என் மலர்
நீங்கள் தேடியது "விவாகரத்து"
- மனு மீதான விசாரணைக்காக இருவரும் இரண்டாவது முறையாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
- சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்காக இருவரும் இரண்டாவது முறையாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது, ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியிடையே சமரச பேச்சுவார்த்தை முடிவடையவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, விவாகரத்து வழக்கு தொடர்பாக சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் மறுவிசாரணை 18-ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- துணை பாடகியாக பணியாற்றும் மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
- விவாகரத்து முடிவு குறித்து முதல் முறையாக ஆடியோ மூலம் சாய்ரா பானு விளக்கம் அளித்தார்.
இந்த ஆண்டில் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் காதலை பகிர்ந்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த மாதம் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார்.
இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விட்டது என்றும், இந்த கடினமான காலக்கட்டத்தில் மக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையேயான 29 ஆண்டு கால திருமண வாழ்வு முறிந்துள்ளது. எப்போதுமே சினிமா பிரபலங்கள் விவாகரத்து முடிவில் இருக்கும் சமயம் சண்டை, சச்சரவு, தகராறு, மோதல் என அரசல் புரசலாக ஏதாவது ஒரு தகவல் வெளியாகும். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையே இதுவரை எந்த சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாக யாருமே அறியாத நிலையில், திடீரென சாய்ரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பியிருந்த நிலையில், முடிவை எட்டியிருக்கிறது திருமண வாழ்க்கை என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக பதிவிட்டு இருந்தார். மேலும் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு அவரிடம் பல வருடங்களாக துணை பாடகியாக பணியாற்றும் மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் கூறுகையில், "என் அப்பா ஒரு லெஜண்ட். இத்தனை வருடங்களில் அவர் இசைக்கு அளித்த பங்களிப்பிற்காக மட்டுமல்ல, அன்பு, மரியாதை, தகுதி அடிப்படையிலும் அவ்வாறு அழைக்கப்படுகிறார். கண்மூடித்தனமான பொய்களையும் வதந்திகளையும் பார்க்கும் போது மனமே நொறுங்கி போகிறது. ஒருவரின் வாழ்க்கை குறித்து பேசும் போது உண்மை மற்றும் மரியாதை குறித்தும் நாம் கவனம் கொள்ள வேண்டும். பொய் தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றார்.
இதனை அடுத்து விவாகரத்து முடிவு குறித்து முதல் முறையாக ஆடியோ மூலம் சாய்ரா பானு விளக்கம் அளித்தார். அதில், நாங்கள் இன்னும் விவாகரத்து முடிவை அறிவிக்கவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். சென்னை வந்தபிறகு தான் விவாகரத்து குறித்து பேசி முடிவு செய்வோம். ஏர்.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- 24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார்.
- வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டனர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதுல் மீதான வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகினர். அவர்கள் மூன்று நாட்களுக்குள் போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டில் பெங்களூரு போலீஸ் நேற்று முன் தினம் நோட்டீஸ் ஒட்டியது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவின் குருகிராமில் இருந்த நிகிதாவையும், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் இருந்த அவரது தாய் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைக்கு அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகமாகவே இருப்பதாக தனது பதிவில் குற்றம் சாட்டிய அதுல் சுபாஷ்,
நான் எவ்வளவு கடினமாக உழைத்து, என் வேலையில் சிறந்து விளங்குகிறேனோ, அவ்வளவு அதிகமாக நானும் என் குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுகிறோம், மிரட்டி பணம் பறிக்கப்படுகிறோம், மேலும் இதை ஒட்டுமொத்த சட்ட அமைப்பும் ஊக்குவிக்கிறது.
இப்போது, நான் போனதால், பணமும் இருக்காது, என் வயதான பெற்றோரையும், என் சகோதரனையும் துன்புறுத்த எந்த காரணமும் இருக்காது என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மும்ராவில் 25 வயது மனைவி வசித்து வரும் நிலையில் அவரது 31 வயது கணவர் குர்லா பகுதியில் வேலை செய்கிறார்
- கணவனின் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக மும்ப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மனைவி தனியாக வாக்கிங் செல்வதால் ஆத்திரமடைந்த கணவன் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் மும்ரா பகுதியில் 25 வயது மனைவி வசித்து வரும் நிலையில் அவரது 31 வயது கணவர் குர்லா நகரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மனைவி அதிகாலையில் தனியான நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது.
