search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    5ஜி சப்போர்ட் கொண்ட ரெட்மி Pad ப்ரோ - அசத்தல் டீசர் வெளியீடு
    X

    5ஜி சப்போர்ட் கொண்ட ரெட்மி Pad ப்ரோ - அசத்தல் டீசர் வெளியீடு

    • மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே க்ளிக்-இல் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி பேட் ப்ரோ 5ஜி வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ரெட்மி பேட் ப்ரோ வைபை வெர்ஷன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பிறகு மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த வரிசையில், புதிய டேப்லெட்-இன் 5ஜி மாடல் அறிமுகமாக இருக்கிறது. புதிய வெர்ஷன் வெளியீடு குறித்து சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் அறிவித்தார். இதோடு, புதிய டேப்லெட் கொண்டு சியோமி மற்றும் ரெட்மி போன் பயன்படுத்துவோர் அவற்றின் ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே க்ளிக்-இல் கனெக்ட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர்களில் ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு உடன் பாதுகாப்பு கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. 5ஜி சப்போர்ட் தவிர இந்த டேப்லெட்-இன் டிசைன், இதர அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.

    ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த டேப்லெட் ரெட்மி K70 அல்ட்ரா மாடலுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×