என் மலர்
நீங்கள் தேடியது "மதுக்கூர்"
- மதுக்கூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மதுக்கூர்:
மதுக்கூர் உதவி செயற் பொறியாளர் சங்கர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
நாளை ஆகஸ்டு 23-ந்தேதி புதன்கிழமை அன்று மதுக்கூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
இதனை முன்னிட்டு மதுக்கூர் நகர், கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 35 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஏற்றி வருவதுடன் உறுப்பினர்களுக்கு 25 ஆண்டுகளாக தொடர்ந்து 14 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது.
- உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் 598. 29 லட்சம் வைப்புகள் பெறப்பட்டும் 835 புள்ளி 15 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கும்பகோணத்தில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
T.1349 மதுக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 30.9.1957ல் பதிவு செய்யப்பட்டு 4050 உறுப்பினர்களுடன் ரூ.40.91 லட்சம் பங்கு மூலதனத்துடன் சிறப்பாக செயல்படும் சங்கம் ஆனது 35 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஏற்றி வருவதுடன் உறுப்பினர்களுக்கு 25 ஆண்டுகளாக தொடர்ந்து 14 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது.
இதனை அடுத்து நடைபெற்ற 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு மாநில அரசின் தலைமை கொரடா மூலம் பரிசு பெறப்பட்டுள்ளது.
இந்த சங்கத்தின் அனைத்து கணக்கீடுகளும் கணினி மூலம் செயல்படுவது டன் வழங்கப்படும் ரசீதுகள் அனைத்தும் கணிணி வழியில் வழங்கப்பட்டு வருகிறது.
உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் 598. 29 லட்சம் வைப்புகள் பெறப்பட்டும் 835 புள்ளி 15 லட்சம் கடன் வழங்கப்பட்டது..வாடிக்கையாளரகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்கின்ற சங்கம் அரசின் சிறப்பு திட்டங்களான கூட்டுறவு ஆங்கில மருந்தகம், பொது சேவை மையம் அக்ரோ சர்வீஸ் சென்டர் மற்றும் பல சேவை மையத்தின் மூலம் கதிர் அறுவடை இயந்திரம், டிராக்டர், டிப்பர் மற்றும் கல்டிவேட்டர் மூலம் குறைந்த செலவில் சேவை செய்ய வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த சங்கம் மதுக்கூர் சங்க தலைவர் தண்டாயுதபாணி தலைமையிலும், செயலாளர் வீரகுமார் செயல்பாட்டிலும் செயல்பட்டு வருகிறது.
- ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பாலசுப்ரமணியன் விவசாயிக்கு உரத்தை வழங்கினார்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.
மதுக்கூர்:
மதுக்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதியில் உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குறுவை விவசாயிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.2466 -க்கு ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி 25 கிலோ பொட்டாஸ் உரம் வழங்கும் நிகழ்ச்சி ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார். கூட்டுறவு வங்கி தணிக்கை அலுவலர் பாண்டியன் கலந்து கொண்டு ஆலம் பள்ளம் விவசாயிக்கு உரம் வழங்கும் ஆணையை வழங்கினார். ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பாலசுப்ரமணியன் விவசாயிக்கு உரத்தை வழங்கினார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் இளஞ்சியம் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.
- சிவசேனா மாநில துணைத்தலைவர் புலவஞ்சி சி. பி. போஸ் தென்னங்கன்றுகளை வழங்கினார்.
- காமராஜர் பாகுபாடு இன்றி கிராம் மாணவர்களும் மேன்மைப்பட கிராமங்கள்தோறும் 5000 தொடக்கப்பள்ளிகளை தொடங்கியவர்.
மதுக்கூர்:
முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சிவசேனா காவி புலிப்படை, தமிழக இந்து பரிவார் சார்பாக மதுக்கூர் பேருந்து நிலையத்தில் தென்னங்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டு அவருடைய ்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சிவசேனா மாநில துணைத்தலைவர் புலவஞ்சி சி பி போஸ் தென்னங்கன்றுகளை வழங்கினார். காமராஜர் பாகுபாடு இன்றி கிராம் மாணவர்களும் மேன்மைப்பட கிராமங்கள்தோறும் 5000 தொடக்கப்பள்ளிகளை தொடங்கியவர். அவருடைய அரசியல் பொது வாழ்க்கையில் தூய்மையாக இருந்தவர்.