எனவே அவரது கணவன் கடந்த செவ்வாய்கிழமை இரவு, தனது மாமனாரை அழைத்து தனியாக வாக்கிங் செல்வதை காரணம் காட்டி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார். அவர் தொலைபேசியில் மூன்று முறை "தலாக்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இது இப்போது இந்தியச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும்.
எனவே கணவனின் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக மும்ப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பம்பாய் திருமணங்கள் சட்டம் மற்றும் முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முத்தலாக் சொன்ன கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
- திருமண தகராறு வழக்குகளில் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
பெங்களூரு போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
எனவே நிகிதா சிங்கானியா குடும்பத்தினர் எங்கிருந்தாலும் 3 நாட்களுக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் என உத்தரப் பிரதேசம் சென்ற பெங்களூரு போலீஸ் அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
அந்த நோட்டீஸில், கிடைத்த ஆதாரங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையிலும் சம்பவ சூழ்நிலை காரணமாக உங்களிடம் விசாரணை செய்யவேண்டியது அவசியமாக உள்ளது.
எனவே நீங்கள் எங்கிருந்தாலும் பெங்களூரில் உள்ள விசாரணை அதிகாரி முன் இன்னும் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
#WATCH | Techie dies by suicide in Bengaluru | Jaunpur, Uttar Pradesh: Bengaluru Police paste notice outside the residence of the wife of Atul Subhash, the techie who died by suicide."There are reasonable grounds to interrogate you to ascertain the facts and circumstances. You… pic.twitter.com/oIg0uHBRiY
— ANI (@ANI) December 13, 2024
இதற்கிடையே டிசம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றம், தங்கள் கணவர்களுக்கு எதிராக பெண்கள் தாக்கல் செய்யும் திருமண தகராறு வழக்குகளில் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து எச்சரித்தது.
செவ்வாயன்று நடைபெற்ற வேறு ஒரு விவாகரத்து வழக்கில், நிரந்தர ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய எட்டு அளவுகோல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.
- மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
- கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "விவாகரத்து செய்யத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் குடும்ப நலநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தைக்கு இன்று நேரில் ஆஜராகினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை ஷோபித்தா துலிப்பா - வை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார் அண்ணன் நாக சைதன்யா.
- ஓவியக்கலைஞரான ஜைனப்பும், அகிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நாகார்ஜுனா. இவரது முதல் மனைவி லட்சுமி. அவரை விவாகரத்து செய்த பின்னர் நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நாக சைதன்யா [38 வயது]. இரண்டாவது மனைவியான அமலாவுக்கு பிறந்தவர் அகில் அக்கினேனி [30 வயது]. இருவருமே தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக தடம் பதித்துள்ளனர்.
அண்ணன் நாக சைதன்யாவுக்கு நடிகை சமந்தாவுடன் திருமணம் ஆகி பின் விவாகரத்து ஆனது. தற்போது நடிகை ஷோபித்தா துலிப்பா - வை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார் அண்ணன் நாக சைதன்யா.
இந்நிலையில் நாக சைத்னயா திருமண வேலைகளுக்கு மத்தியில் தம்பி அகில் அக்கினேனிக்கும் நேற்று சிம்பிளாக நிச்சயத்தர்தம் செய்து வைத்துள்ளார் அப்பா நாகார்ஜுனா. அதன்படி அகில் நீண்ட காலமாக காதலித்து வந்த ஜைனப் ரவ்ஜீ என்ற பெண்ணை கரம் பிடிக்கிறார்.
இஸ்லாமியப் பெண்ணான ஜைனப், மும்பை தொழிலதிபரின் மகள் ஆவார். ஓவியக்கலைஞரான ஜைனப்பும், அகிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயமே நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
We are thrilled to announce the engagement of our son, @AkhilAkkineni8, to our daughter in law to be Zainab Ravdjee! We couldn't be happier to welcome Zainab into our family. Please join us to congratulate the young couple and wish them a lifetime filled with love, joy, and… pic.twitter.com/5KM7BU00bz
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) November 26, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அவரிடம் பல வருடங்களாக துணை பாடகியாக பணியாற்றும் மோகினி டேவும், தனது கணவரை பிரிவதாக அறிவித்தார்.
- உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரகுமான் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டிருந்தார்.
இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு கடந்த செவ்வாய்கிழமை இரவு அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார். இதன் மூலம் 29 வருட திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து அறிவிப்பு வெளியான அன்றே அவரிடம் பல வருடங்களாக துணை பாடகியாக பணியாற்றும் மோகினி டேவும், தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இதனால் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் எழுந்தது.
