என் மலர்
மொபைல்ஸ்
மெட்டல் டிசைன் கொண்ட நார்ட் ஸ்மார்ட்போன் - லீக் ஆன புது தகவல்
- மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என தகவல்.
- 5500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இத்தாலியில் நடத்தும் நிகழ்ச்சியில் தனது புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச் அடங்கிய படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
புதிய புகைப்படத்தின் படி ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் கேமரா பகுதியை தவிர மற்ற இடங்களில் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிலஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், 6.74 இன்ச் 1.5K 2.8D கர்வ்டு AMOLED 120Hz ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, அலர்ட் ஸ்லைடர் மற்றும் 5500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.