என் மலர்
நீங்கள் தேடியது "மீனா"
- IIFA விருது விழாவில் நடிகை மீனாவும் கலந்து கொண்டுள்ளார்.
- தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன் என மீனா பேசியுள்ளார்.
2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கிய இந்த மூன்று நாள் விழா செப்டம்பர் 29 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த விருது விழாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அழைப்பின் பேரில் நடிகை மீனாவும் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் மீனாவை பேச அழைத்தனர். அப்போது செய்தியாளர்களில் ஒருவர் அவரிடம் "இந்தியில் பேசுங்கள்" என்றார். அதைக்கேட்டு கடுப்பான மீனா, "இது இந்தி விழாவா? இந்தியில்தான் பேச வேண்டுமா? அதுக்கு எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?
தென்னிந்தியர்கள் மட்டும் தான் இங்கே வருகிறார்கள் என நினைத்தேன். தென்னிந்திய படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன்" என மீனா பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
She is very candid and very humble. She doesn't wear a celebrity hat. "Hindi ya, eppadi ennai kuputingge?" ??A very proud South Indian queen for a reason ? #Meena #IIFA #IIFAUtsavam2024 #IIFAUtsavam #IIFA2024 pic.twitter.com/rrWKvzwbcp
— Meena ᴹᴱᴱᴺᵁ (@Meena_team) September 29, 2024
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும், மணல் சேற்றால் மூழ்கின. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் வழங்கினர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர்.
அது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினோம்.
ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், ஸ்ரீப்ரியா, மணிரத்னம், குஷ்பு சுந்தர், மீனா சாகர், ஜி ஸ்கொயர், கல்யாணி பிரியதர்சன், கோமளம் சாருஹாசன், லிஸ்ஸி லட்சுமி, மைஜோ ஜார்ஜ், ஷோபனா, ரஹ்மான் ஆகியோருக்கு நன்றி. வயநாடு மக்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவின் 90 காலக்கட்டங்களில் உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா.
- கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவனான வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவின் 90 காலக்கட்டங்களில் உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா. அனைத்து பிரபல நட்சத்திர நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் இந்தி மற்றும் கன்னடம் என பல மொழிப் படங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் நடித்த எஜமான், வீரா, நாட்டாமை, நாடோடி மன்னன், முத்து, அவ்வை சண்முகி என பல திரைப்படங்கள் மெகா ஹிட்டானது.
கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவனான வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார். இச்சம்பவத்திற்கு பிறகு மீனாவின் இரண்டாம் திருமணத்தைப் பற்றிய வதந்திகள் அதிகமாக பரவி வந்தது. மீனா அவரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார், இந்த திரைப் பிரபலத்தை திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது.
அண்மையில் கூட, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரின் மகன் ஒருவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவருடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக பேசியது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது.
இந்நிலையில், நடிகை மீனா அவரது எக்ஸ் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு அதில் வதந்திகளை வெறுப்பாளர்கள் தான் உருவாக்குவார்கள், அதனை ஏமாளிகள் பகிர்வர் மற்றும் முட்டாள்கள் அதனை நம்புவர் என பதிவிட்டுள்ளார்.
இப்பதிவு சமீபத்தில் இவரைப் பற்றிய வதந்திக்கு வாயடைக்கும் விதமாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் நெப்போலியன் கடந்த 2-ந்தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- எங்களை பார்த்து அவர் கண்கலங்கியதை பார்த்து நெகிழ்ந்து போனோம்.
நெப்போலியனுக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து தெரிவித்த குஷ்பு, மீனா "கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, புதுநெல்லு புதுநாத்து" உள்பட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தர் நடிகர் நெப்போலியன். அரசியலிலும் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தார். தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் கடந்த 2-ந்தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் பலர் செல்போன் மூலமும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே நடிகை குஷ்பு, மீனா ஆகியோர் நெல்போலியனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தப்பதற்காக அமெரிக்கா சென்றனர். அவர்களை பார்த்ததும் நெப்போலியன் மகிழ்ச்சியில் கண் கலங்கினார்.
இதுபற்றி நடிகை குஷ்பு கூறியதாவது:-
திரை உலகில் நெப்போலியனுடன் நடித்த எட்டுப்பட்டி ராசா படமும் அதில் இடம் பெற்ற பாடலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவை. அதேபோல் நெப்போலியன் பல படங்களில் வில்லனாக வருவார். ஆனால் அவரது குணம் நேர்மாறானது. அவருடைய நட்பு மிகவும் இனிமையானது. அதனால்தான் அவரது நட்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரிடம் சொல்லாமலே மணி விழாவில் கலந்து சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக நேரில் சென்றோம்.
எங்களை பார்த்து அவர் கண்கலங்கியதை பார்த்து நெகிழ்ந்து போனோம். இதுதான் அவர் எங்கள் மீது வைத்துள்ள அன்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேரம் செல்ல செல்ல இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.
