் என்பதால் ஆன்ட்ரூ ப்ளின்டாஃப்-ஐ மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடரில் மோசடி சம்பவங்கள் அரங்கேறின. அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அதை செய்தோம். அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். ஸ்ரீனிவாசனுக்கு பிளின்டாஃப் வேண்டும் என்பதால், நாங்கள் மற்றவர்களிடம் அவரை ஏலம் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அவருக்கு ஐபிஎல் பிடிக்காது அவர் இது தோல்வியை தழுவும் என்று நினைத்தார்."

    "அவர் அம்பயர்களை மாற்றத் தொடங்கினார். சிஎஸ்கே போட்டிகளின் போது அவர் சிஎஸ்கே அம்பயர்களை நியமித்தார். அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. அது நேரடியாக பிக்சிங் செய்வதை போன்றதாகும். அதை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் எனக்கு எதிராக திரும்பினார்," என்று தெரிவித்தார். 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    • சிஎஸ்கே வீரர்கள் பயணம் செய்ய ஏதுவாக etihad airways நிறுவனம் தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கிறது. இதற்கான மெக ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதன்மூலம் 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

    தமிழகத்தை மையமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயணம் செய்ய ஏதுவாக etihad airways நிறுவனம் தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த விமானத்தில் சிஎஸ்கே லோகோவுடன் மஞ்சள் கலரில் தயார் செய்யப்பட்டுள்ளது. இனி சிஎஸ்கே வீரர்கள் அடுத்த மாநிலத்திற்கு செல்ல இந்த விமானத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிஎஸ்கே அணி வீரர்கள்:-

    1. எம் எஸ் டோனி 2. ருதுராஜ் கெய்க்வாட் 3. பத்திரனா 4. சிவம் துபே 5. ஜடேஜா 6. டெவோன் கான்வே 7. ராகுல் திரிபாதி 8. ரச்சின் ரவீந்திரா 9. ரவிச்சந்திரன் அஸ்வின் 10. கலீல் அகமது 11. நூர் அகமது 12. விஜய் சங்கர் 13. சாம் கர்ரன் 14. ஷேக் ரஷீத் 15. அன்ஷுல் கம்போஜ் 16. முகேஷ் சவுத்ரி 17. தீபக் ஹூடா 18. குர்ஜப்னீத் சிங் 19. நாதன் எல்லிஸ் 20. ஜேமி ஓவர்டன் 21. கமலேஷ் நாகர்கோடி

    22. ராமகிருஷ்ண கோஷ் 23. ஷ்ரேயாஸ் கோபால் 24. வான்ஷ் பேடி 25. ஆண்ட்ரே சித்தார்த்

    • தமிழக வீரர் நடராஜனை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு எடுத்தது.
    • கடந்த ஐபிஎல் சீசன் வரை ஐதராபாத் அணியில் நடராஜன் விளையாடி வந்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கவுள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.

    முதல்நாள் ஏலத்தில் தமிழக வீரர் நடராஜனை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு எடுத்தது. கடந்த ஐபிஎல் சீசன் வரை ஐதராபாத் அணியில் நடராஜன் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், டெல்லி அணியில் இணைந்ததை குறித்து தமிழக வீரர் நடராஜன் மகிழ்ச்சி தெரிவிக்கும் வீடியோவை டெல்லி அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    • குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
    • பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடி ரூபாய்க்கு குஜராத் வாங்கியது.

    2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அந்த தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. 2023 ஐபிஎல் தொடரில் பைனல் வரை சென்று நூலிழையில் கோப்பையை தவறவிட்டு ரன்னர் அப் ஆனது.

    அறிமுகமான முதல் 2 ஐபிஎல் தொடரிலும் பைனல் வரை சென்ற குஜராத் அணி கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. முதல் 2 ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா கடந்த சீசனில் மும்பை அணிக்கு சென்றதால் குஜராத் அணியை கடந்த சீசனில் சுப்மன் கில் வழிநடத்தினார்.

    இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக விளையாட என்ற முனைப்போடு இருக்கும் குஜராத் அணி ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரஷித் கான் (ரூ. 18 கோடி), சுப்மன் கில் (ரூ. 16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ. 8.50 கோடி), ராகுல் தெவாடியா (ரூ. 4 கோடி), ஷாருக் கான் (ரூ. 4 கோடி) ஆகிய 5 வீரர்களை 51 கோடி கொடுத்து தக்க வைத்தது.

    கையில் 69 கோடியுடன் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அடுத்ததாக பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடிக்கும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவை 10.75 கோடிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை 9.50 கோடிக்கும் வாங்கியது.

    வரும் ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் உடன் இணைந்து சுப்மன் கில் களமிறங்குவார். மிடில் ஆர்டரில் விளையாட சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    ரஷித் கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ஜெரால்ட் கோட்சீ போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் குஜராத் அணியில் உள்ளனர்.

    அதனால் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கண்டிப்பாக கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    25 பேர் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி:

    1. ரஷித் கான், 2. சுப்மன் கில், 3. சாய் சுதர்சன், 4. ராகுல் தெவாடியா, 5. ஷாருக் கான், 6. ககிசோ ரபாடா, 7. ஜோஸ் பட்லர், 8. முகமது சிராஜ், 9. பிரசித் கிருஷ்ணா, 10. நிஷாந்த் சிந்து, 11. மஹிபால் லோம்ரோர், 12. குமார் குஷாக்ரா, 13. அனுஜ் ராவத், 14. மானவ் சுதார், 15. வாஷிங்டன் சுந்தர், 16. ஜெரால்ட் கோட்சீ , 17. குர்னூர் ப்ரார், `18. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், 19. சாய் கிஷோர், 20. இஷாந்த் சர்மா, 21. ஜெயந்த் யாதவ், 22. க்ளென் பிலிப்ஸ், 23. கரீம் ஜனத், 24. குல்வந்த் கெஜ்ரோலியா. 25. அர்ஷத் கான்

    ×