என் மலர்
நீங்கள் தேடியது "நகையை"
- பொதுமக்கள் பிடித்து போலீசில ஒப்படைத்தனர்
- தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு தொடுகுளம் பகுதியை சேர்ந்தவர் லேகா (வயது44). இவர் நட்டாலம் தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தபால் நிலையத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக மாமூட்டுகடை - பாண்டியன் விளைச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நெட்டி யான்விளை பகுதியில் வைத்து, லேகாவின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் பதிவு எண் இல்லாத இருசக்கர வாக னத்தில் வந்து கொண்டிருந்த மர்ம நபர், திடீரென அவரது மோட்டார் சைக்கிளில் மோதி கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லேகாகத்தி கூச்சலிட்டுள்ளார்.
உடனே உஷாரான அந்த மர்மநபர், லேகாவின் கன்னத்தில் சரமாரியாக தாக்கி காயப்படுத்தி கீழே தள்ளி விட்டு, அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கத்தாலி செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென் றுள்ளார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவரை துரத்தி பிடித்தனர்.
பின்பு அவருக்கு தர்ம அடி கொடுத்து மார்த்தாண் டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐரேனிபுரம் ஆரியூர் கோணம் சங்கர்(33) என்பதும், மரவேலை செய்து வருபவர் எனவும் தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், பறித்த தாலி செயினை பொதுமக்கள் துரத்திய போது அங்கு ஒரு தோப்பில் வீசி விட்டதாக தெரி வித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்தனர். அவர் தூக்கி வீசப்பட்ட தாலி செயினை தேடி வருகின்றனர் .
- கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
- சென்னை அடையாறு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
கன்னியாகுமரி:
தக்கலைஅருகே கீழ மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜன் (வயது 50). இவர் சென்னை அடையாறு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் கீழமூலச்சலில் வசிப்பதால் அடிக்கடி அவர் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
அதன்படி ஊருக்கு வந்த சகாயராஜன், தக்கலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார். அன்று அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் போதையில் அ ங்கேயே மயங்கி விழுந்து விட்டார். அப்போது அவரது கையில் அணிந்து இருந்த 20 பவுன கைச்சங்கி லியை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுபற்றி சகாயரா ஜன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப் பதிவு செய்தார்.போலீசார், சகாயராஜன் தூங்கிய போது யாராவது அவருடைய பக்கத்தில் சுற்றி வந்தார்களா? எனவிசாரித்தனர்.
இதில் ஒரு வாலிபர் சந்தே கப்படும்படியாக சுற்றி திரிந்ததாக அங்குள்ள கடைக்காரர் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் படி சம்பந்தப்பட்ட நபரை கண்காணித்தனர். அந்த வாலிபரை பிடித்து விசாரி த்த போது அவரிடம் சகாயராஜனுக்கு சொந்தமான கைச் சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் தக்கலை மக்காயி பாளையம் பகுதியை சேர்ந்த செய்யது முகம்மது (28) என்பதும், இறைச்சி வியா பாரி என்பதும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில், நான் மதுகுடிக்க டாஸ்மாக் கடைக்கு சென்றேன். அப்போது அருகில் உள்ள ஒரு கடையின் திண்ணையில் மது போதையில் ஒருவர் படுத்திருந் ததை பார்த்தேன். அவர் கையில் தங்க கைச்சங்கிலி அணிந்திரு ந்ததை பார்த்து அதனை திருடலாம் என முடிவு செய்தேன். அதன்படி நைசாக அதனை கையில் இருந்து பறித்து விட்டு தப்பி விட்டே ன். பின்னர் அந்த நகையை விற்க முயன்றபோது சிக்கி விட்டேன் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, தன்மீது அடிதடி வழக்கு ஒன்று கோர்ட்டில் நடந்துவருகிறது. அதற்கு செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்தேன். கைச்சங்கிலியை அடகு வைத்து கிடைக்கும் பணத்தில் வழக்கை நடத்த முடிவு செய்திருந்தேன் என்றும் கூறினார்.இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து 20 பவுன் கைச்சங்கிலியை மீட்டனர்.