என் மலர்
நீங்கள் தேடியது "எம்எல்ஏக்கள்"
- ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 81 எம்எல்ஏ-க்களில் 56 பேர் ‘கோடீஸ்வரர்கள்’.
- இந்த ஆண்டு 71 கோடீஸ்வர எம்எல்ஏ-க்களில் 28 பேர் ஜேஎம்எம், 20 பாஜக, 14 காங்கிரஸ்.
ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் ஜேஎம்எம் பாஜகவை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 89 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களை விட இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஜார்கண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களில் 89 சதவீதம் பேர் 'கோடீஸ்வரர்கள்' என்றும், அவர்களில் காங்கிரஸின் ராமேஷ்வர் ஓரான் ரூ.42.20 கோடி மதிப்பிலான சொத்துக்களுடையவர் என்றும் தெரிய வந்துள்ளது.
ஜார்கண்ட் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெற்றி பெற்ற 81 வேட்பாளர்களில் 80 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து, 2024-ல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.எல்.ஏக்கள் 'கோடீஸ்வரர்கள்' என்பதை கண்டறிந்துள்ளது. இது 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட 20% அதிகம்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 81 எம்எல்ஏ-க்களில் 56 பேர் 'கோடீஸ்வரர்கள்' என்றும், 2014-ல் 41 பேர் என்றும் அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டு 71 கோடீஸ்வர எம்எல்ஏ-க்களில் 28 பேர் ஜேஎம்எம், 20 பாஜக, 14 காங்கிரஸ், 4 ஆர்ஜேடி, சிபிஐ (எம்எல்) லிபரேஷன் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்), ஜேடி(யு) மற்றும் ஏஜேஎஸ்யுவைச் சேர்ந்த தலா ஒருவர் எம்.எல்.ஏ.-க்கள் ஆவார்கள்.
ஜேஎம்எம் 34 சட்டமன்ற இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 4 மற்றும் சிபிஐ (எம்எல்) லிபரேஷன் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மறுபுறம், பாஜக 21 சட்டமன்ற தொகுதிகளையும், அதன் கூட்டணியான எல்ஜேபி (ராம் விலாஸ்), ஜேடி(யு) மற்றும் ஏஜேஎஸ்யு கட்சி தலா ஒரு இடத்தை பெற்றன.
வெற்றி பெற்ற வேட்பாளர்களில் காங்கிரஸ் லோஹர்டகா எம்எல்ஏ ராமேஷ்வர் ஓரான் மொத்த சொத்து மதிப்பு ரூ.42.20 கோடியுடன் அதிக பணக்காரர் ஆவார்.
பாங்கி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவின் குஷ்வாஹா சஷி பூஷன் மேத்தா, மொத்தம் ரூ.32.15 கோடி சொத்துக்களுடன் வெற்றி பெற்ற 2-வது பணக்கார வேட்பாளராகவும், கோடா தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்ஜேடியின் சஞ்சய் பிரசாத் யாதவ், ரூ.29.59 கோடி மொத்த சொத்துக்களுடன் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.