search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவ்தீப்"

    • இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது.
    • முதல் இடம் பிடித்த வீரர் பெயிட் சட்ஹித் போட்டி விதிகளை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது.

    இதில் இந்திய வீரர் நவ்தீப் சிங் பங்கேற்றார். இப்போட்டியில் ஈரான் வீரர்  47.64 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்தார். இந்திய வீரர் நவ்தீப் 47.32 மீட்டர் தூரம் வீசி 2ம் இடம் பிடித்தார்.

    ஆனால், முதல் இடம் பிடித்த வீரர் போட்டி விதிகளை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், நவ்தீப் தங்கப் பதக்கம் வென்றார் என்று அறிவிக்கப்பட்டது.

    இதன் மூலம் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

    • ஆர்யா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் திமிழில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நவ்தீப்.
    • இவர் விபத்தில் சிக்கி காலை உடைத்துக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழில் ஆர்யா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமான நவ்தீப், தொடர்ந்து நெஞ்சில், அஜித்குமாருடன் ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், சீறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வீரமாதேவி படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ள நவ்தீப், சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றார்.



    இந்நிலையில் நவ்தீப் விபத்தில் சிக்கி காலை உடைத்துக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க வீட்டுக்கு சென்ற நடிகை தேஜஸ்வி அங்கு நவ்தீப் கால் முறிவுக்கு சிகிச்சை எடுத்து கட்டுப்போட்டு ஊன்றுகோல் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி நவ்தீப், விரைவில் குணமடைய வாழ்த்தி வலைதளத்தில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

    ×