என் மலர்
மொபைல்ஸ்
ரூ. 7000 பட்ஜெட்டில் இவ்வளவு அம்சங்களா? விரைவில் இந்தியா வரும் புது ஸ்மார்ட்போன்
- இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா வழங்கப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்மார்ட் 8 மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதில் 13MP கேமரா மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
இதில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், இன்டராக்டிவ் மேஜிக் ரிங், யுனிசாக் டி606 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ் வழங்கப்படுகிறது. இதன் கேமராவுடன் போர்டிரெயிட் மோட் மற்றும் ஏ.ஆர். ஷாட் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடலின் பின்புறம் ரிங் எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளது. இத்துடன் 8MP செல்ஃபி கேமரா மற்றும் முன்புறம் ஃபிளாஷ் லைட் வழங்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒ.எஸ். 13, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ரெயின்போ புளூ, ஷைனி பிளாக், டிம்பர் பிளாக் மற்றும் கேலக்ஸி வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் விலை ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.