search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிஷா"

    • நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
    • படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.

    படத்தின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். கடந்த மாதம் யாரும் எதிர்பாராத நேரத்தில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    சமீபத்தில் அஜித் மற்றும் திரிஷா இணைந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜே ரம்யா நடித்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
    • திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.

    படத்தின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். கடந்த மாதம் யாரும் எதிர்பாராத நேரத்தில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில் இன்னும் 7 நாட்களுக்கான படப்பிடிப்பு பணிகள் மீதி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவுட்டுள்ளனர். அதில் அஜித் மிகவும் ஸ்டைலாக டக்சிடோ கோட் சூட் அணிந்து நடந்து வருகிறார். மற்றொரு புகைப்படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித், திரிஷா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இருக்கின்றனர்.

    இந்த புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. திரைப்படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
    • சூர்யா 45 படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார்.

    கங்கா படத்திற்கு அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    சூர்யா மற்றும் திரிஷா ஜோடியாக மௌனம் பேசியதே மற்றும் ஆறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

    நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தனது முதல் படத்தில் நாயகனாக நடித்த சூர்யாவுடனே மீண்டும் அவர் ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நடிகை த்ரிஷா தற்போது கோவையில் உள்ள மருத மலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    • ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார்.

    சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சூர்யா வின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்ளவதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. தற்பொழுது படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கோவையில் நடைப்பெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார்.

    சூர்யா மற்றும் திரிஷா ஜோடியாக மௌனம் பேசியதே மற்றும் ஆறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடித்த இரு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதற்கு அடுத்து இருவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'தெறி' படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் 'நடிகையர் திலகம்' என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படம் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கோவாவில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதனையடுத்து திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. அவர் பட்டு வேட்டி சட்டையில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படமும் வெளியானது.

    இதனிடையே நடிகர் விஜய் மற்றும் திரிஷா கோவாவுக்கு விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    மேலும், இருவரும் ஒரே விமானத்தில் கோவா சென்றதாக கூறும் படிவம் ஒன்றின் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
    • இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.

    டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது ஏ.ஆர்.எம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.

    இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    படத்தின் டீசர் நேற்று படக்குழு வெளியிட்டது. படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி 24 மணி நேரத்தில் யூடியூபில் 10 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. படத்தின் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
    • சில நாட்களுக்கு முன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.

    படத்தின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். நீண்ட நாட்கள் அப்டேட் ஏதுமின்றி இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில் இன்னும் 7 நாட்களுக்கான படப்பிடிப்பு பணிகள் மீதி இருப்பதாக. அதை படக்குழு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
    • இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.

    டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது ஏ.ஆர்.எம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி. இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    படத்தின் டீசர் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. திரிஷா நடிப்பில் நேற்று விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது. அப்படமும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளும் முடிவடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • இப்படத்திற் விஜய் வசந்தா இசையமைக்க உள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் வெளியான படம் '96'. பள்ளிப் பருவ காதலர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டிய படம் '96'. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

    '96' படத்துக்குப் பின் இயக்குனர் பிரேம் குமார் 'மெய்யழகன்' படத்தை இயக்கினார். இப்படமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

    இந்த நிலையில், '96' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளும் முடிவடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    விஜய் சேதுபதி- திரிஷா நடிக்க உள்ள 96 இரண்டாம் பாகத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், விஜய் வசந்தா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராவார் திரிஷா.
    • அஜித் நடித்துள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராவார் திரிஷா. இவர் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் மட்ட என்ற பாடலில் சிறப்பு நடனம் ஆடினார்.

    தற்பொழுது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும் மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டப்பிங் பணிகள் சில வரங்களுக்கு முன் நடைப்பெற்றது.

    தற்பொழுது படத்தின் பாடல் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது. இப்பாடலில் திரிஷா நடனமாடியுள்ளார். இப்பாடல் மணிரத்னம் திரைப்படமான பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணாலனே பாடலைப் ப்போல் ஒரு சூஃபி கதக் நடனம் போல் அமைந்துள்ளது.

    படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை திரிஷா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு. என்னுடைய பிடித்தமான பாடல் என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராவார் திரிஷா.
    • விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராவார் திரிஷா. இவர் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் மட்ட என்ற பாடலில் சிறப்பு நடனம் ஆடினார்.

    தற்பொழுது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தக் லைஃப் மற்றும் தெலுங்கில் விஷ்வம்பரா மற்றும் மலையாளத்தில் ஐடன்டிட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து படும் பிஸியாக உள்ளார் திரிஷா.

    இந்நிலையில் மிக பிரபல வெளிநாட்டு நாளிதழான நியூ யார்க் டைம்ஸ் -இல் இடம் பெற்ற புதிர் வினாக்கு விடையாக திரிஷா இடம்பெற்றுள்ளார். அந்த புதிரின் க்ளூ தென்னிந்திய நடிகை என இருந்தது. இதை நடிகை திரிஷா பெருமையுடன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    இப்பதிவை நடிகை சமந்தா அவரது பக்கத்தில் குவீன் என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது
    • ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. பின்னணியில் ஏஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.

    காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும். குறிப்பாகச் சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் ரீரிலீஸ் ஆகி இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

    பிவிஆர் திரையில் கடந்த 142 வாரங்களாக [2.75 ஆண்டுகளாக] இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ரீரிலீசில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்ற சாதனையை தனதாகியுள்ளது விண்ணைத் தாண்டி வருவாயா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×