என் மலர்
நீங்கள் தேடியது "திலீப்"
- சபரிமலையில் அனைத்து பக்தர்களும் சமம் என்ற நிலையில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
- இச்சம்பவம் குறித்து நேற்று கேரள ஐகோர்ட்டின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் அனைத்து பக்தர்களும் சமம் என்ற நிலையில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சபரிமலை சென்ற நடிகர் திலீப் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் இரவு நடை அடைக்கும்போது பாடப்படும் அரிவராசனம் முடியும் வரை நடிகர் திலீப் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் இச்சம்பவம் குறித்து நேற்று கேரள ஐகோர்ட்டின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் திலீப் சன்னிதானத்திற்கு வந்தது எப்படி? என கேள்வி எழுப்பிய சிறப்பு அமர்வு நீதிபதிகள், அரிவராசனம் பாடல் முடியும் வரை நடிகர் திலீப்பிற்கு சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி? என்ற கேள்வியையும் எழுப்பினர்.
இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து சம்பவம் குறித்து தேவஸ்தான ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக தேவஸ்தானம் சார்பில் கோா்ட்டில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.
- கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார்.
- இந்த வழக்கு தொடர்பாக 20 பேருக்கு குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பப்பட்டது.
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனீல் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 39 சாட்சிகளிடம் முதல் கட்டமாக 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 12 பேரிடம் விசாரணை நடைபெறாமல் இருந்தது.
இதையடுத்து 2-ம் கட்ட குறுக்கு விசாரணைக்கு 20 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டது. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் உள்பட 20 பேர் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இரண்டாம் கட்ட விசாரணைக்காக கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். மஞ்சு வாரியர் உட்பட நான்கு பேரிடம் தற்போது விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கை இன்னும் ஆறு மாதத்திற்குள் முடித்துவிட கேரள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார்.
- இந்த வழக்கு தொடர்பாக 39 சாட்சிகளிடம் முதல் கட்டமாக 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனீல் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 39 சாட்சிகளிடம் முதல் கட்டமாக 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 12 பேரிடம் விசாரணை நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் 2-ம் கட்ட குறுக்கு விசாரணைக்கு 20 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் உள்பட 20 பேர் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
- நடிகை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு கேரளாவில் நடந்து வருகிறது.
- இந்த வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மலையாள முன்னணி நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைதானார்.
தற்போது திலீப் ஜாமீனில் வந்துள்ள நிலையில் விசாரணை அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இன்னொரு வழக்கும் திலீப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு பின்னர் திலீப்பும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்த விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடிக்கும்படி ஏற்கனவே விசாரணை குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் மனுதாக்கல் செய்தது. இதையடுத்து நடிகை கடத்தல் வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்க அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
- மலையாள திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் திலீப்.
- இவருக்கு சிறப்பு கௌரவம் கிடைத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் ஐக்கிய அமீரகம் பிரபல மலையாள நடிகர் திலீப்க்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கோல்டன் விசா ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.