என் மலர்
நீங்கள் தேடியது "ஏழுமலையான்"
- 2 கிராம் எடை கொண்ட தங்க தாலியை நன்கொடையாக தேவஸ்தானம் நிர்வாகம் வழங்கியது.
- தேவஸ்தான நிர்வாகம் நடத்திய கூட்டுத் திருமணங்களில் 32,000 தம்பதிகள் மண முடித்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் இதுவரை 2 கிராம், 5 கிராம், 10 கிராம் எடைகளில் தங்க டாலர்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இனி 5 கிராம், 10 கிராம் எடையில் 4 வகையான மாதிரிகளில் திருமணத்துக்கான தங்க (மாங்கல்யம்) தாலிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஏழுமலையான் திருவடிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட பின்னர், விற்பனை செய்யப்பட இருக்கும் தங்க தாலிகளை தேவையான பக்தர்கள் பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம்.
கடந்த காலங்களில் கல்யாண மஸ்து என்ற பெயரில், தேவஸ்தான நிர்வாகம் நடத்திய கூட்டுத் திருமணங்களில் 32,000 தம்பதிகள் மண முடித்தனர்.
அவர்களுக்கு 2 கிராம் எடை கொண்ட தங்க தாலியை நன்கொடையாக தேவஸ்தானம் நிர்வாகம் வழங்கியது.
ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவங்கள் பதிக்கப்பட்ட அந்த தங்க தாலிகளின் மகிமை காரணமாக, 32 ஆயிரம் தம்பதிகளில் ஒருவரும் மதம் மாறவில்லை என தேவஸ்தானம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுசர் தான்.
- ராமானுசர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.
திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.
தாயார் சன்னதி கூடக் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.
திருமலையின் ஆதிமூர்த்தியான வராகசாமி தெப்பக் குளக்கரையில்தான் இருக்கிறார்.
ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது. இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே.
திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.
ராமானுஜர் 1017&ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.
1137&ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்.
திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுசர் தான்.
அவர் காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவக் கோவிலா? வைணவக் கோவிலா? சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.
ராமானுசர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.
ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார். காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார்.
அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது. இன்றும் அங்கு "ராமானுசர் வீதி" இருக்கிறது.
கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது "ராமானுசர் நந்தவனம்" என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.
ஏழுமலை ஏறித் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார்.
அதுவே "ராமானுசக் கூடம் ஆனது". இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக அன்றே "சமபந்தி" சாப்பாட்டை ராமானுசர் தொடங்கி வைத்து விட்டார்.
ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுசரே!
ஏழுமலையானுக்குப் பச்சைக் கற்பூர நாமம் சாத்தவும் ராமானுசரே ஏற்பாடு செய்தார்.
சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.
இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.
வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூசையையும் ராமானுசர் வகுத்துக் கொடுத்தார்.
மலை அடிவாரத்தில் கீழ்த் திருப்பதி ஊரையும் உருவாக்கினார்.
இப்படி ஏழுமலையான கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுசர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.
ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.
- ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.
- இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது.
திருப்பதி பிரசாதம்!
திருமலை வாசனுக்கு படைக்கும் பிரசாதங்கள் தாய் வகுளாதேவி முன்னிலையில் தயாரிக்கப்படுகிறது.
இதற்காக மடப்பள்ளி முன்பு தாய் வகுளாதேவி சிலை உள்ளது.
இங்கு ஏழுமலையானுக்கு பிடித்த லட்டு பிரசாதத்துடன் பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்தரன்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரி பருப்பு கேசரி ஆகியவை பெருமளவு தயார் செய்யப்படுகிறது.
ஆனால் ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவும் மண்சட்டியில் வைத்து படைக்கப்படுகிறது.
இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது.
பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர் சாதமும் ஒரு பக்தனுக்கு கிடைத்தால் அது அவன் செய்த பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.
- மூலவர் “சிலா தோரணம்” என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது.
- ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது.
திருமலை அதிசயம்
ஆஜானுபாகுவாய் சுமார் 9 அடிக்கு மேல் உயர்ந்து கமலபீடத்தின் மீது எழுந்து நிற்கும் ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே அபிஷேகம் நடக்கும்.
