என் மலர்
தொழில்நுட்பம்
- ஐபோன் SE 4 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போன்களில் ஒன்றாக இருக்கும்
- ஃபியூஷன் கேமரா தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கலாம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் SE 4 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் "குடும்பத்தின் புதிய உறுப்பினரைச் சந்திக்கத் தயாராகுங்கள். புதன்கிழமை, பிப்ரவரி 19. #AppleLaunch" என்று பதிவிட்டுள்ளார்.
ஐபோன் SE 4 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போன்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அதன் அம்சங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதுதொடர்பாக அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
சிப்செட்:
ஐபோன் SE 4 , ஐபோன் 16 இல் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த 3nm ப்ராசசர் A18 சிப்செட்டைக் கொண்டிருக்கும். இதன்மூலம், தேவைப்படும் பயன்பாடுகள் மற்றும் கேம்களை எளிதாகக் கையாள முடியும். கூடுதலாக, SE சீரிஸில் முதல் முறையாக மேம்பட்ட AI அம்சங்களுடன் ஆப்பிள் நுண்ணறிவு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
டிஸ்ப்ளே
ஐபோன் SE 4, ஐபோன் 14 போன்ற முந்தைய மாடல்களைப் போலவே, 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம்.
டைனமிக் ஐலேண்ட் க்கு பதிலாக நாட்ச் - முறை இதில் இருக்கலாம். மேம்பட்ட பாதுகாப்பிற்காக முந்தைய டச் ஐடி மாற்றியமைக்கப்பட்டு, இதில் ஃபேஸ் ஐடி முறை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பில்ட் டிசைன்:
ஐபோன் SE 4, ஐபோன் 14 ஐப் போலவே தட்டையான பக்கவாட்டு அலுமினியம் மற்றும் கண்ணாடி கட்டுமானத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கேமரா:
ஐபோன் SE 4, ஃபியூஷன் கேமரா தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கலாம். இதில் அல்ட்ரா வைடு லென்ஸ் இல்லாவிட்டாலும், மேம்பட்ட புகைப்படம் எடுப்பதற்கு 2x ஆப்டிகல் ஜூம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பேட்டரி:
A18 சிப்செட் மூலம், ஐபோன் SE 4 இல் சிறந்த பேட்டரி ஆயுளை எதிர்பார்க்கலாம்.
- இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
- 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் கிடைக்கும்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வசதியை வழங்கி வருகிறது.
பல்வேறு நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்டுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்பதில் ஸ்பேஸ் எக்ஸ் தாமதிப்பதால் ஸ்டார்லிங்க் சேவைகான ஒப்புதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்டை நாடான பூடானில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகத்தையும், 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகத்தையும் வழங்கும் அன்லிமிடெட் டேட்டாவை உள்ளடக்கிய மாதாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.
இதற்கான கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,167 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
- சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
- ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமாக எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த டிரம்ப் அரசின் கீழ் அரசு செயல்திறன் துறை [DODGE] தலைவராக உள்ளார்.
அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. பிந்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் யுஸ் - எய்ட் அமைப்பின் நிதியை DODGE ஆலோசனையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.
இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது. சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.
ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு நேற்று அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்துள்ளது.
ஆனால் இதற்கு சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சாம் ஆல்ட்மேன், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

- ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட இருப்பதாக தகவல்.
- நிதிநிலையை திட்டமிடவும் முடிவு.
மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் ஆகும். இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி இருப்பதாகவும், இன்று (பிப்ரவரி 10) பணிநீக்கம் தொடர்பான நோட்டீஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளை சீர்படுத்தவும், எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதென மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் இந்த ஆண்டுக்கான நிதிநிலையை திட்டமிடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் கடந்த ஜனவரி மாதத்தில் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் சரியாக பணியாற்றாதவர்களை உடனடி பணிநீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் மெட்டா நிறுவனத்தின் முடிவால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
- LSA (உரிமம் பெற்ற சேவை பகுதி) அடிப்படையிலான திட்டத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
- முதலில் '0' என்ற எண், அடுத்து SDCA குறியீடு எண், மூன்றாவதாக சந்தாதாரர் எண் ஆகியவற்றை முறையே உள்ளீடு செய்ய வேண்டும்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், லேண்ட் லைன் டெலிபோன்களில் STD CODE பயன்பாட்டை நிறுத்த அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதற்கு பதிலாக செல்போன்களை போலவே 10 டிஜிட் எண் அமைப்பை லேண்ட் லைனிலும் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய SDCA- அடிப்படையிலான (STD எண் அடிப்படையிலான) எண் திட்டத்திலிருந்து LSA (உரிமம் பெற்ற சேவை பகுதி) அடிப்படையிலான 10-டிஜிட் CLOSED எண் திட்டத்திற்கு மாறும் டிராய்-இன் இந்த பரிந்துரை பரிசீலனையில் உள்ளது.
இந்த முறை மூலம் லோக்கல் கால் உட்பட முதலில் '0' என்ற எண், அடுத்து SDCA குறியீடு எண், மூன்றாவதாக சந்தாதாரர் எண் ஆகியவற்றை முறையே உள்ளீடு செய்து போன் செய்ய வேண்டும்
ஒரு தொலைத்தொடர்பு வட்டம் அல்லது உரிமம் பெற்ற சேவைப் பகுதி (LSA) பொதுவாக மாநில அளவிலான பகுதி அல்லது பெரிய பெருநகரப் பகுதியைக் குறிக்கிறது. LSA- அடிப்படையிலான 10 டிஜிட் எண் முறை இடையூறு மற்றும் தாமதத்தை குறைத்து நீண்டகால சேவையை வழங்க உதவும் என்று டிராய் தெரிவித்துள்ளது.
சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் தற்போதைய தொலைபேசி எண்களில் எந்த மாற்றமும் இருக்காது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு ஆறு மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும்.
- இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.
- OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படும்.
ஆண்ட்ராய்டு - Android 12, 12 12L, 13, 14, 15 ஆகிய வெர்ஷன்களை கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோருக்கு அரசு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் உபயோக சாதனங்களிலும் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.
மேற்கூறிய வெர்ஷன்களை பயன்படுத்தும் ஆண்டிராய்டு சாதனங்களில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு கோளாறுகளால் தனிநபர் தகவல்களைத் திருடி தன்னிச்சையாக arbitrary code குறியீடுகளைச் செயல்படுத்தி denial of service (DoS) கட்டமைப்பு மூலம் சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.

CERT-In இன்கூற்றுப்படி அனைத்து OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிராய்டில் உள்ள, சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள்,கர்னல் எல்டிஎஸ், இமேஜினேஷன் டெக்னாலஜிஸ், மீடியாடெக், குவால்காம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளால் இந்த பாதுகாப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கான தீர்வாக, பயனர்கள், தங்கள் சாதனங்களில் பொருத்தமான அப்டேட்களை மேற்கொள்ள CERT-In அறிவுறுத்தியுள்ளது. CERT-In என்பது மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு பணிகளைக் கையாள்வதற்கான அமைப்பாகும்.

அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கிய சாட்ஜிபிடி ஏஐ உலகளவில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்தில் சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது. மற்றவற்றைக்காட்டிலும் இதை உருவாக்க வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவானதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இதனால் உலகளவில் சாட்ஜிபிடி உள்ளிட்ட அமெரிக்க ஏஐ மாடல்கள் கடும் பின்னடைவை சந்தித்தது. பிரீமியம் முறையில் சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது. இதனால் ஏஐ தொழில்துறையில் சர்வதேச அளவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு டீப்சீக் தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில் டீப்சீக் ஏஐ குறித்து ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.

தற்போது இந்தியா வருகை தந்துள்ள சாம் ஆல்ட்மேன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சீன நிறுவனமான டீப்சீக் குறைத்த விலையில் தனது ஏஐ மாடலை உருவாக்கியதாக விளம்பரப்படுத்தியது.
ஆனால் ஏஐ மாடலை 6 மில்லியன் டாலரில் உருவாக்கினார்கள் என்பதில் ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் உள்ளது. நிச்சயம் அதில் (6 மில்லியன் டாலருடன்) பல சைஃபர்கள் காணாமல் போயுள்ளது (உண்மையான செலவு மறைக்கப்பட்டுள்ளது).
அவர்களின் ஏஐ ஒரு நல்ல மாடல்தான். நாங்கள்(ஓபன் ஏஐ) அதை விட சிறந்த மாடல்களை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியியாவில் ஓபன் ஏஐ சேவை விரிவாக்கம் பற்றியும் அவர் பேசியுள்ளார்.
- கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
- பல சேவைகளை ஒரே இடத்தில இச்செயலி வழங்கவுள்ளது.
இந்திய ரெயில்வே 'ஸ்வாரெயில்' [SwaRail] என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் கிடக்கும் வண்ணம் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே தகவல் அமைப்பு (CRIS) உருவாக்கிய இந்த செயலி தற்போது பீட்டா சோதனையில் உள்ளது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். விரைவில் முறையாக செயலி மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

