என் மலர்
நீங்கள் தேடியது "யோகிபாபு"
- இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி சிம்புதேவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.
கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க ஒரு படகு ஓட்டும் நபருடன் கடலுக்கு தப்பிக்கின்றனர்.
இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் பெரும்பாலும் காட்சிகளை கடலில் எடுத்துள்ளனர். படத்தின் டிரைலரை பார்த்தி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது.
- நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் இல்லாத வெள்ளிக்கிழமையே இல்லை எனக் கூறலாம். அத்தனை படங்களிலும் பிசியாக நடித்து வருபவர், யோகி பாபு. நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யோகிபாபு நடிக்கும் 'கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது. இதில் நடிகர்கள் யோகி பாபு, ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சட்னி-சாம்பார் வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
- அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் யோகிபாபு. சமீபத்தில் வரும் புதிய படங்கள் பெரும்பாலும் யோகி பாபு நகைச்சுவையுடன் திரைக்கு வருகிறது.
ரஜினியின் ஜெயிலர் முதல் ஷாருக்கானுடன் ஜவான் வரை யோகி பாபு நடித்துள்ளார். திரை உலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வரும் யோகிபாபு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் சட்னி-சாம்பார் என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகியுள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலிவட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
- இதற்கிடையில் நயன்தாரா, நெற்றிக்கண், ஐரா, கொலையுதிர் காலம், அன்னபூரணி போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார்.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
மேலும் பாலிவட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜவான் திரைப்படம் நயந்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது.
இதற்கிடையில் நயன்தாரா, நெற்றிக்கண், ஐரா, கொலையுதிர் காலம், அன்னபூரணி போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார். ஆனால் அவர் சமீபத்தில் நடித்து வெளியான எந்த கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்கும் படங்கள் சரியாக ஓடவில்லை. அவர் நடிப்பில் வெளியான அன்னப்பூரணி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அடுத்ததாக நயன்தாரா மண்ணாங்கட்டி Since1960 எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ட்யூட் விக்கி இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு பூஜை உடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததை நயன்தாரா பட குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்திலும் அவர் நடித்த காமெடி காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
தமிழ் படங்களில் ஹீரோயின் இருக்கிறார்களோ இல்லையோ காமெடியன்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அதிலும் சந்தானம் கதாநாயகனாக நடிக்க சென்ற பிறகு நகைச்சுவை நடிகர்களுக்கான இடம் காலியானது. அந்த வெற்றிடத்தை நிரப்பியது யோகி பாபு. ஒரு காலக்கட்டத்தில் எந்த தமிழ் படங்கள் பார்த்தாலும் அதில் யோகி பாபு இருப்பார்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது. 'எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சிடி' பாடல் மிகவும் வைரலாகியது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்திலும் அவர் நடித்த காமெடி காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
மடோன் அஸ்வின் அறிமுக படமான மண்டேலா படத்தில் யோகிபாபு தான் ஒரு சிறந்த காமெடியன் மட்டுமில்லாமல் சிறந்த நடிகன் என்று நிருபித்தார். அதற்கடுத்து அவர் தமிழில் பலப்படங்கள் நடித்துள்ளார். ஜெயிலர், ஜவான், அயலான்,சைரன், மாவீரன், டக்கர் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.
இந்நிலையில் யோகிபாபு அடுத்தக்கட்டாமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகி உள்ளது.
யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். ஷங்கர் தயால் இதற்கு முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் படத்தை இயக்கியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஸ்ரீகாந்த் தேவா பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.
- இந்த பாடலை 'சூப்பர் சிங்கர்' ஸ்ரீநிதா மற்றும் அக்ஷரா லஷ்மி பாடியுள்ளனர்.
சமீபத்தில் தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.
'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் அக்ஷரா லஷ்மி பாடியுள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.
இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறியதாவது, "வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப் பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்" என்றார்.
பாடலை எழுதிய இயக்குனர் பவண், "இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்றார்.
- யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ‘தூக்குதுரை’.
- இப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் தற்போது 'ட்ரிப்' படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் 'தூக்குதுரை' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இனியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மூன்று விதமான காலங்களில் நடைபெறும் நிகழ்வை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மனோஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'தூக்குதுரை' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
#Thookudurai - Trailer from TOMORROW 5PM ⭐️?