இதனிடையே தனக்கு எதிரான தவறான செய்திகளை உடனடியாக நீக்குமாறு யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனைத்தொர்ந்து உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரகுமான் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள துணைப் பாடகி மோகினி டே - வும் இந்த சர்ச்சை குறித்து விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், 'எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். எனது வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது மகளுக்கு எனது வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
என் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன. அவை உண்மை கிடையாது. இந்த வதந்திகள் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள்" என்று மோகினி டே தெரிவித்துள்ளார்
- நான் பிறந்தவுடன் என் அம்மா [ஜெயா பச்சன்] நடிப்பதை நிறுத்திவிட்டார்
- எனது வீட்டை பொறுத்தவரை நான் அதிஷ்டசாலி
சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது என்பது டிரண்ட் ஆகி வருகிறது. மிகவும் நெருக்கமாக அறியப்பட்ட ஸ்டார் தம்பதிகள் திடுதிப்பென விவாகரத்து அறிவித்து பிரிந்துவிடுகிறார்கள். தனுஷ், ஜெயம் ரவி தொடங்கி தற்போது ஏர்ஆர் ரகுமான் வரை லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
இங்கு இப்படி என்றால், அதேபோல் பாலிவுட்டில் ஸ்டார் ஜோடிகள் இதோ பிரிகிறார்கள், அதோ பிரிகிறார்கள் என ஊடகங்களே விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி வருகின்றன. அப்படி விவாகரத்து வதந்திக்கு ஆளான ஜோடிதான் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடி.
இவர்களுக்கு 7 ஆம் கிளாஸ் படிக்கும் ஆராத்யா என்ற மகளும் உளளார். ஐஸ்வர்யா இருக்கும் போட்டோவில் அபிஷேக் இல்லை, இருவரும் தனித்தனியாக நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என மீடியா துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஏஆர் ரகுமான் விவாகரத்து குறித்து திரை வட்டாரங்களில் டாக் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அபிஷேக் பச்சன் தனது மனைவிக்கு ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்.
செய்தி நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது,
நான் பிறந்தவுடன் என் அம்மா [ஜெயா பச்சன்] நடிப்பதை நிறுத்திவிட்டார், ஏனென்றால் அவர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்பினார். அப்பா [அமிதாப் பச்சன்] வீட்டில் இல்லாதபோது ஒரு வெற்றிடத்தை நாங்கள் ஒருபோதும் உணரவில்லை. என்று அவர் கூறினார்.
தொடர்ந்து ,மனைவி ஐஸ்வர்யா குறித்து பேசிய அபிஷேக், எனது வீட்டை பொறுத்தவரை நான் அதிஷ்டசாலி. நான் வெளியில் பட வேலையாக செல்லும்போது ஐஸ்வர்யா வீட்டில் இருந்து ஆராத்யாவை கவனித்துக் கொள்கிறார். அதற்கு அவருக்கு மனமுவந்து நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 21 வயது மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
- மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட்
இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஏர்.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் அவர்களுடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இந்த பிரிவு தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் தந்தை - தாய் பற்றி பரவி வரும் அவதூறுகள் வருத்தம் அளிப்பதாக அவர்களது 21 வயது மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமீன் தனது பதிவில் கூறியுள்ளதாவது,
"என் தந்தை ஒரு லெஜெண்ட். திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் மட்டுமல்ல, இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட். ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதை பார்க்கும்போது மனமுடைகிறது.
ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை மதித்து அதனைக் காக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
- இருவரும் மிகவும் உண்மையானவர்கள்.
இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு செவ்வாய்கிழமை இரவு அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார். இதன் மூலம் 29 வருட திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.
இதனை தொடர்ந்து முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பியிருந்த நிலையில், முடிவை எட்டியிருக்கிறது திருமண வாழ்க்கை என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து அறிவிப்பு வெளியான அன்றே அவரிடம் பல வருடங்களாக துணை பாடகியாக பணியாற்றும் மோகினி டேவும், தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இதனால் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மை அல்ல என்று ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா கூறியுள்ளார். மேலும், சாய்ராவும், ஏ.ஆர்.ரகுமானும் தாங்களாகவே இந்த முடிவை எடுத்துள்ளனர். அது ஒரு இணக்கமான விவாகரத்து. இருவரும் மிகவும் உண்மையானவர்கள். இந்த முடிவை எளிதாக எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
- 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
இதனிடையே ஏ.ஆர்.ரகுமானின் சொத்துமதிப்பு ரூ.1728 கோடி முதல் ரூ.2100 கோடி வரை இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், இசை நிகழ்ச்சிகளில் ஒரு மணிநேரம் பாடல் பாடுவதற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.