ஆன்லைனில் முன்பதிவில்லா டிக்கெட் புக்கிங் (UTS), ரெயில் டிக்கெட் புக்கிங், பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை பெறுவது, சீசன் பாஸ்களை நிர்வகிப்பது, PNR ஸ்டேட்டஸ் செக்கிங், இருக்கை கிடைப்பதை சரிபார்ப்பது, ஐஆர்சிடிசி கேட்டரிங் உணவு ஆர்டர், ரெயில்வே அட்டவணை விசாரணைகள், ரெயில் ரன்னிங் ஸ்டேட்டஸ், ரெயில் தேடல், பெட்டிகள் அமைப்பு, பயணச்சீட்டு, பார்சல் மற்றும் சரக்குக் கண்காணிப்பு, குறைகளைத் தீர்ப்பதற்கான ரெயில் மடாட் சேவை உள்ளிட்ட பல சேவைகளை ஒரே இடத்தில இச்செயலி வழங்கவுள்ளது.

இதனால் இதற்கென ஏற்கனேவே தனித்தனியே இருக்கும் செயலிகளை போனில் வைத்திருக்க வேண்டிய அவசியம் குறைவதால் போனில் இடம் மிச்சமாகும். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த சேவைகள் மேலும் ஸ்வாரெயில் செயலியில் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
- அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ [யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்] டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன. இந்நிலையில் நாளை [பிப்ரவரி 1] முதல் பலரின் யுபிஐ ஐடி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் [@,#, * உள்ளிட்ட] சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட யுபிஐ ஐடிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஏற்கப்படாது என நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா[NPCI] அறிக்கை வெளியிட்டுள்ளது.
எண்ணெழுத்து [0-9] மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடிகள் மட்டுமே செயல்படும் என கூறப்பட்டுள்ளது. சிறப்பு எழுத்துக்கள் உள்ள ஐடிகள் பிளாக் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதையும், பாதுகாப்பை மேம்படுவதும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று NPCI அறிவுறுத்தியுள்ளது.
என்பிசிஐ தரவுகளின்படி, டிசம்பர் 2024 இல் 16.73 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது நவம்பரின் பதிவான 15.48 பில்லியன் பரிவர்த்தனைகளைவிட விட 8% அதிகமாகும்.
- சிறப்பாக செயல்பட்டதாக அலிபாபா தெரிவித்துள்ளது.
- தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை சரிய செய்தது.
சீனாவை சேர்ந்த அலிபாபா தனது ஏ.ஐ. மாடல் Qwen2.5 Max-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏ.ஐ. மாடல் தற்போது அதிக பிரபலமாக இருக்கும் டீப்சீக் ஏ.ஐ., ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் GPT-4o மற்றும் மெட்டா நிறுவனத்தின் Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயல்பட்டது என அலிபாபா தெரிவித்துள்ளது.
இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "Qwen 2.5-Max ஏ.ஐ. மாடல் GPT-4o, DeepSeek-V3 மற்றும் Llama-3.1-405B ஐ விட சிறப்பாக செயல்படுகிறது" என்று கூறியுள்ளது.
சர்வதேச ஏ.ஐ. தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மாடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், அலிபாபா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், டீப்சீக் நிறுவனத்தின் R1 ஏ.ஐ. மாடல் சிலிகான் வேலியை ஆட்டம் காண செய்ததோடு, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை சரிய செய்தது.
டீப்சீக்-இன் ஏ.ஐ. மாடல் அதிவேகமாக பிரபலம் அடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் வகையில் அலிபாபாவின் Qwen 2.5 Max ஏ.ஐ. மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- இந்த தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL) நாடு முழுவதும் ஒரே நேரத்தை கண்க்கிட NavIC ஐ பயன்படுத்தும்.
- பிப்ரவரி 14-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது
நாடு முழுவதும் Indian Standard Time (IST) நேரத்தை கட்டாயமாக்கி மத்திய அரசு புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு விதிகள் குறித்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது
இந்த புதிய வரைவு விதிகள் அதிகாரப்பூர்வ, வர்த்தக, நிதி, நிர்வாகம், சட்ட ஒப்பந்தங்கள் என அனைத்து விதமான பயன்பாடுகளிலும் Indian Standard Time -யை மட்டுமே பின்பற்ற வலியுறுத்துகிறது.
Indian Standard Time -யை தவிர பிற நேர திட்டங்களைப் பின்பற்றுவதற்கு இந்த விதிகளின்கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
நாடு முழுவதும் ஒரே நேரக் குறிப்புகளை வழங்குவதற்காக தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL), இந்திய விண்மீன்கள் நேவிகேஷன் அமைப்புடன் [Navigation with Indian Constellation system] (NavIC) உடன் இணைக்கட உள்ளது.
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் அமைந்துள்ள இந்த தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL) நாடு முழுவதும் ஒரே நேரத்தை கண்க்கிட NavIC ஐ பயன்படுத்தும்.

