என் மலர்
நீங்கள் தேடியது "தாரமங்கலம்"
- எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை.
- கதவுகல் 120 கூரிய உலோகக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோயிலில் மட்டும்தான் உள்ளது.
தொன்று தொட்டு விளங்கிவரும் தமிழ் பாரம்பரியத்தில் கட்டிடக்கலைக்குப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக தஞ்சை பெரிய கோயில் உள்ளது. அதைப்போலவே அரிய பொக்கிஷமாகத் திகழும் தாரமங்கலம் கயிலாசநாதர் ஆலயம் உள்ளது. தாரமங்கலம் சேலத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோயில் இது, இந்த பழைமையான சிவன் கோயில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று எனலாம். இந்த கோயிலில் மூலவர் கயிலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள்.
இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாக கூறப்படுகிறது. இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் 'தாரமங்கலம்' என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.
தல வரலாறு:
கிபி 12-ம் நூற்றாண்டில் கெட்டி முதலியார் இங்கு ஆட்சி செய்து வந்தார். அப்போது பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு போகும்போது ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட புற்றினில் தினமும் பால் சுரக்கிறது என்று தகவல் வந்தவுடன் அவர் அந்த புற்றை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் காணப்பட்டது. அதனால் அவர் அங்கேயே வழிபாடு செய்ததாகவும் பிறகு வந்த மன்னர்கள் அங்கு கோயில் எழுப்பியதாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது.
கோயிலின் சிறப்புகள்:
இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியனின் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன.
அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள்வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல் படுவது அபூர்வமாக கருதப்படுகிறது.
சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள். கோயிலில் உள்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன. கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்பதைத் தாண்டி மக்களின் 'பாதுகாப்பு அரண்' என்னும் கொள்கையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
எதிரி நாட்டு படை தாக்க வரும்போது பொன், பொருள், மக்களைப் பாதுகாக்கும் வீதம் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் 90 அடி உயரம் கொண்டது. வாசலில் 20 அடி கொண்ட வேங்கை மரத்தினாலான கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கதவுகளிலும் 60 கூர்மையான உலோகக் குமிழ்கள் வீதம் மொத்தம் 120 கூரிய உலோகக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன. யானை வைத்து கதவுகளை உடைக்கும் அந்த காலத்தில் யானை முட்டி மோதி உடைக்கும் போது குத்தி கிழித்துவிடும்படி நுணுக்கமாக இவை அமைக்கப்பட்டுள்ளன.
சிங்கமுகமும் மனித தலையும் கொண்ட யாழியின் வாயில் உள்ள கல் உருண்டையை நாம் எவ்வாறு வேண்டுமானலும் உருட்டலாம் ஆனால் கல்லை வெளியே எடுக்க முடியாது. கோபுரத்தை அடுத்துள்ள சிவப்பு பவளக்கல் படிகளில் 5 நிமிடம் அமர்ந்தாலே போதும் நம் உடலில் உள்ள வெப்பம் தணிந்து விடும். இந்த சிறப்புகள் தமிழ்நாட்டில் எங்கேயும் கிடையாது.
இந்த கோயிலின் கோபுரங்கள் ஒரு தேர் போலவும் யானைகள் குதிரைகள் கட்டி இழுப்பதுபோலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோயிலில் மட்டும்தான் உள்ளது. எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் அந்த சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம். பிறகு தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் நுண்ணிய துவாரங்களைக் கொண்டதாகக் கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.
வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவாள், கேடயத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர்க் காட்சிகள் பல இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்ட பின்னர் அவற்றைத் தன்னுடன் வந்திருந்த யானை மற்றும் ஒட்டகங்களின் மீது பொதி மூட்டையாய் ஏற்றிக் கொண்டு திரும்பிச் செல்லும் காட்சியும் சித்திரங்களாக உள்ளது.
