என் மலர்
நீங்கள் தேடியது "சொத்துகள்"
- பெரியபட்டினம் அரசு பள்ளியில் பொது சொத்துகளை பாதுகாக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை பெரிய பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சொத்துக்களை பாதுகாப்பது குறித்து மாணவர் களுக்கு விழிப்பு ணர்வு மற்றும் சுயஒழுக்கம் குறித்த நல்லொழுக்க போதனை நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில், கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமை வகித்து, மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி பேசினார். இன்ஸ்பெக்டர் பாலமுரளி முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் தபசுமுத்து வரவேற்றார். கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா போக்சோ சட்டம் சம்பந்த மாக விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
பெரியபட்டணம் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி பேசும்ேபாது, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறு வதற்கு காரண மாக இருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு பெரியபட்டினம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாகவும், ஊர் மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்தார்.
இதில் துணைத்தலைவர் புரோஸ்கான், பெரியபட்டி னம் ஜமாத் நிர்வாகி அன்சார் அலி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பாத்திமா, உறுப்பினர் அசன் அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கணித ஆசிரியர் முத்துக் குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பெரிய பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.