என் மலர்
நீங்கள் தேடியது "பரமக்குடி"
- அரசியல் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி.
- ராமநாதபுரம் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தை யொட்டி இன்று அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தி.மு.க சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ராஜலட்சுமி, அன்வர் ராஜா, மணிகண்டன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மர் எம்.பி உட்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட் சன் தேவ ஆசீர்வாதம் மேற் பார்வையில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் தலைமையில் 3 டி.ஐ.ஜி, 19 எஸ்.பி, 61 டி.எஸ்.பி. உள்பட சுமார் 7 ஆயிரம் போலீசார் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரமக்குடி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 150 நவீன சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு 163 (1) தடை உத்தரவு கலெக்டர் உத்தரவில் அமல்படுத்தப் பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அந்தந்த வழித்தடங்களில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
- பரமக்குடி அருகே சின்ன அக்கிரமேசி கிராமத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
- முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
பரமக்குடி
பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் ரூ.29.3 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்களை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் நயினார்கோவில் ஒன்றிய சின்ன அக்கிரமேசி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், சித்தனேந்தல், பந்தப்பனேந்தல் ஆகிய கிராமங்களிலும் தலா ரூ.29.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கூட கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நயினார்கோயில் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் இளவரசி மணிமன்னன், நயினார்கோவில் ஒன்றிய துணைச்செயலாளர் திலகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பரமக்குடியில் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- இந்த நிகழ்ச்சிக்கு சபையின் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
பரமக்குடி
பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சபையின் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ராமலிங்கம் வரவேற்றனர். திரைப்பட நடிகர் ஆனந்தராஜ், அனைத்து வெள்ளாளர் மகாசபையின் நிறுவனர் டாக்டர் கார்த்திகேயன், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், உயர் மட்ட நிர்வாகி கோவிந்தராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர் இருளப்பன், உயர்மட்ட குழு நிர்வாகி முனியாண்டி, வின்சென்ட் ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, ஓ.பி.எஸ் அணி சார்பில் தர்மர் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், நகர் தலைவர் ஜமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பரமக்குடி
பரமக்குடி அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மாணவ தலைவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி (எ) பாபு தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். எமனேஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் கடமை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் அணில், ஆசிரியர் கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.