என் மலர்
நீங்கள் தேடியது "சப்ளை"
- மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மதுரையில் போலீஸ் நிலையம் அருகில் என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டது.
மதுரை
மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். போலீஸ் நிலையம் அருகில் உள்ள என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள பிள்ளையார்பாளையம் ரோட்டில் சென்றபோது அந்தப்பகுதியில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள ஒரு இடத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை விற்ற பணம் ரூ.17 ஆயிரமும் கைப்பற்றப் பட்டது.
இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்ததாக சிம்மக்கல்லை சேர்ந்த அசோக்குமார் ஜெயின் (வயது52) என்பவரை கைது செய்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில், மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. எங்கிருந்து புகை யிலை பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது? இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரில் சமூக விரோதிகள் கஞ்சா, புகை யிலை பாக்கெட்டுகளை சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து விற்பனை நடக்கிறது. இதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- ஆவின் 500 மில்லி நைஸ் நீல பாக்கெட் ரூ.20, பச்சை ரூ.22, ஆரஞ்சு ரூ.30 என்று அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மொத்த விற்பனையாளர்கள் என்ற இடைத்தரகர் இல்லாமல் முகவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம்.
சென்னை:
ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. லிட்டருக்கு ரூ.2 வரை உயர்வாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள்.
இது தொடர்பாக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-
ஆவின் பால் விற்பனை மொத்த விற்பனையாளர்கள், பால் முகவர்கள், சில்லரை விற்பனையாளர்கள் என்ற மூன்று அடுக்குகளை கொண்டது. மாவட்டத்துக்கு மாவட்டம் சில்லரை விற்பனை, விலை, கமிஷன் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவின் 500 மில்லி நைஸ் நீல பாக்கெட் ரூ.20, பச்சை ரூ.22, ஆரஞ்சு ரூ.30 என்று அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.1 குறைத்து வழங்குகிறார்கள். இது தவிர போக்குவரத்து மானியமாக லிட்டருக்கு 70 காசுகளும் வழங்கப்படுகிறது.
இதில் மொத்த விற்பனையாளர்கள் தங்கள் லாப பங்காக 50 காசுகளை எடுத்து கொண்டு பால் முகவர்களுக்கு 50 காசு குறைவாக சப்ளை செய்கிறார்கள். பால் முகவர்கள் லீக்கேஜ் போன்ற இழப்புகளையும் தாங்கி சில்லரை கடைகளுக்கு அதிகாலை 4 மணி முதல் வழங்குகிறார்கள். அவர்கள் தங்களுக்கான கமிஷனை எடுத்து கொண்டு ஒரு பாக்கெட் 50 காசு கூடுதலாக விற்கிறார்கள். கடைக்காரர்கள் கூடுதலாக 50 காசு வைத்து விற்கிறார்கள். இப்படித் தான் லிட்டருக்கு ரூ. 2 வரை கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
இதை சரிகட்ட மொத்த விற்பனையாளர்கள் என்ற இடைத்தரகர் இல்லாமல் முகவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். விற்பனைக்கான கமிஷன் தொகையை சதவீத அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும். அது வரை இந்த சுமை பொதுமக்கள் தலையில்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.