— Dennis Manjunath (@dennisfilmzone) January 16, 2024
IN THEATRES JAN-25??
@opengatepicture @udhayramakrish2 @iYogiBabu @IamIneya #MottaRajendran @smahesh0603 @Bala_actor @Senrayanoffl @arvind_mvp @VinothkumarOffi @DoneChannel1 @SureshChandraa@murukku_meesaya pic.twitter.com/IfylGAggB0
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் 'G.O.A.T' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- விஜய், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் இடம்பெற்ற புதிய போஸ்டர் இணையத்தில் வைரல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat). லியோ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் கவச உடை மற்றூம் கையில் துப்பாக்கியுடன் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முன்பு வெளியான முதல் போஸ்டரில் வயதான மற்றும் இளம் தோற்றங்களில் விஜய் விமானப் படை வீரர் உடையுடன் தோன்றியிருந்தார். இதன் அடிப்படையில் இப்படம் ராணுவ பின்னணி கொண்ட படமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது. மேலும் இது காலப் பயணம் சார்ந்த திரைப்படமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
- அருள் செழியன் ’குய்கோ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
- இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் 'குய்கோ'. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'குய்கோ' படம் வெளியானதை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது.
இப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இயக்குனர் அருள் செழியனின் கதையும் அதை உருவாக்கிய விதமும் ரசிக்கும் படி இருப்பதாகவும், பொதுமக்களின் வாழ்வியலை அழகாக சொல்லி இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்கள்.
மேலும் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்து இருப்பதாகவும் கூறினார்கள். எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் வெளியாகி இருக்கும் 'குய்கோ' படத்தை பத்திரிகையாளர்கள் பாராட்டி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கிறது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக 'குய்கோ' அமைந்து இருப்பது படக்குழுவினருக்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது. பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.
- யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் குய்கோ.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அருள் செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குய்கோ. இந்த படத்தில் விதார்த், யோகிபாபு, இளவரசு, ஸ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பவராக உள்ள யோகிபாபு ஒரு பெண்ணை காதல் செய்ய மாடு மேய்ப்பவனுக்கு பெண் தர மாட்டேன் என்று பெற்றோர் கூறி விட சவுதிக்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவராக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் விதார்த், ஸ்ரீபிரியங்கா, இளவரசு, அந்தோணி தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் துர்கா பேசியதாவது:-
யோகிபாபு திரையில் பார்ப்பது போல் நேரிலும் சிரிச்சுட்டே, சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். இளவரசு அவ்வளவு ஞானத்துடன் என்னிடம் பேசினார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார். ஏ.எஸ்.டி. பிலிம்ஸ் எல்.எல்.பி. நிறுவனம் தயாரிந்த இந்த படம் நாளை (24-ந் தேதி) திரைக்கு வருகிறது.
- நடிகர் யோகிபாபு முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்துள்ளார்.
- இவர் படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட யோகிபாபு படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார். இது தொடர்பான வீடியோவையும் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வந்தார். ராஜகோபுரம் அருகில் உள்ள கம்பத்திளையனார் சன்னதியில் நடிகர் யோகி பாபு மனம் உருகி முருகரை வழிபட்டார். பின்னர் அண்ணா மலையார் உண்ணாமலை அம்மனை வழிபட்டார். இதனை தொடர்ந்து பைரவர் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த போது நடிகர் யோகி பாபுவுடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- நடிகர் யோகிபாபு பல திரைப்பிரபலங்கள் படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் 2020-ஆம் ஆண்டு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் என பல திரைப்பிரபலங்கள் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு யோகிபாபு, பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விசாகன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. யோகிபாபு தீவிர முருகர் பக்தர் என்பதால் தன் குழந்தைக்கு பரணி கார்த்திகா என பெயரிட்டுள்ளார்.
இந்நிலையில், யோகிபாபு தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார். இதில் விஜய் சேதுபதி, சூர்யா, விஷால், உதயநிதி, ஜெயம் ரவி, கார்த்தி, விஜய் வசந்த் என திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.