search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    பட்ஜெட் விலையில் புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்த லாவா
    X

    பட்ஜெட் விலையில் புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்த லாவா

    • புதிய லாவா இயர்பட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
    • இந்த இயர்பட்ஸ் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

    லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. சமீபத்தில் லாவா யுவா 4 ஸ்மார்ட்போனினை என்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது இந்த இயர்பட்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    லாவா ப்ரோபட்ஸ் T24 மாடல் இன்-இயர் ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 10mm டிரைவர்கள், குவாட் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் டூயல் டோன் டிசைன், அதிநவீன ப்ளூடூத் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 150 நிமிடங்களுக்கு பிளேடைம் வழங்குகிறது. டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி, 35ms லோ லேடன்ஸி மோட், அதிகபட்சம் 45 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.

    புதிய லாவா ப்ரோபட்ஸ் T24 மாடல் ஹெர்ப் கிரீன், வெனம் பிளாக், டோப் புளூ, ட்ரிப்பி மகௌ மற்றும் ஸ்னேக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. லாவா ப்ரோபட்ஸ் T24 மாடலின் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை நாளை (டிசம்பர் 6) துவங்குகிறது.

    Next Story
    ×