மற்ற நாட்களில் எல்லாம் பச்சை கற்பூரம், புனுகுதைலம், வாசனை திரவியங்கள் சாத்தப்பட்டு தங்க, வைர, வைடூரிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.
மூலவர் "சிலா தோரணம்" என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது.
மூலவருக்கு தினமும் பச்சை கற்பூரம் சாத்தப்படுகிறது. இது அரிப்பை ஏற்படுத்தும் ஒருவகை அமிலம்.
இதனை சாதாரண கருங்கல்லில் தடவினால் அது வெடித்துவிடும்.
ஆனால் 365 நாளும் பச்சை கற்பூரம் சாத்தப்படும் ஏழுமலையான் மூலவர் சிலை வெடிப்பேதும் இல்லாமல் உள்ளது அதிசயமாக கருதப்படுகிறது.
ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது.
திருமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.
அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.
அபிஷேகம் முடிந்ததும் ஏழுமலையானுக்கு வியர்க்கும்.
இதனால் பீதாம்பரத்தால் வியர்வையை வேதபண்டிதர்கள் ஒற்றி எடுக்கிறார்கள்.
- ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது.
- அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.
ஏழுமலையானை தரிசிக்கும் முறை!
ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது.
அதற்கு ஒரு மரபு உண்டு.
முதலில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமானை சேவிக்க வேண்டும்.
ஏன் முதலில் கோவிந்தராஜனை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் இவர் வேங்கடவனின் அண்ணன்.
சிதம்பரம் கோவிலில் திருச்சித்திரகூடத்தில் எழுந்தருளி உள்ள கோவிந்தராஜனே இவர் என்று புராண வரலாறு கூறுகிறது.
தில்லை கோவிந்தராஜன் இந்த பகுதிக்கு வந்ததாகவும், திருப்பதியின் எழிலில் மனதை பறிகொடுத்து இங்கேயே தங்கி விட்டதாகவும், அவருக்காக இங்கு கோவில் எழுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வேங்கடவன் கோவில் கொள்வதற்கு முன்பே இவர் இங்கே எழுந்தருளியதால் இவரை ஏழுமலையானின் அண்ணன் என்கிறார்கள்.
முதலில் இவரை தரிசித்து விட்டு பின்னர் அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.
இவரை தரிசித்து திருமலை ஏற அனுமதி பெற வேண்டும்.
திருமலையில் வராக தீர்த்தகரையில் உள்ள வராகமூர்த்தியை தரிசித்த பின்னரே திருவேங்கடனை தரிசிக்க செல்ல வேண்டும்.
- “வேங்”என்றால் பாவம்., “கடா” என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள்.
- அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.
திருப்பதி திருமலை!
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 ஆலயங்களையும் "திருப்பதி" என்றுதான் அழைக்கின்றனர்.
ஆனால் ஊரை சொல்லாமல் திருப்பதி என்று சொன்ன மாத்திரத்திலேயே அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய தலம் வேங்கடவன் கோவில் கொண்டுள்ள திருப்பதிதான்.
"வேங்"என்றால் பாவம்., "கடா" என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள். அதனால்தான் வேங்கடேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
கலியுக கடவுளாக பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் இஷ்ட தெய்வமாக திகழும் வேங்கடேஸ்வரரை பக்தர்கள் திருமலைவாசா, ஸ்ரீனிவாசா, ஏழுமலையான், ஏழுகொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா, மலையப்பான் என்று பலவாறு உள்ளம் உருகி அழைத்து வழிபடுகிறார்கள்.
அவரது பெயரை போல திருமலைக்கும் ஏழு பெயர்கள் உண்டு.
ஆதிசேஷன் உருவத்தை ஒத்திருப்பதால் சேஷாசலம்.
வேதங்கள் நிலை கொண்டு இருப்பதால் வேதாசலம்.
கருடனால் பூலோகத்தை அடைந்த காரணத்தினால் கருடாசலம்.
விருஷன் எனும் அரக்கன் மரணம் அடைந்து மோட்சம் பெற்றதால் விருஷபாத்திரி.
அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.
வாயுதேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் உண்டான சண்டையால் ஆனந்தகிரி.
பாவங்கள் தீர்க்கும் காரணத்தினால் வேங்கடாசலம் என அழைக்கப்படுகிறது.