என் மலர்
நீங்கள் தேடியது "இகாஸ்வியாடெக்"
- கடந்த ஆண்டு செப்டம்பரில் 8 வாரங்கள் சபலென்கா முதலிடத்தில் இருந்தார்.
- ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை.
நியூயார்க்:
டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன் ஒற்றையர் தரவரிசையில் கடந்த ஓராண்டாக முதலிடத்தில் இருந்த போலந்தின் இகா ஸ்வியாடெக் (9,665 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் சீன ஓபன் மற்றும் வுஹான் ஓபன் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை அவர் தவற விட்டது தரவரிசை புள்ளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (9,706 புள்ளி) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டியில் மகுடம் சூடிய அவர் சீன ஓபனில் அரைஇறுதிவரை முன்னேறி இருந்தார்.
தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு 'நம்பர் ஒன்' இடம் கிடைத்துள்ளது. அவர் முதலிடத்தில் இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் 8 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார்.
26 வயதான சபலென்கா தனது எக்ஸ் தளத்தில், 'நம்பர் ஒன் இடம் இந்த முறை எவ்வளவு நாள் என்னிடம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்' என்று பதிவிட்டுள்ளார். அவர்கள் இடையே வெறும் 41 புள்ளி மட்டுமே வித்தியாசம் உள்ளது.
டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அடுத்த மாதம் 2-ந்தேதி ரியாத்தில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு 1,500 தரவரிசை புள்ளி கிடைக்கும். எனவே இந்த போட்டியின் முடிவு சபலென்கா, ஸ்வியாடெக் ஆகியோரில் யாரை ஆண்டின் இறுதியில் 'நம்பர் ஒன்' அரியணை அலங்கரிக்கும் என்பது தெரிய வரும்.
அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் (5,963 புள்ளி), ஜெசிகா பெகுலா 4-வது இடத்திலும், கஜகஸ்தானின் எலினா ரைபகினா 5-வது இடத்திலும் உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஜானிக் சினெர் (இத்தாலி), அல்காரஸ் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா), மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் முதல் 5 இடங்களில் தொடருகிறார்கள்.
- 28 வயதான ஜபேர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
- 2 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வியாக்டெக் ஒட்டு மொத்தத்தில் 3-வது தடவையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள ஆன்ஸ் ஜபேர் (துனிசியா) -கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதினார்கள்.
இதில் ஜபேர் 6-1 , 6-3 என்ற நேர் செட் கணக்கில் 17-ம் நிலை வீராங்கனையான கார்சியாவை எளிதில் வென்று இறுதிப்போட்டி தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 6 நிமிட நேரம் தேவைப்பட்டது.
28 வயதான ஜபேர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் அவர் இறுதிப் ஆட்டத்துக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற சாதனையை படைத்து இருந்தார். தற்போது 2-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த தோல்வியால் கார்சியாவின் முதல் இறுதிப்போட்டி கனவு கலைந்தது.
மற்றொரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகாஸ்வியாடெக் (போலந்து),-ஷபலென்கா (பெலாரஸ்) மோதினார்கள்.
6-வது வரிசையில் உள்ள ஷபலென்கா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் ஸ்வியாடெக் சுதாரித்து ஆடி தொடர்ச்சியாக 2 செட்டையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 3-6, 6-1, 6-4.
21 வயதான அவர் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முதல் தடவையாக முன்னேறி உள்ளார். 2 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வியாக்டெக் ஒட்டு மொத்தத்தில் 3-வது தடவையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார்.
ஷபலென்காவின் இறுதிப்பேரட்டி கனவு 3-வது முறையாக தகர்ந்துள்ளது. இறுதி போட்டியில் ஸ்வியாடெக்-ஆன்ஸ் ஜபேர் மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே)-கரென் கச்சனோவ் (ரஷியா), கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-பிரான் செஸ்டியாபோ (அெமரிக்கா) மோதுகிறார்கள்.