என் மலர்
நீங்கள் தேடியது "நெற்குன்றம்"
போரூர்:
நெற்குன்றம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜாவீத். இவர் இரவு நண்பர் லோகேஷ் உடன் அதே பகுதி முனியப்பா நகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் அரிவாள், கத்தி, கம்பியால் ஜாவீத், லோகேஷ் ஆகிய இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்த சுந்தரி என்ற பெண்ணையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
இதில் சுந்தரிக்கும் லேசான வெட்டு விழுந்தது. தலையில் வெட்டுபட்ட ஜாவீத் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். லோகேஷ், சுந்தரி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜ், ராஜூ ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில் அதேபகுதி தனலட்சுமி நகர், அன்னம்மாள் நகர் பகுதி வாலிபர்கள் இடையே தெருக்களுக்குள் பைக் ரேஸ் செல்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை வெறி தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திஉள்ளனர். இதுதொடர்பாக நெற்குன்றம் அன்னம்மாள் நகரைச் சேர்ந்த அருண், அய்யனார், மோகன், சுபாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
போரூர்:
நெற்குன்றம் பிள்ளையார் கோவில் 7-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கடந்த 13-ந்தேதி கன்னியம்மாள் கோவில் தெரு அனகாபுத்தூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரமேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் நெற்குன்றத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் வெங்கடேசனிடம் கடந்த 4 வருடங்களாக ரமேஷ் கட்டிட வேலை செய்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனின் மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஒட்டி வந்ததும் அதை திருப்பி கேட்டபோது குடி போதையில் இருந்த இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசன் திடீரென ரமேசின் காது பகுதியில் ஓங்கி அறைந்தார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்ததும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.