என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
அறிந்து கொள்ளுங்கள்
![உங்கள் கனவில் நாங்களும் இணைகிறோம்.. பிரதமர் மோடியை சந்தித்த டிம் குக் நெகிழ்ச்சி! உங்கள் கனவில் நாங்களும் இணைகிறோம்.. பிரதமர் மோடியை சந்தித்த டிம் குக் நெகிழ்ச்சி!](https://media.maalaimalar.com/h-upload/2023/04/19/1868532-tim-cook-modi-meet.webp)
உங்கள் கனவில் நாங்களும் இணைகிறோம்.. பிரதமர் மோடியை சந்தித்த டிம் குக் நெகிழ்ச்சி!
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
- முன்னதாக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ்-ஐ டிம் குக் சந்தித்தார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படுவதை ஒட்டி ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியின் 'தொழில்நுட்பத்தில் சாதகமான தாக்கம்' என்ற நோக்கத்தை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து முதலீடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க நன்றி. இந்தியாவின் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய சாதகமான தாக்கம் என்ற உங்களின் கனவை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். கல்வியில் துவங்கி, டெவலப்பர்கள் முதல் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் வரை , நாங்கள் நாடு முழுக்க வளர்ச்சி பெறவும், முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்," என்று டிம் குக் தனது டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
"உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பல்வேறு துறை சார்ந்த கருத்துக்களை பகிர்ந்தது மற்றும் இந்தியாவில் அரங்கேறி வரும் தொழில்நுட்பம் சார்ந்த பரிமாற்றங்கள் குறித்து பேசியதும் மகிழ்ச்சியாக உள்ளது," என்று டிம் குக் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ்-ஐ சந்தித்தார்.
சமீபத்தில் தான் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் மும்பையில் திறக்கப்பட்டது. மும்பை விற்பனை மையத்தை திறந்து வைத்த டிம் குக் சில நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை கடைக்குள் வரவேற்றார்.
இதே போன்று டெல்லி விற்பனை மையத்திற்கும் டிம் குக் வாடிக்கையாளர்களை வரவேற்பார் என கூறப்படுகிறது. டெல்லியின் செலக்ட் சிட்டி மாலில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது விற்பனை மையம் நாளை திறக்கப்பட இருக்கிறது.