என் மலர்
முகப்பு » கள்ளப்பெரம்பூர்
நீங்கள் தேடியது "கள்ளப்பெரம்பூர்"
கள்ளப்பெரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள சக்கரசாமந்தத்தை சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் செங்குட்டுவன் (வயது 30). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் சக்கரசாமந்தத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் ரெட்டிப்பாளையம் அருகே உள்ள சப்தகிரி நகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் செங்குட்டுவன் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த செங்குட்டுவனின் கால் முறிந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
×
X