என் மலர்
நீங்கள் தேடியது "வறுவல்"
- குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும்.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
செட்டிநாடு மசாலா தூள் செய்ய
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
மிளகு - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு ப்ரை செய்ய
பேபி உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 2
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைத்து கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்துகொள்ளவும். செட்டிநாடு மசாலா தூள் தயார்.
* அடுத்து பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கடுகு, பெருங்காய தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த சிறிய உருளைக்கிழங்கு, உப்பு, செட்டிநாடு மசாலா தூள் சேர்த்து உருளைக்கிழங்கு மசாலா தூளுடன் நன்கு கலக்கும் வரை வதக்கவும்.
* இப்போது சூப்பரான செட்டிநாடு உருளைக்கிழங்கு ப்ரை தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சாம்பார், தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 250 கிராம்
துருவிய தேங்காய் - கால் கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* சேனைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவிக்கொள்ளவும்.
* சேனைக்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சாம்பார் தூள் சேர்த்து சில நொடிகள் வறுத்து, வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து, சிறிது உப்பைத் தூவி நன்கு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
* கிழங்குடன் மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், அதில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கிரீன் சிக்கன் டிக்கா சூப்பராக இருக்கும்.
- இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
புதினா - 2 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - பாதி
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.
* சிக்கனுடன் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊற வைக்கவும்.
* ஊறிய சிக்கனை மைக்ரோவேவ் ஓவனில் கிரில் செய்து எடுக்கவும்.
* மைக்ரோவேவ் ஓவன் இல்லையெனில், பேனில் நெய் விட்டு, மிதமான சூட்டில் சிக்கனை போட்டு வேக விட்டு எடுக்கவும்.
* சுவையான கிரீன் சிக்கன் டிக்கா ரெடி.
- குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
துண்டு மீன் - 1/2 கிலோ
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
மீனை நன்றாக சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைக்கவும்.
கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி, உப்பு, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பிசறி அரைமணி நேரம் வரை ஊற வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
இப்போது சூடான மீன் மிளகு வறுவல் ரெடி.
- மீனை விதவிதமாக செய்து சாப்பிடலாம்.
- புது விதமான எளிதான மீன் வறுவல் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ
சிறிய வெங்காயம் - 6
மல்லி - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 10
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
எலுமிச்சை - 1
செய்முறை
மீனை நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் சோம்பு, சீரகம், மிளகு வர மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மீன் வருவளுக்கு தேவையான மசாலா இப்பொழுது ரெடியாகி விட்டது.
அரைத்த மசாலாவில் எலுச்சை சாறு சேர்த்து அதில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா கலந்து மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மொறு மொறு இடித்து அரைத்த சுவையான மீன் வறுவல் ரெடி.
- இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
ஈரல் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 5
மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஈரல் கலவையை சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொழுது தான் ஈரல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும்.
பின்னர் மீதமுள்ள மிளகு தூளை தூவி கரண்டி போட்டு கிளற வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
கடைசியாக அதன் மீது கொத்தமல்லித்தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.
- குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மீன், தேங்காய் சேர்த்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துண்டு மீன் - 250 கிராம்
சோளமாவு - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி
மிளகு பொடி - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.
அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.