என் மலர்
நீங்கள் தேடியது "யுவராஜ்"
- யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
- கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை.
நாமக்கல்:
சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில்,
கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை.
யுவராஜூக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு புனையப்பட்டதாக குற்றம்சாட்டி அவரது தாயார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.
- இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கே.கே’.
- இப்படத்தின் முதல் பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரெட்டச்சுழி, சாட்டை திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த யுவராஜா 'கெளுத்தி' என்ற திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து குழந்தைகளின் வாழ்வியலை கதைக்களமாக கொண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார்.
கே.கே
கலர் காத்தாடி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு 'கே.கே' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் பேபி.சஞ்சனா மற்றும் மிதுன் ஈஸ்வர் குழந்தை நட்சத்திரங்களாய் களமிறங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கேகே
இப்பாடலை இயக்குனர் யுவராஜா எழுத, ஜித்தின் கே ரோஷன் இசையமைப்பில் விஜய் டிவி புகழ் ரிஹானா மற்றும் சர்வேஷ் பாடியுள்ளனர். மேலும், 'கே.கே' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலை 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்து செவகாட்டு சீமையிலே என்ற பாடலை பாடிய பின்னணி பாடகர் குரு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- யுவராஜ் மீது நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
- போலீசார் யுவராஜை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்று மீண்டும் சிறையில் அடைத்தனர்.
நாமக்கல்:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயுள் தண்டனை விதித்தது.
இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யுவராஜ் மீது நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதற்காக அவரை போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5-தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து போலீசார் யுவராஜை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்று மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர்.