search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    realme NARZO 70 Turbo 5G
    X

    பட்ஜெட் பிரிவில் புது நார்சோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரியல்மி

    • இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5.0 கொண்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், டிமென்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டிருக்கிறது.

    மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 14 ஜிபி விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள GT மோட், பல்வேறு முன்னணி கேம்களில் 90fps கேமிங் சப்போர்ட் வழங்குகிறது. இத்துடன் IP65 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5.0 கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படுகிறது.

    புதிய நார்சோ 70 டர்போ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும்.

    ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி மாடல் டர்போ எல்லோ, டர்போ கிரீன் மற்றும் டர்போ பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

    Next Story
    ×