அவருடைய காலகட்டங்களிலே இலவசமாக கல்வியை மட்டும் கொடுக்காமல் மதிய உணவு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி கல்வியை கற்க சொன்னவர்.
இன்று கல்வி வியாபாரம் ரீதியாக செயல்படுகிறது உடனடியாக தனியார் பள்ளிகளில் வசூல் செய்யக்கூடிய அதிக அளவு தொகை குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாதி அடிப்படையில் கணக்கெடுக்காமல் இந்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் காமராஜரின் புகழ் என்றும் எப்போதும் அவருடைய கல்வி, ஏழை எளிய மக்களுடைய சார்ந்து அவருடைய நினைவினை போற்றுகிறோம் வணங்குகிறோம்
- ஏக்கருக்கு 20 கிலோ வீதம் சணப்பை விதைப்பு செய்ய வேண்டும். சணப்பு மிக வேகமாக வளரக்கூடிய பயிர். 7 வாரத்தில் பூப்பூக்க துவங்கிவிடும்.
- மண்ணுக்கு வனப்பும் வளமும் தரும் சணப்பு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நெல் சாகுபடி துவங்குவதற்கு முன்னும் தென்னையில் ஊடுபயிராகவும் பயிரிட்டு பயன் பெறலாம்
மதுக்கூர்:
மதுக்கூர் வட்டாரத்தில் தற்பொழுது கோடை நெல் அறுவடை மற்றும் 50 சதவீத குறுவை நடவு முடிந்து உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் நெல் சாகுபடி தொடங்குவதற்கு முன் சணப்பு பயிரினை பசுந்தாள் உர பயிராக பயிரிட்டு உரச் செலவை குறைக்க முடியும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் சணப்பை விதைப்பு செய்ய வேண்டும். சணப்பு மிக வேகமாக வளரக்கூடிய பயிர். 7 வாரத்தில் பூப்பூக்க துவங்கிவிடும். இதன் ஆழமானவேர் அமைப்பினால் மண்ணுக்குள் நன்றாகவே ஊடுருவி மண்ணின் கட்டமைப்பையும் மாற்றக்கூடியது.
இப்பயிரின் முக்கியத்துவமே இது தழைச்சத்தை காற்றிலிருந்து கிரகித்து ரைசோபியம் எனும் நுண்ணுயிர் மூலம் வேர் முடிச்சுகளில் வைத்திருந்து பயிருக்கு அளிக்கக் கூடிய தன்மை உடையது. 7 வாரங்களில் இதை மண்ணில் மடக்கி உழுவதன் மூலம் ஏக்கருக்கு 5 டன் வரை தழைகளை மண்ணில் சேர்க்கும்.
ஏக்கருக்கு 40 முதல் 50 கிலோ வரை தழைச்சத்தை மண்ணில் சேர்க்கும். தழை சத்துக்காக யூரியா வாங்கி செலவழித்து பயிரிடுவதை காட்டிலும் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்து மண்ணில் மடக்கி உழுவதால் உரச் செலவை மிக எளிதாக குறைக்க முடியும். எனவே விவசாயிகள் எளிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உரச் செலவை குறைக்கவும் மண்ணுக்கு வனப்பும் வளமும் தரும் சணப்பு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நெல் சாகுபடி துவங்குவதற்கு முன்னும் தென்னையில் ஊடுபயிராகவும் பயிரிட்டு பயன் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக சிரமேல்குடி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் வாட்டாகுடி, அத்திவெட்டி, இளங்காடு மற்றும் புலவஞ்சி போன்ற பகுதிகளில் சணப்பை பயிரிட்டுள்ள விவசாய நிலத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பசுந்தாள் உரப் பயிரின் பயன்கள் குறித்து எடுத்து கூறினார்.