என் மலர்
நீங்கள் தேடியது "எரிச்சல்"
- உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
- பெண்கள் பெரும் மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
"DEPRESSION" நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உணர்வு, சிந்தனை மற்றும் செயலை பாதிக்கின்றது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் மற்றும் வீட்டில் அல்லது வேலையில் சரியாகச் செயல்படுவதற்கான திறனை உங்களில் இருந்து தடுக்கும்.
முதல்படி
அதிலும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் எல்லாம் இதில் பாதிக்கப்படுகின்றார்கள். இது ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பெண்கள் வாழ்நாளில் பெரும் மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு பொதுவான மனநல கோளாறு. இந்த மனநல கோளாறு தற்கொலைக்கு வழிவகுக்கும். இது பொதுவாக உங்களின் வேலை, தூக்கம், படிப்பு மற்றும் சாப்பிடும் திறனில் தலையிடுகிறது. இந்த அறிகுறிகள் குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிக்கும்.
இரண்டாம் படி
இது டிஸ்டிமியா என்றும் அழைக்கப்படுகிறது. அறிகுறிகள் கடுமையானவை அல்ல மற்றும் நீண்ட காலம் நீடிக்கும், இது பொதுவாக குறைந்தது 2 ஆண்டுகள் நீடிக்கும்.
அறிகுறிகள்
உதவியற்றதாக உணர்தல்
ஆர்வமின்மை
அதிக தூக்கமின்மை
எரிச்சல்
எடை மாற்றங்கள்
ஆற்றல் இழப்பு
பொறுப்பற்ற செயல்கள்
தலைவலி, முதுகுவலி, வயிற்று வலி
சுய வெறுப்பு
அமைதியின்மை
குறைவான சிந்தனை
அதிகம் பேசுதல்
ஆளுமை மாற்றங்கள்
நினைவக சிரமங்கள்
உடல் வலி
சோர்வு
பசியிழப்பு
உடலுறவில் ஆர்வம் இழப்பு
இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும் தான். ஆனால் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கு என்று செல்லகூடாது. எப்போது செல்ல வேண்டும் என்று முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் அதிகரித்து உங்களுக்கு தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாலே உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். வைத்தியசாலை செல்வதற்கு மனம் இல்லை என்றால், உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் பேசவும். இவ்வாறு செய்தாலும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.
- கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும்.
அன்றாட வாழ்க்கை முறையில் பலரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறர்கள். குறிப்பாக பெண்களுக்கு வீட்டு வேலைகள், அலுவலகப்பணிகள், குழந்தைகள் பராமரிப்பு, குடும்பத்தின் முக்கிய பொறுப்புகள் ஆகியவற்றை தினசரி கையாள்வதன் காரணமாக எதிர்மறையான மனநிலை மாற்றங்கள் எளிதாக ஏற்படுகின்றன. இதன் விளைவாக பெண்களுக்கு அதிக கோபம், எரிச்சல், சலிப்பு, விரக்தி போன்ற பாதிப்புகள் உண்டாகும். அந்த உணர்வுகளை சத்தமாக திட்டுவது. கத்துவது போன்ற செயல்பாடுகளின் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
குறும்பு செய்யும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், அதிகமாக சத்தம் போட்டு திட்டுவதும். கத்துவதும் பெண்களின் தினசரி நடவடிக்கையாகவே மாறிவிடும். இதன் காரணமாக குழந்தைகளுக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.
குரல் நாண் மற்றும் தொண்டையில் அழுத்தம் ஏற்படும். தொண்டையில் இருக்கும் குரல்வளையில் ஏற்படும் அதிர்வு காரணமாகத்தான் நம்மால் பேச முடிகிறது. சத்தமாக பேசும்போது குரல்வளையில் அதிக அழுத்தத்தோடு அதிர்வு ஏற்படுவதாலும், அடுக்குகளுக்கு இடையில் காற்றோட்டம் குறைவதாலும் உராய்வு ஏற்படுகிறது. இதனால் குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.
