என் மலர்
முகப்பு » செவ்வாப்பேட்டை
நீங்கள் தேடியது "செவ்வாப்பேட்டை"
செவ்வாப்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
செவ்வாப்பேட்டை:
செவ்வாப்பேட்டை அடுத்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் தேசபக்தன். இவரது மனைவி உஷா. இவர்கள் இருவரும் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று காலை இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் (பொறுப்பு) வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார். #Tamilnews

செவ்வாப்பேட்டை அருகே மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபர் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செவ்வாப்பேட்டை:
செவ்வாப்பேட்டை அடுத்த அரண்வாயல் அருகே பூந்தமல்லி-திருப்பதி நெடுஞ்சாலை ஓரத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது. போலீசார் அங்கு வந்து பார்த்த போது வாலிபர் உடல் அருகே விஷ பாட்டில்கள் 5-க்கு மேற்பட்டவை மற்றும் மது பாட்டில்கள் இருந்தது.
அவரது சட்டை பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தை ஆய்வு செய்த போது பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரிய வந்தது. இது பற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜெயக்குமாரை யாரேனும் கொலை செய்து சடலத்தை வீசி சென்றனரா அல்லது காதல் தோல்வியால் அவரே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

×
X