search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடிவேலு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு
    • இந்த வழக்கு வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே பேட்டியின் போது தெரிவித்து இருந்ததாக சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வடிவேலு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

    இதையடுத்து, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும் படி சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11 ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த வழக்கை தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
    • சிங்கமுத்துவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே பேட்டியின் போது தெரிவித்து இருந்ததாக சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வடிவேலு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை தாக்கல் செய்த பின்னரும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

    ஆனால் வழக்கு தாக்கல் செய்த பின் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்றும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

    இதையடுத்து, சிங்கமுத்துவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும் படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும் பேட்டி, வீடியோக்களை நீக்கும் படி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    • மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

     

    இந்நிலையில் நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன். என்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக வடிவேலு சித்தரித்தார்.

    நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் அவர் எதிர்கொள்ளவில்லை என ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதயநிதி ஸ்டாலினை மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் வடிவேலு சந்தித்தார்.
    • நடிகர் வடிவேலுவும், உதயநிதியும் மாமன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

    துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் வடிவேலு சந்தித்தார்.

    இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலுவும், உதயநிதியும் மாமன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பூங்கொத்து கொடுத்து வடிவேலு வாழ்த்து தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் வடிவேலு மாரீசன் படத்தில் நடித்துள்ளார்.
    • மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு மாரீசன் படத்தில் நடித்துள்ளார். மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்து மாரீசன் படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சிரித்துக்கொண்டு மக்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக நடனம் ஆடுவதுப்போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல்.
    • சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு இணையும் படம் ஒன்று உருவாகி வருவதாக செய்தி வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


    சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்திற்கு `கேங்கர்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி ரெயில்வே நிலையங்களின் எதிரே கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இந்த காட்சிகளில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் வடிவேலு அங்கு முகாமிட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் ஒரு கேரவனில் வடிவேலு தங்கியிருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் கேரவினை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர்.

    இதனை அறிந்த வடிவேலு, வேனில் இருந்து இறங்கி வெளியே வந்து முகம் கோணாமல் அனைவருடனும் தனித்தனியாக நின்று கொண்டு செல்பி எடுக்க போஸ் கொடுத்தார். பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது.
    • தமன்னா கதாநாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது.

    சுந்தர் சி இயக்கி, நடித்து வெளியான அரண்மனை 4 வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து இவர் எடுக்கும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதனிடையே சுந்தர் சி தனது அடுத்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும், இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், சுந்தர் சி இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

    மேலும், இதில் வடிவேலு மற்றும் ராஷி கண்ணா முதன்மை பாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வெங்கல் ராவுக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
    • வெங்கல் ராவுக்கு சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா ரூ.1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரமும் என உதவி வழங்கினர்.

    தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

    நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வெங்கல் ராவ். வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.

    ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன். சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்க்குள்ளாகினர்.

    இதையடுத்து, வெங்கல் ராவுக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். வெங்கல் ராவ் வெளியிட்ட வீடியோவை பார்த்த சிம்பு, தனது உதவியாளரை நேரில் அனுப்பி ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார். உதவி பெற்றுக்கொண்ட வெங்கல் ராவ் நடிகர் சிம்புவுக்கு நன்றியை தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா ரூ.1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரமும் என உதவி வழங்கினர்.

    இந்நிலையில், நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு வழங்கியுள்ளார். வெங்கல் ராவை போனில் தொடர்பு கொண்டு பேசிய வடிவேலு அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக, வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர்கள் மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யமாட்டார் என பலரும் அவரை விமர்சித்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெங்கல் ராவுக்கு அவர் உதவி செய்துள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியது ஜெமினி திரைப்படம்
    • இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பபை பெற்றது. படத்தின் பாடல்களும் செம ஹிட் ஆனது.

    படம் வெளியாகி 22 வருடங்களான நிலையில், ஜெமினி பட போஸில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் "என்மேல் அன்பு பொழியும் எல்லோருக்கும் மிக்க நன்றி. சுவாரசியமான அப்டேட் இன்னும் சில தினங்களில் எனி கெஸ்சஸ்?" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதன்மூலம், ஜெமினி படம் ரீ-ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளது என்றும், வரும் ஏப்ரல் 17ம் தேதி இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏற்கனவே பட்ட சூட்டால் சுதாரித்து கொண்டு அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து நழுவிவிட்டார்.
    • கருணாசை தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட்டுக்கும் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக வலம் வந்தவர். 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் அவரது துரதிருஷ்டம் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இதனால் வடிவேலுவின் சிரிப்பும் அடங்கிப் போனது. சினிமா வாய்ப்புகள் அரிதான நிலையில் தனது 2-வது இன்னிங்சை மாமன்னன் படத்தின் மூலம் தொடங்கினார். அமைச்சர் உதயநிதியுடன் நடித்த அந்த படத்தில் மாமன்னன் பாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து அவரது 2-வது இன்னிங்ஸ் விறுவிறுப்பானது.

    இந்த நிலையில் இந்த தேர்தலில் அவரை பிரசாரத்துக்கு அழைத்தனர். ஆனால் ஏற்கனவே பட்ட சூட்டால் சுதாரித்து கொண்டு அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து நழுவிவிட்டார்.

    அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்ய நடிகர்-நடிகைகள் அதிகம் இருப்பதால் தி.மு.க.வும் திரை நட்சத்திரங்களை அதிக அளவில் எதிர்பார்த்தது.

    இந்நிலையில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இதையடுத்து வடிவேலுக்கு பதிலாக கருணாசை பயன்படுத்த தி.மு.க. முடிவு செய்தது. அதற்கு கருணாசும் ஒத்துக்கொண்டார். தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலில் 33-வது இடத்தில் கருணாஸ் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரை 10 நாட்கள் பிரசாரம் செய்யும்படி தி.மு.க. மேலிடம் அறிவித் துள்ளது.

    கருணாசை தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட்டுக்கும் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் 13 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இந்த பயண பட்டியலை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

    • 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
    • இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார்

    மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது.

    விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் சிங் இன் தி ரெயின். வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.

    மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை.

    இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் நடிக்க மாட்டார்களா என்று ஏக்கம் ரசிகர்களுக்கு இப்போதும் உண்டு.

    இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு "லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்" என பெயரிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூடிய விரைவிலேயே படகுழுவினரால் அறிவிக்கப்படும் என நம்பபடுகிறது. தற்போது வடிவேலு ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து மாரீசன் எனும் படத்தில் நடித்து வருகிறார். பிரபு தேவா தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×