தன்னுடைய தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் மாலிக்கபூரை இப்பகுதியில் வழிமறித்துத் தாக்குதல் நடத்த கெட்டி முதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சி.
பின்னர், மதுரையில் கொள்ளையடித்த செல்வங்களை எல்லாம் யானை மற்றும் ஒட்டகங்களின் மீது ஏற்றிக் கொண்டு வந்த மாலிக்கபூரின் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் கொண்டு வந்த செல்வங்களை எல்லாம் கெட்டி முதலியின் வீரர்கள் பறித்துக்கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஒன்று மாலிக்கபூரோடு செல்வது போன்ற ஒரு காட்சி போன்றவை ஆலயத்தின் சுற்றுச்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
அந்த செல்வங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டும் வகையில் சில குறிப்புகளை இந்த சித்திரங்களில் காட்டியுள்ளனர். வாழ்வில் கட்டாயம் காண வேண்டிய சிற்பக் களஞ்சியமாக இந்த கோயில் அமைந்துள்ளது.
- தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
- வாரசந்தையில் குவியும் கோழி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சியில் வருவாய் இனங்களாக உள்ள வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் கூடுகிறது.
இங்கு தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
இந்நிலையில் சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கறிக்கோழி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் கடை வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் வியாபாரிகளின் வருகை குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுவதால் .சந்தையை சுத்தப்படுத்த வேண்டுமென குத்தகைதாரர்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் சந்தை பேட்டையில் உள்ள கழிவறை கட்டிடத்தில் இருந்து முறையற்ற மின்சார இணைப்பை கறி கோழி கடைகளுக்கு வழங்கி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர் .
இதுபற்றி வாரசந்தையின் குத்தகைதாரர் பெரியசாமி கூறுகையில், வாரச்சந்தை பகுதியில் குத்தகை காலம் முடிந்தும் இயங்கி வரும் கறிக்கோழி கடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் முறையற்ற மின்சார இணைப்பை துண்டித்து, கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். சந்தை பகுதி வளாகத்தை தூய்மை படுத்தி தொற்றுநோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .
- வாலிபரிடம் செல்போன், நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- தனியாக நின்று கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் 5 பேர் சேர்ந்து தாக்கி நகையை பறித்து சென்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் பச்சகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 29).
இவர் அழகு சமுத்திரம் சினிமா தியேட்டர் முன்பு தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் கார்த்தியை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுபற்றி கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளம்பிள்ளை மற்றும் கோட்டைமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த சதீஷ்குமார் (19) உள்பட 2 பேரை கைது செய்தனர் .மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷ், குமார், ரஞ்சித் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கல்லூரி மாணவரை தாக்கிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேருந்தை வழிமறிது பெண் ஒருவர் உள்ளே சென்று வாலிபரிடம் கேள்வி கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகில் உள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 21). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார்.
கடந்த 4 ந்தேதி மாலை கல்லூரி பேருந்தில் வந்துகொண்டிருந்த போது சின்னப்பம்பட்டி அருகே பேருந்தை வழிமறித்த பெண் ஒருவர் உள்ளே சென்று முருகனிடம் உன்னுடைய நண்பன் கவின்ராஜ் எங்கடா என்று கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த முருகன் ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் கல்லூரி மாணவரை தாக்கிய பெண் சின்னப்பம்பட்டி அருகிலுள்ள அக்கறை–பட்டியை சேர்ந்த பரிமளா–தேவி என்பதும் இவருடைய மகன் பாலாஜிக்கும், கவின்ராஜ் என்ற மாணவ–ருக்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று பஸ்சில் இல்லாததால் அவருடைய நண்பர் முருகனை தாக்கியதும் தெரியவந்தது. இதுபற்றி முருகன் கொடுத்த புகாரின் பேரில் பரிமளாதேவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
- தாரமங்கலம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள எடயப்பட்டி கிராமம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 58). கூலி தொழிலாளி.
இவர் கடந்த 5 வருடமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 1ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயக்கமடைந்த சந்திரன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.