என் மலர்
நீங்கள் தேடியது "ஐ.பி.எல்."
- மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது.
- அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி மும்பை அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தி்ல் லக்னோவிடம் தோற்று கடைசி இடத்தை பிடித்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.
நிக்கோலஸ் பூரண் 29 பந்தில் 75 ரன்னும் (5 பவுண் டரி), 8 சிக்சர்), கேப்டன் கே.எல்.ராகுல் 41 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். நுவன் துஷாரா, பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 196 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் வித்தியாசத் தில் தோற்றது.
ரோகித் சர்மா 38 பந்தில் 68 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), நமன்திர் 28 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக் தலா 2 விக்கெட்டும், குணால் பாண்ட்யா, மோஷித் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது.
லக்னோ 7-வது வெற்றியை பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது. லக்னோவும், டெல்லியும் தலா 14 புள்ளிகளை பெற்று இருந்தாலும் ரன் ரேட்டில் மிக மோசமாக இருந்ததால் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியாமல் போனது.
இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி பந்து வீசவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி தொடரில் இதே மாதிரி தடை விதிக்கப்பட்ட 2- வது வீரர் ஆவார். ஏற்கனவே ரிஷப் பண்டுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது டெல்லி அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பாதித்தது.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த சீசன் முடிந்துவிட்டது. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.
மேலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அணியில் ஆடிய மற்ற வீரர்களுக்கும் தலா ரூ.12 லட்சம் அல்லது 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
- குஜராத் டைட்டன்சை நாளை மீண்டும் சந்திக்கிறது சி.எஸ்.கே.
- குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா?
அகமதாபாத்:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
சேப்பாக்கம் மைதா னத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி ( மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதரா பாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 541 ரன் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.
மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக ஆடுவது அவசியமாகும். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.
பந்து வீச்சில் துருப்பு சீட்டான இலங்கையை சேர்ந்த பதிரனா எஞ்சிய போட்டிகளில் ஆட முடியா மல் போனது மிகப்பெரிய பாதிப்பே. அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல் 14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காள நாடு திரும்பி யுள்ளார். தீபக் சாஹரும் காயத்தில் உள்ளார். இதனால் பந்துவீச்சில் பலவீனமாகவே இருக்கிறது. இதை பேட்மேன் கள்தான் சரி செய்ய வேண்டும்.
துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் அவர்களது இடத்தை நிரப்புவார்கள். சான்ட்னர் கடந்த போட்டியில் ரன் கொடுக்காமல் நேர்த்தியாக வீசினார்.
சுப்மன்கில் தலைமையி லான ருதுராஜ் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
குஜராத் அணியில உள்ள தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் ஆகியோர் சென்னைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடுவார்கள்.
- இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம்.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 12-ந் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டம் இதுவாகும்.
சென்னை - ராஜஸ்தான் மோதலுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.