அதன்மூலம் பெறப்பட்ட நேர தரவுகளை அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர் மற்றும் கௌஹாத்தியில் உள்ள நான்கு மையங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்புகள் வழியாக அனுப்பும். அனுப்பப்படும் தரவுகளின் துல்லியத்தை கணக்கிட இந்த மையங்களில் அணு கடிகாரங்கள் [ ATOMIC CLOCK ] நிறுவப்படும்.
அணு கடிகாரங்கள் என்பது அணுக்களின் அசைவுகளை[அலைவுகள் - Oscillation] பயன்படுத்தி நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கருவியாகும். உதாரணமாக சீசியம்-133 ன் அணுக்கள் நொடிக்கு பல கோடி முறை அசைகின்றன. இந்த எண்ணிக்கை ஒரே மாதிரி இருக்கின்றன. இதை கணக்கிடுவதன் மூலம் துல்லியமாக நேரம் கிடைக்கிறது.

எனவே துல்லியமான நேரம் காட்டும் அளவுகோலாக அணுக் கடிகாரம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒரே நாடு ஒரே நேர திட்டத்தை செயல்படுத்த இந்த அணு கடிகாரம் பயன்படுத்தப்பட உள்ளது.
சாமீபத்திய வளர்ச்சியாக அணு கடிகாரத்தை விட துல்லியமான அணுக்கரு [Atomic nucleus] கடிகாரத்தை பயன்படுத்த சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன்மூலம் பிரபஞ்சத்திலுள்ள கரும்பொருள் (Dark matter) போன்ற பல்வேறு மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும். கோடிக்கணக்கான ஆண்டுகள் ஓடினாலும் ஒரு நொடியைக்கூட தவறவிடாத கைக்கடிகாரமாக அது இருக்கும்.
- இந்தியாவில் செயல்பட GMPCS உரிமம் (செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமம்) தேவை.
- ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும்.
இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்திய தொலைத்தொடர்பு சேவை சந்தையில் ஸ்டார்லிங்க் விரைவில் இணைய உள்ளது.
இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்க டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு விதித்திருந்தது.
அதன்படி பயனர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும் தேசிய பாதுகாப்புகளுக்குத் தேவைப்படும்போது புலனாய்வு அமைப்புகளுக்கு ஸ்டார்லிங்க்-ன் அணுகலை வழங்கவும் வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இன்னும் ஸ்டார்லிங்க் எழுத்துப்பூர்வமாக இதை உறுதி செய்யவில்லை என்றாலும் இந்தாண்டு இறுதிக்குள் செயற்கைக்கோள் ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நேரடியாக சாட்டிலைட் மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ஸ்டார்லிங்க் வழங்குவதால் டவர் பயன்பாடு குறையும்.
ஸ்டார்லிங்க் வருகை இந்தியாவில் கோலோச்சி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