மேலும் நாளடைவில் பேசுவதற்கே சிரமம் ஏற்படலாம். அதிகமாக கோபப்பட்டு கத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 6 மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு முறையும் நீங்கள் கோபத்தில் உங்கள் குரலை உயர்த்தி பேசும்போது, உங்களுடைய இதயத் துடிப்பு அதிகரிப்பதை கவனிக்க முடியும். கோபம் அதிகரிக்கும்போது, உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதன் மூலம் இதயம் சீரற்று வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். சுவாசிக்கும் வேகம் அதிகமாகும். தசைகளில் அதிக அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக தசைகள் தளர்ந்துபோக நேரிடும்.
கோபப்பட்டு கத்துவதால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன்மூலம் வளர்சிதை மாற்றம் குறையும். தலைவலி, பதற்றம், தூக்கமின்மை, செரிமானக் கோளாறுகள் மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படும். எப்போதும் கோபப்பட்டு கத்திக்கொண்டே இருப்பவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அடிக்கடி கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும். பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மனநிலையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும்.
சிறுவயதில்தான் முளை மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால் பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். தொடர்ந்து இத்தகைய கடுமையான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, முதுகு மற்றும் கழுத்துவலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன
- உலர் கண் நோய் ஏற்பட்டால் கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.
- தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும்போது விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.
நம் கண்களின் வெளிப்புற அடுக்கில் எண்ணெய்யும், மைய அடுக்கில் நீரும், உள் அடுக்கில் புரதமும் இருக்கும். இந்த மூன்று அடுக்குகளின் தரம் அல்லது அளவில் உண்டாகும் மாற்றமே உலர் கண் நோயாகும். கண்களின் சீரான தன்மை மற்றும் செயல்பாட்டிற்கு அதில் சுரக்கக்கூடிய கண்ணீரின் அளவு அடிப்படையானதாகும். உலர் கண் நோய் ஏற்படும்போது கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.
அறிகுறிகள்:
கண்களில் எரிச்சல், வறட்சி, அரிப்பு, வலி உணர்வு, கனம், கண்களில் நீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை, புத்தகம் வாசிப்பதில் சிரமம் ஏற்படுவது போன்றவை உலர் கண் நோய்க்கான அறிகுறிகளாகும்.
காரணங்கள்:
* எந்த ஒரு பொருளையும் தொடர்ந்து நீண்ட நேரம் உற்றுப்பார்ப்பது.
* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், சீரற்ற ஹார்மோன் சுரப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்கள் காரணமாகவும் உலர் கண் நோய் ஏற்படும்.
* தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும் போதும், மாசுக்கள் கண்களில் தொடர்ந்து படும்போதும் விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.
* காற்றில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் உலர் கண் நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். குறிப்பாக ஏ.சி. பயன்பாட்டின்போது நம்மைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை குறைந்து, ஈரப்பதம் அதிகரிக்கும். இது கண் இமைகளில் உள்ள சுரப்புகளின் உற்பத்தியை தடுத்து, விழி நீர் படலத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
தீர்வு:
* உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
* கண்களுக்கான பயிற்சிகளை செய்ய வேண்டும். கண் பயிற்சிகள் செய்யும்போது ஆரம்ப காலத்தில் தலைவலி உண்டாகலாம். இந்த பயிற்சிகளை பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் செய்வது நல்லது.
* நீங்கள் இருக்கும் அறையில் ஒரு அகலமான கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். இது அறையில் உள்ள காற்றை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
* 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவலாம். இது சருமம் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு, கண்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் சோர்வை நீக்கும்.
* சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 10 வினாடிகளுக்கு ஒருமுறை கண்களை சிமிட்டுவது அவசியமானது.
* வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவது நல்லது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* குளிர்ந்த அல்லது அதிக வெப்பநிலை உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
* நேரடியாக கண்ணில் வேகமான காற்று படும்படி இருப்பதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை போடுவதை தவிர்க்க வேண்டும்.