என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ரூ. 7000 பட்ஜெட்டில் வேற லெவல் அம்சங்களுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்
- இந்த ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமராவுடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.
- இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் பிரிவு மாடல் ஆகும். இதில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் டிசைன், 8MP செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த பிரிவில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வசதிகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 64 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 அம்சங்கள்:
6.6 இன்ச் 1612x720 பிக்சல், HD+ ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர்
IMG PowerVR GE 8320 GPU
4 ஜி.பி. ரேம்
64 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் சார்ந்த எக்ஸ்.ஒஎஸ். 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், குவாட் ரிங் எல்.இ.டி. ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடல் டிம்பர் பிளாக், ஷைனி கோல்டு, கேலக்ஸி வைட் மற்றும் ரெயின்போ புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜனவரி 15-ம் தேதி துவங்குகிறது. இத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் பரோடா வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.