- நம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.
இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியை காண நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகள் முன்பு முடங்கி கிடக்கிறார்கள்.
இந்த உலக கோப்பையை பாரீசில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர் நடிகை மீனா. இன்று எல்லா வேலைகளையும் ரத்து செய்து விட்டு நடிகை மீனா தனது வீட்டில் டி.வி. முன்பு அமர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-
ரொம்ப பக்.... பக்... என்று உள்ளது. நேரம் செல்ல செல்ல இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.
இந்தியா வெல்லும் என்ற முழு நம்பிக்கையோடு நான் உலக கோப்பையை அறிமுகப்படுத்திய ஸ்டில்லையும், இந்திய அணி வெற்றி பெற்றதும் அந்த கோப்பையை வாங்குவதையும் இணைத்து நினைத்தது நடந்தது என்று வலைத்தளத்தில் பதிவிட ஒரு பட காட்சியையும் தயார் செய்து வைத்துள்ளேன். நம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் 3-ம் பாகம் விரைவில் உருவாகும் என்பதை இயக்குனர் ஜீத்து ஜோசப் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.
'திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனியும் "திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்பதை தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ''திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் என்னிடம் உள்ளது. அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் விரைவில் தயாராகும்" என்றார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மீனா
இந்நிலையில், இப்படம் குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில், ''இனிமேலும் என்னால் இதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. இது என்னை திணறடிக்கிறது; மனதை விட்டு சொல்லியே ஆக வேண்டும். எனக்குப் பொறாமையாக உள்ளது.
மீனா
பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவுக் கதாபாத்திரமான நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மீது வாழ்க்கையில் முதல்முறையாக பொறாமை கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார்.
- தமிழ், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா.
- மீனா, மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்த மலையாள படம் திரிஷ்யம். இப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்று அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. பாலியல் தொல்லை கொடுத்த பெண் போலீஸ் அதிகாரி மகனை கொலை செய்த தன்னுடைய மகளை காப்பாற்ற போராடும் தந்தையை பற்றிய கதையாக திரிஷ்யம் படம் உருவாகி இருந்தது. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.75 கோடி வசூல் செய்திருந்தது.
திரிஷ்யம் தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 2021-ல் மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷ்யம் 2-ம் பாகமும் வெளிவந்தது.
இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை படக்குழு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரிஷ்யம் 3 படத்திலும் மோகன்லால் ஜோடியாக மீனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீரென உயிரிழந்தார்.
- கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வருகிறார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 27-ஆம் தேதி மரணம் அடைந்தார். பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கி, நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும்.
ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன்." இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
— Meena Sagar (@Actressmeena16) August 13, 2022
- நடிகை மீனாவின் கணவர் சமீபத்தில் உயிரிழந்தார்.
- இவரது உடல் சென்னை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28-ந் தேதி இரவு காலமானார். 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.
மீனாவின் குடும்பம்
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது இறுதி சடங்கு முடிந்ததும் உடல் தகனம் செய்யப்பட்டது.
மேலும், வித்யாசாகரின் மரணம் குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனை கண்டிக்கும் வகையில் நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனா பதிவு
இந்நிலையில், நடிகை மீனா தற்போது இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் என் கணவரின் இறப்பினால் ஆழ்ந்த சோகத்தில் உள்ளேன். ஊடகத்தினர் இந்த சூழ்நிலையில் எங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் மேலும் தவறான செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள்.
இந்த கடினமான சூழலில் என்னுடன் இருந்த நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
- மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்
- அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார். வயது 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், மன்சூர் அலிகான், நடிகைகள் சினேகா, சங்கீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலம் மின்மயானத்தை அடைந்ததும் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
அவருடைய மனைவி மீனா இறுதி சடங்குகளை செய்தார். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
- மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
- நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார்.
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், நடிகை சினேகா உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மீனாவின் கணவர் மறைவு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நடிகை மீனாவின் கணவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சேதுபதி ஐபிஎஸ், வானத்தை போல, பெரியண்ணா, உளவுத்துறை, மரியாதை, தேவன் உள்ளிட்ட பல படங்களில் நடிகை மீனா என்னுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீனாவின் கணவர் திடீர் மரணம் என்னை மட்டுமல்ல ஓட்டு மொத்த திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. வேதனையின் விளிம்பில் இருக்கும் நடிகை மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மாசாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சேதுபதி IPS, வானத்தை போல, பெரியண்ணா, உளவுத்துறை, மரியாதை, தேவன் உள்ளிட்ட பல படங்களில் நடிகை மீனா என்னுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீனாவின் கணவர் திடீர் மரணம் என்னை மட்டுமல்ல (1-2) pic.twitter.com/dqoF4SkUm7
— Vijayakant (@iVijayakant) June 29, 2022