என் மலர்
நீங்கள் தேடியது "பிரபு"
- நடிகர் பிரபு நடித்துள்ள ராஜபுத்திரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
- கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பிரபு நடித்துள்ள ராஜபுத்திரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
அதில் நடிகர் பிரபு புல்லட்டில் செல்லுவது போலும் அதற்கு பின்னால் நடிகர் வெற்றி சைக்கிளில் வருவதுப் போல் காட்சி அமைந்துள்ளது. இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார்.கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபுவுடன் வெற்றி , தங்கதுரை, மன்சூர் அலிகான் மற்றும் இமான் அண்ணாச்சி நடித்துள்ளனர்.
ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Launching the First look of #Rajaputhiran, Best wishes to #Prabhu sir, @act_vetri and the entire team!@crescine24 @safi2409@KotharshaK @ayesha10035 @mahaakandh17603@OliverDeny411 @muthu_sm52655 @mohammed_rafi29@vasheer71 @PRasuldeen@rockyaug22 @act_vetri@krishnapriya829… pic.twitter.com/wD7bfpJNOa
— VijaySethupathi (@VijaySethuOffl) October 1, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு அடையாறு தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து அமைச்சர்கள் மு.பெரிய சாமிநாதன், மா.சுப்பிர மணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மயிலை த.வேலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விழாவில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அப்படத்தின் பேனரை ஒருவர் பிடித்திருந்தார். அப்போது முன்னால் வர முண்டியடித்த ஒருவரை சிவாஜியின் மகன் ராம்குமார் சரமாரியாக தாக்கி உள்ளே தள்ளினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது வழி விடாததால் ஆத்திரத்தில் அருகில் இருந்தவர்களை சிவாஜியின் மகன் ராம் குமார் கோபத்துடன் தள்ளிவிட்டு சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
- பிரேமலதா விஜயகாந்த் பத்ம விருதை பெற்றுக் கொண்டார்.
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில், இன்று (மே 9) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வாழ்த்து செய்தயில், "என் நண்பன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும், அவருக்கும் மிகவும் பிடித்தமான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளை கூறி அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.
இதே போன்று நடிகர் பிரபு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "என் அன்பு சகோதரர் கேப்டனுக்கு விருது, என் இனிய நண்பர் கேப்டனுக்கு விருது. பத்ம பூஷன் விருதை கேப்டனுக்கு கொடுத்ததில் எங்க திரையுலகம் மிகவும் சந்தோஷம் அடைகிறோம். எங்களது அன்னை இல்லம் சார்பில் அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான புரட்சி கலைஞரோட விசிறிகளுக்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள். கேப்டன் என்றைக்கும் எங்க மனுசல வாழ்ந்துட்டு இருக்காறு. கேப்டன் விஜயகாந்துக்கு இந்த விருதை அளித்த மத்திய அரசுக்கு மிகப்பெரிய நன்றி," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அடுத்ததாக இளன் இயக்கத்தில் கவின் ’ஸ்டார்’படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- பாடல் காட்சி படப்பிடிப்பு நேற்று நடந்தது. நடிகர் பிரபு படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம் நாயகன் பட்டியலில் கவின் முதன்மை இடத்தில் இருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். கவின் விஜய் டி.வி-யில் புகழ் பெற்ற கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
பின்னர், கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி யில் மட்டும் வெளியான லிஃப்ட் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
கணேஷ் கே பாபு இயக்கத்தில் அம்பேத் குமார் தயாரிப்பில் அபர்ணா தாஸ் மற்றும் கவின் நடிப்பில் வெளிவந்த படம் 'டாடா'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக இளன் இயக்கத்தில் கவின் 'ஸ்டார்'படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அடுத்து கவினின் 5-வது படமாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் வெளிவரப் போகும் படம் 'கிஸ்'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில்.பாடல் காட்சி படப்பிடிப்பு நேற்று நடந்தது. நடிகர் பிரபு படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் போது கவின், பிரபு, இயக்குநர் சதீஷ் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி பிரமாண்ட வெற்றி பெற்றது.
- ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
திரைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் சமீபத்தில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அந்த வகையில், திருமணத்திற்கு செல்ல முடியாத நடிகர் சூர்யா மணமக்களை அவர்களது வீட்டிற்கு சென்று வாழ்த்தியுள்ளார். நடிகர் பிரபு வீட்டில் ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதியை சந்தித்த நடிகர் சூர்யா மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.
- ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
- இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.
வளர்ந்து வரும் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் 'லெஜண்ட்' சரவணன் கலந்து கொண்டார். மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில், "என்றென்றும் நம் நினைவில் வாழும் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
என்றென்றும் நம் நினைவில் வாழும் நடிகர் திலகம், பத்மஶ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
— Legend Saravanan (@yoursthelegend) December 15, 2023
நம் இளைய திலகம் பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை… pic.twitter.com/IdqW2wJmxN
- வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
- இவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.
வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்தி பரவி வந்தது.
இந்நிலையில், இன்று காலை ஆதிக் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், நடிகர் விஷாலும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2009-ம் ஆண்டு குணால் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் சில காரணங்களால் இந்த உறவு விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து ஐஸ்வர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
- நடிகர் பிரபு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
- அப்போது வட மாநிலத்தில் தமிழ் படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது என்று கூறினார்.
தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான பிரபு முன்னணி நடிகர்களான விஜய், அஜித் என பலருடன் நடித்து வருகிறார். இவர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, "தென்னிந்திய படங்களை வட மாநில மக்கள் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்ப் படங்களுக்கு பெரிய மவுசு உண்டு. நான் டெல்லி, மும்பை செல்லும்போது, 'தாதா ஜி வி லவ் தமிழ் பிக்சர்ஸ்' என கூறுகின்றனர். தமிழ் படங்களுக்கு அங்கே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது" என்று கூறினார்.
விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, "நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். சமூகத்துக்கு அவர் எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவர் வருவது மகிழ்ச்சி" என்றார்.
மேலும் அவரிடம், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்களே? என்று கேட்டதற்கு, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். மற்றவர்கள் சூப்பர் ஆக்டர்ஸ். விஜய் வரட்டுமே. ரஜினியே என்ன சொன்னார், நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும் என்று தானே சொல்லி வழிவிடுகிறார். ரஜினி சூப்பர் ஸ்டார் தான். மற்றவர்கள் அந்த இடத்துக்கு வந்தால் சந்தோஷம்தான். தேவர் மகன் படம் பார்த்தீர்கள். அதில் தேவர் போனதுக்கு பிறகு அந்த இடத்தில் சின்ன தேவர் வந்து உட்காருகிறார். தம்பி அஜித்தும் இருக்கிறார். வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும்" என்று கூறினார்.
- தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபு.
- இவர் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பிரபு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரபு போன்ற திரைப்பிரபலங்கள் பலர் நடித்த 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த பிரபு
இந்நிலையில், நடிகர் பிரபு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனது குல தெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகளை செய்த பிரபு கோவில் பிரகாரத்தை சுற்றிவந்து சாமியை வழிபட்டார். இதைத்தொடர்ந்து, கோவிலில் இருந்த பக்தர்கள் பிரபுவிடம் சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சின்னதம்பி.
- இப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை குஷ்பு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. இப்படத்தின் கதாநாயகனாக பிரபு, கதாநாயகியாக குஷ்பு நடித்திருந்தனர். மேலும் ராதாரவி, மனோரமா, ராஜேஷ் குமார், உதய் பிரகாஷ், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் சின்னதம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் சினிமா வரலாற்றில் சின்னதம்பி படம் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதென நம்பவே முடியவில்லை!
என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன். என் இதயம் எப்போதும் பி.வாசு சார் மற்றும் பிரபு சாருக்காக துடிக்கும். இளையராஜா சாரின் ஆன்மாவைக் கிளப்பிய இசைக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நந்தினி, எப்போதுமே அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் நிறைந்திருப்பார்! மீண்டும் ஒருமுறை நன்றி என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.
Just can't believe it's been 32 yrs since #ChinnaThambi took tamil cinema by storm. Will always be indebted for the love showered upon me. My heart will always beat for #PVasu Sir & #Prabhu Sir. Forever grateful to #Illaiyaraja Sir for his soul stirring music n Late #KBalu for… pic.twitter.com/EDxxKwnDaN
— KhushbuSundar (@khushsundar) April 12, 2023
- சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- தற்போது நடிகர் பிரபு நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபுவுக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் லேசர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறுநீரகத்தில் கல் அடைப்பு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்த நடிகர் பிரபு, மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
கடந்தாண்டு காத்துவாக்குல ரெண்டு காதல், பொன்னியின் செல்வன், நானே வருவேன், வாரிசு போன்ற படங்களில் பிரபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு திரைப்படங்களும் வருகிற 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இந்த இரண்டு ப்படங்களை வாழ்த்தி நடிகர் பேசியுள்ளார்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர் நடித்துள்ள 'துணிவு' படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடித்துள்ள 'வாரிசு' படமும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் வாரிசு-துணிவு இரண்டு படங்களையும் நடிகர் பிரபு வாழ்த்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 'காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு சென்றிருந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு என இரண்டு படங்களுமே நன்றாக போகும். இரண்டு பேரும் நம்ம தம்பிகள்தான். இருவரின் படங்களும் வெற்றி பெறட்டும், சந்தோஷம்" என்றார்.